கிரெடிட் கார்டினால் நாம் அடைவது நன்மையா அல்லது தீமையா??


கிரெடிட் கார்டு பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது எனலாம், அந்த அளவிற்கு அது அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இது அரசு மற்றும் தனியார் வங்கிகளால் மக்களுக்கு வழங்கப்படும் ஒரு சேவை ஆகும். கிரெடிட் கார்டை சரியாக உபயோகித்து பயனடைவோரும் உண்டு, அதே நேரம் வாழ்க்கையை தொலைத்தவர்களும் உண்டு. இங்கு நாம் கிரெடிட் கார்டினால் விளையும் நன்மை, மற்றும் தீமை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கிரெடிட் கார்டின் நன்மைகள்:

 

1. நீங்கள் மாத வருமானம் பெறக்கூடிய நபராக இருந்தால் மாத இறுதிக்குள் நம் சம்பளம் தீர்ந்து விடும், அத்தகைய சூழலில் பெட்ரோல், மொபைல் ரிச்சார்ஜ் மற்றும் மளிகை போன்ற அத்தியாவசிய தேவைகளை கிரெடிட் கார்டு மூலம் பூர்த்தி செய்து கொள்ளலாம்.
2. ஆன்லைன் மூலம் வாங்கும் பொருட்களுக்கு தவணை முறை வழங்கப்படுகிறது.
3. மேலும் நீங்கள் உபயோகப்படுத்தும் திறனை பொறுத்து Reward points மற்றும் cash back போன்ற ஆபர்கள் வழங்கப்படுகிறது.
4. டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் மொத்தமாக பொருட்களை வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் வாங்க முடியும், நேரடியாக 5000, 10000 ரூபாய்க்கு வீட்டுக்கு தேவையானவற்றை வாங்குவது இயலாத காரியம். கிரெடிட் கார்டு மூலம் வாங்கும் பொது அந்த பணத்தை கெட்ட 30 முதல் 40 நாள் வரை அவகாசம் கிடைக்கிறது.
5. அவசர கால கட்டங்களில் மருத்துவ செலவோ அல்லது இதர சூழ்நிலைகளில் பிறரை எதிர் பார்க்க அவசியமில்லை.
6. இப்போதைய சூழலில் பணத்தை பையிலோ, பேன்ட் பாக்கெட்டிலோ வைத்து செல்வது பாதுகாப்பற்றது, இது போன்ற வேளையில் கிரெடிட் கார்டு பயனுள்ளதாக உள்ளது.
7. வெளியூர் பயணம் போன்ற சூழ்நிலையில் பணம் கையில் வைத்துக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.


கிரெடிட் கார்டின் தீமைகள்:


 

1 .கிரெடிட் கார்டு உள்ள தைரியத்தில் தேவையற்ற அனாவசிய பொருட்களை வாங்கி குவிக்கின்றனர்.
2. சரியான தேதிக்குள் பணம் கட்ட தவறுவதால் பெனால்டி, மற்றும் வட்டி காட்டும் நிலைக்கு ஆளாகின்றனர்.
3. நண்பர்கள், தெரிந்தவர்கள் என பிறருக்கு உதவ முற்பட்டு அவர்களால் ஏமாற்றப்பட இவர்கள் மாட்டிக்கொள்கிறார்கள்.
4. ஒன்றிற்கு மேற்பட்ட கார்டுகளை பயன்படுத்துவார்கள் எந்த கார்டை பயன்படுத்தினோம் என்பதனை மறந்து பெனால்டி மற்றும் வட்டி கட்ட வேண்டிய நிலைக்கு ஆளாகின்றனர்.
5. இதர கடன் வசதிகளை ஒப்பிடும்போது கிரெடிட் கார்டின் வட்டி விகிதம் அதிகமாகும். நீங்கள் பணம் கட்ட தவறும்போது 14% மேல் வட்டி கணக்கிடப்படுகிறது.

நாம் நினைவில் கொள்ள வேண்டியவை:
 

கிரெடிட் கார்டில் நாம் பயன்படுத்தும் பணமானது, நாம் குறிப்பிட்ட நாட்களில் திரும்ப கட்ட வேண்டியது அவசியம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு பயன்படுத்த வேண்டும். நம்முடைய வருமானம் எவ்வளவு என்பதை அறிந்து நமது சக்திக்கு உட்பட்டு பயன்படுத்தினால் கிரிடிட் கார்டு ஒரு பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை....   

Post a Comment

0 Comments