ஆன்லைனில் மின்சார கட்டணத்தை செலுத்துவது எப்படி??
தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் நமக்கு எந்த ஒரு வேலையை  செய்யவும் நேரம் இல்லை.
அந்த வகையில் வரிசையில் நின்று, நேரம் காலம் பார்த்து, பெனால்டி கட்டணம் எதுவும் வந்து விடாமல் மின்சார கட்டணத்தை செலுத்துவதென்பது கொஞ்சம் கஷ்டமான காரியமாகவே உள்ளது. அனால் தற்போது ஆன்லைன் மூலமாகவே உங்களது மின்சார கட்டணத்தை வசதிகள் வந்து விட்டது. பலருக்கு அது பற்றி இன்னமும் தெரிவதில்லை. தெரிந்தாலும் எவ்வாறு அதை பயன்படுத்துவது என்று தெரிவதில்லை. அதை பற்றி விளக்கவே நாம் இந்த பதிவை இங்கே வைக்கிறோம்.

தேவையானவை:

1. பேங்க் அக்கௌன்ட் ( Bank account )
2. ATM CARD
3. கிரெடிட் கார்டு ( CREDIT CARD ) குறிப்பு: ATM கார்டு இருந்தால் CREDIT CARD அவசியமில்லை
4. நெட் பாங்கிங் ( NET BANKING )

நீங்கள் ஆன்லைனில் பணம் கட்ட கணினியை பயன்படுத்தினாலும் சரி, அல்லது மொபைல் பயந்ததினாலும் சரி, இந்த லிங்க்கை பயன்படுத்தவும் TNEB Online Payment

கிளிக் செய்த பிறகு இந்த பகுதி வரும், இதில் நீங்கள் கட்டாயம் ஒரு முறை பதிவு செய்ய வேண்டும்.

இதில் NEW USER என்பதை கிளிக் செய்யவும்.
இவ்வாறு அது ஓபன் ஆகும்

இதில் SELECT என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
இதில் Existing service connection number என்பதை தேர்வு செய்யவும்

பிறகு region என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
இதில் உங்கள் ஊருடைய reginal code ஐ தேர்வே செய்யவும்


பிறகு உங்கள் மின்சார கட்டண அட்டையில் உள்ள consumer number உதாரணத்திற்கு ( 0000 - 000 - 1570 )
பதிவு செய்யவும்
பதிவு செய்த பிறகு check detail என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும்
உங்களுடைய வீட்டு உருமையாளருடைய பெயர் மற்றும் விலாசம் ஆகியவற்றை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.பிறகு confirm என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்க
அடுத்ததாக இந்த பகுதியில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்
பூர்த்தி செய்து submit என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், நீங்கள் பூர்த்தி பதிவு செய்த ஈமெயில் முகவரிக்கு ஒரு confirmation mail வரும். அந்த லிங்கின் மூலம் லாகின் செய்யவும்
லாகின் செய்தல் உங்களுக்கு இவ்வாறு ஓபன் ஆகும். இதில் quick pay என்பதை தேர்வு செய்யவும்
பிறகு உங்களது regional code மற்றும் consumer number ஐ பதிவு செய்து submit கொடுக்கவும்.
இதன் பிறகு உங்கள் மிசார கட்டணம் எவ்வளவு என்பது அதில் காண்பிக்கும். அதில் நமது
payment processorஐ நாமே தேர்வு சேது கொள்ளலாம். அதாவது ATM Card or Credit card இதில் எதை பயன்படுத்தி நாம் செலுத்த விரும்புகிறோமோ அதை தேர்வு செய்ய வேண்டும். பிறகு 16 இலக்க நம்பரை பதிவிட்டு ENTER செய்தால் நமது நம்பருக்கு ஒரு OTP NUMBER வரும். அதை இந்த பகுதியில் பதிவு செய்து விட்டால் மின்சார கட்டணம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து எடுத்து கொள்ளப்படும். இதில் வேறேதும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் கமெண்டில் பதிவு செய்யவும்...  நன்றி....
   

Post a Comment

0 Comments