தேநீர் பற்றிய 10 சுவாரசியமான விஷயங்கள்தேநீர் என்பது நமது வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகி விட்டது. பல பேருக்கு இதை குடிக்க விட்டால் எந்த வேலையும் நடக்காது. பல உழைப்பாளிகள் மற்றும் யாரும் இல்லாமல் சாலையில் வீதியையே வீடாகக்கொண்ட பல மக்களின் உணவாக இது உள்ளது. அப்படிப்பட்ட தேநீரின் சில சுவாரசியமான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

உருவான கதை:

 ஷென்னொங் என்னும் சீனப் பேரரசன், ஒரு நாள் சுடுநீர் அருந்திக்கொண்டு இருந்தானாம். அப்போது, காற்று வீச அருகிலிருந்த மரமொன்றிலிருந்து சில இலைகள் அவன் அருந்திக்கொண்டு இருந்த நீருள் விழுந்தன. அப்பொழுது அந்நீரின் நிறம் மாறுவதை கண்ட அவன் அதன் மனத்தையும், அதில் கிடைக்கும் உற்சாகத்தையும் கண்டு வியந்துள்ளான்.தேநீர் பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல்கள்
1. உலகில் நீருக்கு அடுத்த படியாக மக்களால் பருகப்படும் பானம்  தேநீர் ஆகும்.

2. இதன் துவக்கம் கி.மு 2737 என்று வரலாற்றில் அறியப்படுகிறது.

3. வடகிழக்கு இந்தியா, வடக்கு பர்மா, தென் மேற்கு சீனா, திபெத்து ஆகிய பகுதியிலேயே இது தோன்றியதாக கூறப்படுகிறது.

4. வருடாந்திர தேநீர் திருவிழா ஜப்பானில் கொணடாடப்பட்டு வருகிறது.

5. உலகின் அதிகப்படியான தேயிலை உற்பத்தியில் சீனா முதலிடமும், இந்தியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.
6. சீன சமுதாயத்தில் மரியாதையின் குறியீடாக பெரியவர்களுக்கு தேநீர் வழங்குவது கருதப்படுகிறது.

7. பிள்ளைகள் தவறு செய்து விட்டால் பெற்றோருக்கு தேநீர் ஊற்றிக்கொடுத்து மன்னிப்பு கேட்பது சீனர் பண்பாட்டில் உள்ளது.

8. சாதாரண ஐஸ் டீயில் சீஸ் கலந்து " ஹே டீ" என்ற பெயரில் சீனாவில் இது மிகவும் பிரபலம். ஒரு சில இடங்களில் பல மணி நேரம் காத்திருந்து இதை பெறுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

9. சீனாவில் தேநீர் அருந்துவது சிறப்பு வாய்ந்த கலையாக பார்க்கப்படுகிறது.

10. உலகின் அதிக அளவு தேநீரை பயன்படுத்தும் நாட்டின் பட்டியலில் துருக்கி உள்ளது. அதாவது சராசரியாக 3.16 கிலோ கிராம்.


Post a Comment

0 Comments