கடலில் வாழும் டாப் 10 அரக்கர்கள்1. நீலத்திமிங்கலம்  
கடலில் மட்டுமில்லாது உலகின் மிகப்பெரிய உயிரினம் நீலத்திமிங்கலம் ஆகும். இது சுமார் 30 மீட்டர் வரை வளரக்கூடியது, அதிகபட்சம் 170 டன் எடை இருக்கும்.  இதுவரை கண்டறியப்பட்டதில் மிகப்பெரியது 1947ல் South Shetland தீவில் காணப்பட்ட பெண் திமிங்கலம் ஆகும். அதன் நீளம் சுமார் 33.6 மீட்டர் ( 110 அடி ), எடை 181 டன். மேலும் இவை மூர்கத்தனமில்லாத சாதுவான விலங்கு.

2.  பின் வேல் ( Fin Whale )
Fin Whale, இது மற்றுமொரு திமிங்கல வகையை சார்ந்தது. இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய உயிரினம் ஆகும். இதன் அதிக பட்ச நீளம் சுமார் 27.3 மீட்டர் ( 89.5 அடி ), எடை அதிகபட்சம் 110 டன் வரை இருக்கும். இது மிகவும் வேகமாக நீந்தக்கூடியது. ஸ்க்விட் மற்றும் மீன்களை இது உணவாக உட்கொள்கிறது.

3. திமிங்கல சுறா
சுறா இனங்களில் மிகப்பெரியது இந்த இனம் தான். இதன் நீளம் சுமார் 12.5 மீட்டர் ( 42 அடி ), 21 டன் வரை எடை இருக்கலாம். இது மிகப்பெரிய வாயை கொண்டது  பெரும்பாலும் நீரின் மேற்பரப்பில் சுற்றித்திரியும் இவை அரிதாக நீருக்கு அடியில் 21°C தட்ப வெப்ப நிலையில் நீந்திச்செல்லும்.

4. Sperm Whaleகடலில் வாழும் உயிரினங்களில் மிகப்பெரிய பற்களை கொண்ட உயிரினம் இது. 16 முதல் 20 மீட்டர் நீளம் வரை வளரும். உலகிலேயே மிகப்பெரிய மூளையை கொண்ட உயிரினம் இது தான். இதன் மூளையானது மனிதனின் மூளையை விட ஐந்து மடங்கு பெரியது, 60 வருடம் வரை இது வாழக்கூடியது.

5. பெரிய திருக்கை மீன் (Manta Ray)திருக்கை வகை மீன்களில் இது தான்  மிகப்பெரியது, அதிகபட்சம் 7 மீட்டர் நீளமும் 3 டன் எடை வரை இருக்கும். 24 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தக்கூடியது.

6. கில்லர் வேல் ( Killer Whale )


Killer Whale தான் டால்பின் இனங்களில் மிகப்பெரிய உயிரினம். 6 முதல் 8 மீட்டர் நீளமும், 6 டன் வரை
எடை இருக்கும். இதனுடைய வலுவான உடலமைப்பில் காரணமாக 54 கிலோ மீட்டர் வேகத்தில் நீந்தக்கூடியது.

7. வெள்ளை சுறா ( Great White Shark )வெள்ளை சுறா பாலூட்டி வகையை சேர்ந்தது, 12 முதல் 15 அடி வரை வளரக்கூடியது. இந்த வகை சுறா தான் மனிதர்களை மிகவும் அச்சுறுத்தக்கூடியது.

8. Giant oarfishஇந்த மீன் bony வகை மீன்களில் மிக நீளமாக வளரக்கூடியது, மேலும் இது கடல் மட்டத்திலிருந்து 1000 அடி ஆழத்தில் வாழக்கூடிய அறிய வகை மீனினம் ஆகும். 1996 ல் பிடிபட்ட இந்த மீன் சுமார் 23 அடி மேளம் கொண்டதாக இருந்தது.

9. ராட்சச ஆக்டொபஸ் ( Giant Pacific Octopus)இது கடலின் 2000 மீட்டர் ஆழத்தில் வாழக்கூடியது, 20 அடி நீளமும் 70 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கும். நிறமாற்றம், ரசாயன கருப்பு நீரை பீய்ச்சி அடித்தல் போன்ற  பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.

10. Basking Shark


திமிங்கல சுறாவுக்கு அடுத்ததாக பெரிய வகை சுறா மீன் இதுவாகும். சராசரியாக 6 முதல் 8 மீட்டர் நீளமும் 5 டன் எடையும் கொண்டது. அதிகப்படியான வேட்டையாடுதலின் காரணமாக இதன் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.Post a Comment

0 Comments