நம் உடலில் நடக்கும் 10 விஷயங்கள்


அன்பர்களே, இயற்கை நமக்கு பரிசளித்துள்ள பல செல்வங்களை நாம் உணருவதில்லை. நம்மிடம் இல்லாதவற்றை பற்றியே யோசிக்கும் நாம், நமக்கு அருளப்பட்டுள்ள செல்வங்களை பற்றி அறிந்து கொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நாம் காண இருப்பது நம் உடல் உறுப்புகள்.

உடல் உறுப்புகளில் சில ஊனங்களை அடைந்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் சக்தி என்ன, அதன் மகத்துவம் என்ன என்று, அப்படி விஞ்ஞான ரீதியில் நிரூபிக்கப்பட்ட சில உண்மை கண்டுபிடிப்புகளை நாம் இங்கு காணலாம்.

1. கண்கள்:

நமது கண்களானது வெவ்வேறு விதமான ஒரு கோடி நிறங்களை நமக்கு    பிரித்து காண்பிக்கும் சக்தி கொண்டது. நமது கண்களை ஒரு கேமராவாக எடுத்துக்கொண்டால் அதன் பிக்சல் எவ்வளவு தெரியுமா??
576 மெகா பிக்சல். சிலரது மரபணு காரணமாக அவர்களால் கூடுதலாக 10 லட்சம் நிறங்களை காண முடியும்.

2. மனிதனின் காதுகள்:


செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் என்பது உண்மை. அமெரிக்க பேராசிரியர் SETH HOROWITZ  என்பவர் தனது ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார். அதன் படி மனிதர்கள் செவிடனாக இருப்பதை விட, குருடனாக இருக்க விரும்புவதாக ஆய்வறிக்கை சொல்கிறது. அதில் அவர் கூறியதாவது மனிதனின் பார்வை திறனை விட செவித்திறன் முக்கியமானது, செவித்திறனானது பார்வைத்திறனை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது. ஆரோக்யமான மனிதனின் கேட்கும் திறனானது நொடிக்கு 20 முதல் 20,000 அதிர்வுகள். காது கேட்கும் திறனை இழந்தவர்களுக்கு தான் தெரியும் அதன் அருமை.

3.உடம்பில் உள்ள நரம்புகள்:


 மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும். மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

4. இதயம்:

இதயமானது  24 மணிநேரத்தில் சுமார் 14 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை 1.68 கோடி மைல் நீள ரத்தகுழாய்களின் வழியே கொண்டு செலுத்திகிறது. இது உண்டாகுக்ம் சக்தியானது  80 ஆயிரம் கிலோ எடை உள்ள ஒரு பொருளை பூமியில் இருந்து ஓரடி உயரம் தூக்க போதுமானது. இதயம் ஒரு நாளில் லட்சம் தடவை சுருங்கி விரிகிறது.

5.இதயத் துடிப்பு:


ஒருவரது வாழ்நாளில் இதயம் சுமார் 200 கோடி தடவை துடிக்கிறது. அப்பொழுது 50 கோடி லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சுகின்றது. உறங்கும் போதும் கூட மணிக்கு 340 லிட்டர் ரத்தத்தை பாய்ச்சுகிறது. வளர்ச்சி அடைந்த ஒரு ஆண் ஓய்வில் இருக்கும் போது அவனது நாடித்துடிப்பு நிமிடத்துக்கு 70 முதல் 72 வரை இருக்கும். அதுவே முழுமையாக வளர்ந்த பெண் என்றால் 78 முதல் 82 வரை அவளது நாடித்துடிப்பு இருக்கும். கடுமையான உடல்பயிற்சி செய்யும் போது இது 200 வரை உயரும்.

6. மனிதனின் மூளை:


     மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது. நமது மூளையின் அளவு சுமார் 1 1/4 கிலோ ஆகும். மூளை தான் தலைப்பகுதியில் எடை அதிகமான பகுதியாகும்.

7. சருமம் (தோல்): 


மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எதுவென்றால், அது சருமம் தான். வளர்ந்த ஒரு ஆணின் சருமத்தின் பரப்பளவு 20 சதுர அடி இருக்கும். இதுவே பெண் என்றால் 17 சதுர அடி இருக்கும். ஒவ்வொரு இரவிலும் தூங்கும் பொழுது, உடல் சுமார் 8 மில்லி மீட்டர் வளர்ச்சி அடைகிறது. பகலில் இந்த உடல் வளர்ச்சி சுருங்கி விடும். உட்காரும் பொழுதும், நிற்கும் பொழுதும், முதுகில் உள்ள குறுத்தெலும்புகள் அழுத்தப்பட்டு சுருக்கம் ஏற்படுகிறது. தூங்கும் பொழுது அழுத்தம் இல்லாததால் நீண்டு வளர்கிறது.

8. ரோமங்கள் (முடி):

 சராசரியாக உடலில் 50 லட்சம் ரோமங்கள் இருக்கும். உடலில் கருத்த ரோமமுடையவர்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் விரல்களில் உட்புறம் ஆகிய இடங்களில் மட்டுமே ரோமம் வளர்வதில்லை.

9. மனித உடலின் வளர்ச்சி:

ஒரு மனிதன் தன்  25 வயதில் முழுவளர்ச்சி பெற்றுவிடுகிறான். 40 வயதுக்கு மேல் வளர்ச்சி நின்றுவிடுவது மட்டுமல்லாமல் மெதுவாக குறையத்தொடங்குகிறது . 10 ஆண்டுகளுக்கு 4/10 அங்குலம் என்ற அளவில் உயரம் குறைய தொடங்கும். நாம் பகலை விட இரவில் தான் அதிகம் வளர்கிறோம். குழந்தைகள் கோடை காலத்தில் மழைகாலத்தை விட வேகமாக வளர்கிறார்கள்.10. நாக்கு:

மனித உடலில் உள்ள நாக்கு எலும்புகளே  இல்லாமல் தானாக அசையும் உறுப்பு மற்றும் இவை சுவையை அறிய சுமார் 10000 சுவை மொட்டுகளை பெற்றுள்ளன.இவற்றின் நீளம் சுமார் 10 செ.மீ ஆகும்.
Post a Comment

0 Comments