ஆதார் எங்கு அவசியம்? எங்கு அவசியமில்லை??

நீண்ட காலமாக ஆதார் எதற்கு கட்டாயம், எதற்கு கட்டாயமில்லை என்ற குளறுபடி தொடர்ந்து கொண்டே உள்ளது. வங்கி, பள்ளி, மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆதார் கார்டை முக்கிய ஆவணமாக குறிப்பிடும் வேளையில் இந்த பிரச்சனைகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது உச்ச நீதி மன்றம்.

அரசின் சலுகைகள் மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் மூலம் பலன் பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தவிர எந்தவொரு தனியார் நிறுவனமோ, வங்கியோ அல்லது பள்ளிகளிலோ ஆதார் ஆவணங்களை கொடுக்க அவசியமில்லை.
மொபைல் சிம் கார்டுகளுக்கு ஆதார் ஆவணங்களை கேட்பது சட்ட விரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு தனியார் வங்கியும் இனி ஆதார் ஆவணங்களை கேட்க அனுமதியில்லை. மேலும் வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்க வேண்டியது இனி கட்டாயமில்லை.

பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க இனி ஆதார் கட்டாயம் கிடையாது, மேலும் நீட், மற்றும் சிபிஎஸ்சி தேர்வுகள் எழுதவும் ஆதார் ஆவணங்களை கொடுக்கத்தேவையில்லை.

எதற்கு கட்டாயம்??


பான் கார்டு போலிகளை தவிர்க்க பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போலி பான் கார்டுகள்  தவிர்க்க  முடியும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அரசு திட்டங்கள் மற்றும் அரசு மானியங்களை பெற ஆதார் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும்.

வருமான வரி செலுத்த ஆதார் கட்டாயம் என்ற முந்தய சட்டம் தொடரும்.

அரசு விதிகளின் படி ஆதார் செல்லும், அனால் அது ஒரு தனி மனித உரிமையை பறிக்க கூடாது என்று உச்ச நீதி மன்றம் தெரிவித்துள்ளது.
Post a Comment

0 Comments