மனித படைப்பின் உச்ச வேகங்கள் பற்றி தெரியுமா ??
பொதுவாகவே வேகம் என்ற ஒன்று எல்லோருக்குமே பிடிக்கும். அது ஒரு வாகனமாக இருக்கலாம், பறவையாக இருக்கலாம் ஏன் மனிதர்களில் கூட வேகமான நபர்களை மக்கள் விரும்புகிறார்கள்.

 அதன் அடிப்படையில் உலகில் உள்ள மனிதனால் உருவாக்கப்பட்ட அதி வேக இயந்திரங்களின்  பட்டியலைத்தான் நாம் இங்கே காண உள்ளோம்.

1. உலகின் அதிவேக இரு சக்கர வாகனம்:
கவஸாகி நிஞ்ஜா H2R (Kawasaki Ninja H2R), இந்த பைக் தான் தற்போதைய உலகின் அதி வேக இரு சக்கர வாகனம் ஆகும். இதன் உச்ச கட்ட வேகம் மணிக்கு 400 KPH ( 250 MPH ). 2016 ஆம் ஆண்டு 5 முறை உலக சாம்பியனான துருக்கியை சேர்ந்த Kenan Sofuoglu என்ற வீரரால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது.
ரேடாரோ அல்லது ஜிபிஎஸ் மூலமோ இது கண்காணிக்கப்படவில்லை, எனினும் வாகனத்தின் டாஷ்போர்டு டிஸ்பிலேவில் இது பதிவு செய்யப்பட்டது. 26 வினாடியில் 2682 மீட்டர் அவர் கடந்திருந்தார். இரண்டு வருடத்திற்கு பிறகு இதை கணக்கிட்டு இந்த பைக்கின் மூலம் 400 - 420 KPH வேகம் வரை பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது.
2. உலகின் அதிவேக கார்:ஹென்னஸ்ஸி வினாம் F5 ( Hennessey Venom F5 ), இந்த காரின் உச்ச கட்ட வேகம் 484 KPH ( 301 MPH ) நவம்பர் 1, 2017 ஆம் ஆண்டு இந்த சாதனையை நிகழ்த்தி காட்டியது இந்த கார்.
 இது 7.4 L twin-turbocharged V8 engine மற்றும் 1600 குதிரைத்திறனை வெளிப்படுத்தக்கூடிய சக்தி கொண்டது. இந்த கார் (0–400 km/h) வேகத்தை 30 விநாடிடியில் கடந்து விடும்.

3. உலகின் அதிவேக இரயில்:பிரான்ஸ் நாட்டின் டிஜிவி France TGV என்ற இரயில் தான் உலகின் அதிவேக
சக்கரத்தில் ஓடும்  இரயில்  ஆகும். 2007 ஆம் ஆண்டில் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 574.8 km/h (357.2 mph) வேகத்தை எட்டியதே இது வரை சாதனையாக உள்ளது.

4. உலகின் அதிவேக விமானம்:Air Force SR-71 Blackbird இது தான் மனிதனால் இயக்கப்பட்ட உலகின் அதிவேக விமானம் ஆகும். இது 1976 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதன் வேகம் மணிக்கு  3,530 km/h (2,193 mph). கடந்த 40 வருடங்களாக அசைக்க முடியாத தனிக்காட்டு ராஜாவாக வளம் வருகிறது.


5. உலகின் அதிவேக மிதிவண்டி:VeloX 3 என்ற மாடல் மிதி வண்டிதான் உலகின் அதி வேகா மிதி வண்டி. இது 2004 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மிதி வண்டியின் வேகம் மணிக்கு 133.78 KPH ஆகா பதிவாகியுள்ளது.

6. உலகின் அதிவேக பீரங்கி:

1942 ல் தயாரிக்கப்பட்ட M18 அதாவது “Hellcat” என அழைக்கப்படும் இந்த பீரங்கி தான் உலகின் மிக வேகமான டேங்கராக அறியப்படுகிறது. இது மணிக்கு 90 KPH வேகத்தில் செல்லக்கூடியது. மேலும் இது 9 சிலிண்டர் என்ஜினுடன் 400 HP சக்தியை வெளிப்படுத்தக்கூடியது.

7. உலகின் அதிவேக படகு:
நீர்ப்பரப்பில் அதிவேக ராஜாவாக வளம் வருவது Spirit of Australia என்னும் படகு தான். அக்டோபர் 8, 1978ல் இது பயணித்த வேகம் மணிக்கு 317.596 mph (511.11 km/h). இன்று வரை நீர்ப்பரப்பில் பதிவு செய்யப்பட அதிக பட்ச வேகம் இதுவாகும்.
 .

Post a Comment

0 Comments