NEFT, RTGS மற்றும் IMPS பற்றி தெரிந்து கொள்ளுங்கள்






நவீன உலகில் பண பரிவர்த்தனை முறைகளில் பெரிய மாற்றங்கள் வந்து விட்டன. பணம் கட்ட அல்லது எடுக்க நாம் நேரடியாக வங்கிக்கு சென்று நேரத்தை வீணாக்க வேண்டிய அவசியமில்லை. இருந்த இடத்தில இருந்தே மொபைல் மூலமாகவே இந்த தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.

அந்த வகையில் அறிமுகம் செய்யப்பட சேவைகள் தான்  இந்த NEFT, RTGS மற்றும் IMPS. இதை பற்றிய சில தகவல்களை நாம் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


RTGS ( ஆர்.டி.ஜி.எஸ்)

 

இந்த சேவை பெரிய தொகை பணப்பரிமாற்றங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. குறைந்தது 2 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட பணப்பரிமாற்றங்களுக்கு RTGS மூலமாகவே நீங்கள் பணத்தை ட்ரான்ஸபர் செய்ய முடியும். RTGS மூலம் நீங்கள் 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை பணத்தை பிற அக்கௌன்டிற்கு செலுத்தலாம். இந்த பரிவர்த்தனையை காலை 8.00 மணி முதல்  4.30 வரை செய்து கொள்ளலாம். வங்கி விடுமுறை நாட்களில் இந்த சேவையை பயன்படுத்த முடியாது.

தொகை                                                       சேவை வரி

2 லட்சம் முதல் 5 லட்சம் வரை        Rs.25 + சேவை வரி( GST )


5 லட்சம் முதல் 10 லட்சம் வரை        Rs.50 + சேவை வரி( GST )



NEFT ( நெஃப்ட )

 

NEFT மூலம் 1 ரூபாய் முதல் 10 லட்சம் வரை பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். காலை 8.00 மணி முதல் 6.30 மணி வரை நீங்கள் NEFT சேவையை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதன் மூலம் பணம் அக்கௌன்டை வந்தடைய சில மணி நேரங்கள் ஆகும். அனால் வங்கி செயல்படும் நேரம் மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த இயலும்.வங்கி விடுமுறை நாட்களில் இந்த சேவையை பயன்படுத்த முடியாது.

தொகை                                                 சேவை வரி

1 ரூபாய்  முதல் 10,000 வரை             Rs.2.50 + சேவை வரி( GST )

10,000 முதல் 2 லட்சம் வரை              Rs.5 + சேவை வரி( GST )

2 லட்சம் முதல் 10 லட்சம் வரை     Rs.25 + சேவை வரி( GST )


IMPS:

 

இந்த சேவை தான் பரிவர்தனைகளில் இறுதியாக அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இதன் மூலம் செய்யப்படும் பணப்பரிமாற்றம் உடனடியாக சென்றடையும். 24 மணிநேரமும் இந்த சேவையை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். வங்கி விடுமுறை நாட்களிலும் இந்த சேவையை பயன்படுத்த முடியும். அனால் 2 லட்சம் வரை தான் IMPS மூலம் நீங்கள் பரிவர்த்தனை செய்ய முடியும்.

தொகை                                                சேவை வரி

1 ரூபாய்  முதல் 10,000 வரை        Rs.5 + சேவை வரி( GST )

10,000 முதல் 2 லட்சம் வரை         Rs.5 + சேவை வரி( GST )

1 லட்சம் முதல் 2 லட்சம் வரை     Rs.15 + சேவை வரி( GST )


குறிப்பு: இங்கே தரப்பட்டுள்ள சேவை வரி மற்றும் சேவையயை பயன்படுத்தும் நேரங்கள் குறித்த தகவல்கள் ICICI வங்கியின் அதிகாரப்பூர்வ தகவல் ஆகும். இவை வேறு வங்கிகளோடு சிறுது மாறுபடலாம்.





Post a Comment

0 Comments