டெபிட் கார்டுக்கு ஆண்டு கட்டணம் Rs.850, ஆன்லைனில் டெபிட் கார்டு அப்ளை செய்வோர் ஜாக்கிரதை




நண்பர்களே, இந்த பதிவானது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் எண்ணத்தில் பதிவிடப்படுகிறது. மேலும் இது எனக்கு நேர்ந்த ஒரு கசப்பான அனுபவமும் கூட...

தற்போதைய சூழலில் ஏடிஎம் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தாத ஆட்களே இருக்க முடியாது. தனியார் கம்பெனி சம்பளம் முதல் அரசு தரும் சலுகைகள் வரை வங்கிமயமாகிவிட்டது. அப்படி நீங்கள் பயன்படுத்தும் ஏடிஎம் அல்லது டெபிட் கார்டுக்கு ஆண்டு சேவை வரி விதிக்கப்படுகிறது. முதலில் இதை போல் எந்த சேவை வரியும் வசூலிக்கப்படவில்லை. தற்போது வங்கி கணக்கை பயன்படுத்தும் நபர் மற்றும் அவர் பயன்படுத்தும் டெபிட் கார்டின் வகையை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சாதாரண டெபிட் கார்டுகளுக்கு ரூபாய் 200 முதல் 300 வரையும், platinum போன்ற டெபிட் கார்டுகளை ரூபாய் 750 மற்றும் GST வரி 100, ஆக மொத்தம் 850 ரூபாய் வரை கட்டணமாக விதிக்கப்படுகிறது.




கவனிக்க:
எனது டெபிட் கார்டானது சில மாதங்களுக்கு முன்பே தொலைந்து விட்டது. சில அவசர தேவைக்காக ஒரு மாதம் முன்பு தான் மொபைல் பேங்கிங் மூலமாக அப்ளை செய்தேன். அப்போது எனக்கு டெபிட் கார்டின் வகையை பற்றிய எந்த ஒரு தகவலும் இடம் பெறவில்லை. ஆனால் , எனக்கு platinum வகை டெபிட் கார்டு தரப்பட்டது. இரு தினம் முன்பு எனது வங்கி கணக்கிலிருந்து டெபிட் கார்டு ஆண்டு கட்டணமாக ரூபாய் 850 எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதை பற்றி வங்கி வாடிக்கையாளர் அதிகாரியிடம் முறையிட்ட போது அவர் கையை விரித்து விட்டார். மேலும் பிடிக்கப்பட்ட பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பில்லை எனவும் கூறி விட்டார்.




எனவே கார்டு தொலைந்து விட்டது, அல்லது புதிதாக அப்ளை செய்ய மொபைல் பேங்கிங்கை பயன்படுத்தினால் கவனமாக செயல்படுங்கள். ஒருவேளை உங்களுக்கும் இதே போல் நடக்க நேர்ந்தால் திரும்ப அந்த கார்டை மற்ற ஆன்லைனில் அப்ளை செய்ய வேண்டாம். நேரடியாக வங்கிக்கு சென்று விடுங்கள், காரணம் நீங்கள் திரும்பவும் அப்ளை செய்யவதற்காக மேற்கொண்டு 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.

 வசதியானவர்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுக்கு கூட எந்தவொரு சேவைக்கட்டணமும் விதிப்பதில்லை. ஆனால் ஏழை, மற்றும் நடுத்தர மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் டெபிட் கார்டுகளை கட்டணங்கள் விதிக்கப்டுகிறது.

Post a Comment

0 Comments