ஜனவரி 1 முதல் சிப் ( CHIP ) இல்லாத டெபிட் கார்டு வேலை செய்யாது சிப் பதிவு செய்யப்படாத டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் டிசம்பர் 31 க்குப்பிறகு வேலை செய்யாது என்ற ரிசெர்வ் வங்கியின் ஆணைப்படி இன்று முதல் அமலாக்கப்பட்டது. எனவே உங்கள் பழைய டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கவோ, அல்லது ஆர்டர் செய்யவோ முடியாது.

பாதுகாப்பு கரணம் கருதியே இந்த மாற்றம் என்று ரிசர்வ் வாங்கி தரப்பு கூறியுள்ளது. பழைய சிப் இல்லாத டெபிட் கார்டு மூலம் நிறைய பண மோசடி, திருட்டு போன்றவை அரங்கேறிவருகிறது. பழைய மாக்னடிக் டெபிட் கார்டுகள் எளிதாக நகல் எடுக்கப்பட்டு மோசடி செய்யப்படுகிறது.
எனவே, சிப் பொருத்தப்பட்ட கார்டுகளை  வினியோகிக்குமாறு ரிசர்வ் வங்கி 2015ல் ஆணையிட்டது. இதை முடிப்பதற்கான காலக்கெடு கடந்த டிசம்பர் 31 உடன்  முடிவடைந்தது . எனவே 2008 க்கு முன்னாள் விநியோகம் செய்யப்பட  டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இன்று முதல் வேலை செய்யாது.

சிம் கார்டின் சிப் போன்ற ஒன்று டெபிட் கார்டுடன் பொருத்தப்படுகிறது, இதன் மூலம் எங்கு நீங்கள் பயன்படுத்திதினாலும் OTP செய்தி மூலம் சரிபார்க்கும் வசதி ஏற்படுத்தப்பள்ளது. எனவே, சிப் பொருத்தப்பட்ட டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை உங்கள் வங்கியில் விண்ணப்பத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு எந்தவொரு தொகையும் நீங்கள் கட்டத்தேவையில்லை.

குறிப்பு : டெபிட் கார்டின் உபயோகம் தவிர அணைத்து ஆன்லைன் பரிவர்தனைகளும் தடையில்லாமல் தொடரும். 

Post a Comment

0 Comments