கடுமையான சட்டங்களை கொண்ட டாப் 10 நாடுகள்

 Title: Top 10 Countries With Strict Law and Orders

ஓர் நாட்டின் வளர்ச்சிக்கு சட்டம் ஒழுங்கு என்பது மிகவும் முக்கியம். நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் உடமைகளை பாதுகாக்கவே சட்டங்கள் வகுக்கப்படுகின்றன, பல வளர்ந்த நாடுகளின் வரலாற்றை பார்க்கும் போது அந்நாட்டின் சட்ட திட்டமானது எந்த அளவிற்கு அந்நாட்டின் வளர்ச்சிக்கு வேறாக இருந்தது என்பதை நாம் அறிய முடியும். அந்த வகையில் உலக அளவில் கடுமையான சட்டங்களை கடை பிடிக்கக்கூடிய டாப் 10 நாடுகளைப்பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்.

10. வட கொரியா ( North Korea )
இன்றளவும் கம்யூனிசத்தை பேசும் ஒரு நாடு வடகொரியா, இங்கே வெளிநாட்டினர் உள்ளே நுழைய முறையான அனுமதி கடிதம் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும். சுற்றுலா வாசிகளாக வரும் மக்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உண்டு. சட்ட விதிகளை மீறவோ, அரசிற்கு எதிராக பேசவோ அனுமதி கிடையாது.

மக்களுடைய அனைத்து செயல்பாடுகளும் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது, டிவி, ரேடியோ மற்றும் செய்தி சேன்னல்கள் அனைத்திற்கும் கட்டுப்பாடுகள் உண்டு. ஆன்லைன் பயன்பாடானது அரசின் விதிக்குட்பட்ட தளங்களை மட்டுமே நீங்கள் பயன்படுத்த இயலும், மேலும் அனைத்து இணையதள தகவல் பரிமாற்றங்களும் அரசால் கண்காணிக்கப்படுகிறது. பூங்கா போன்ற பொது இடங்களில் யாரும் தங்க கூடாது. திருமணமில்லாத உறவு இங்கு சட்டப்படி குற்றம், ஆண் மற்றும் பெண்கள் உடுத்தும் ஆடை முதல் சிகை அலங்காரம் வரை கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

9. ஜப்பான் ( Japan )
நவீன உலகில் மிகவும் வளர்ச்சியடைந்த நாடக ஜப்பான் உள்ளது. ஜப்பானியர்கள் உழைப்பிற்கும், விடாமுயற்சிக்கும் உதாரணமாக திகள்பவர்கள். அதற்கு அந்நாட்டு சட்ட திட்டங்களும் ஒரு வகையில் கரணம் எனலாம். அந்நாட்டு சட்டப்படி ஒவ்வொருவரும் மற்றொரு தனி நபரை மதிக்க வேண்டும்.

ரெயில்  மற்றும் டாக்சி போன்ற போக்குவரத்து சேவைகள் பெண்களுக்கென்று தனியாக வழங்கப்படுகிறது. பொது இடங்களில் புகை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பேருந்து பயணங்களில் பெண்கள் மற்றும் வலியவர்கள் போன்றோருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகள் அவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். புகை பிடிப்பதற்கென Smoking Area  ஒதுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தொழில் சார்ந்த நிறுவனங்களிடையே கடுமையான சட்டங்கள் கடைபிடிக்கப்படுகிறது.

8. எரித்திரியா ( Eritrea )


 

பல போர்களை கண்டு எத்தோப்பியாவில் இருந்து பிரிந்த நாடுதான் எரித்திரியா. 1993 ஆம் ஆண்டு அதிரபராக பொறுப்பேற்ற Isaias Afwerki தான் இன்றும் அதிபராக பொறுப்பில் உள்ளார்.

 நாட்டின் ஊடகம் மற்றும் அணைத்து செயல்பாடுகளும் அதிபரின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதிபர் மாளிகையின் அனுமதி பெறாமல் எந்த செய்தியும் ஊடகத்தில் ஒளிபரப்பு செய்யக்கூடாது.  கிறிஸ்துவமும், இஸ்லாமியமும் சம அளவில் உள்ள நிலையில் அரசு மக்களை பிரச்னைகளின்றி கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அரசாங்க அனுமதியில்லாமல் எந்தவொரு நபரும் அரசியல் செய்யவோ தேர்தலில் போட்டியிடவோ அனுமதியில்லை.


 7. ஈரான் ( Iran )
ஈரான் இசுலாமிய ஷரியத் சட்டம் நடைமுறையில் இருக்கும் நாடாகும். எனவே, பெண்கள் ஹிஜாப் எனும் வரம்புக்கு உட்பட்ட ஆடையுடன் தான் பொது இடங்களில் நடமாட வேண்டும். அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்வது சட்டப்படி இங்கு குற்றமாகும். மது உட்பட ஆல்கஹால் பானங்கள் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது, ஆதாரத்துடன் பிடிபட்டால் 80 கசையடிகள் தண்டனையாக வழங்கப்படும்.

 பொது இடங்களில் புகை பிடிக்க அனுமதியில்லை, மேலும் இங்கு இரவு விடுதிகள் செயல்படாது. முகநூல் மற்றும் யுடியூப் போன்ற சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடைசெய்யப்பட்டுள்ளது. சுற்றுலா வாசிகள் தகுந்த பாஸ்போர்ட் விசாவுடன் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலா செல்ல பாதுகாப்பான இடமாக இன்றளவும் ஈரான் பரிந்துரைக்கப்படுகிறது.


6. சிரியா  ( Syria )
அரசுக்கும், மக்களுக்கும் இடையே நடக்கும் உள்நாட்டுப்போரினால் சிரியா போர்க்களமாக காட்சியளிக்கிறது. தொடர்ந்து சண்டை நிலவுவதால் மொபைல், லேண்ட்லைன், இணையம் உள்ளிட்ட அணைத்து தொலைத்தொடர்பு அம்சங்களும் முடக்கப்பட்டுள்ளது. பிற நாட்டு ஊடகங்களும் உள்ளே நுழைய அனுமதிப்பதில்லை. தொடர் போர் மற்றும் சண்டை தொடர்வதால் அந்நாடு மக்கள் மற்றும் பொருளாதார ரீதியில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.5. கைனா ( Equatorial Guinea )


இங்கு உள்ள மக்கள் மற்றும் எழுதவிரு பெற அரசு உதவுவதில்லை. கல்வியறிவின் விழுக்காடு 73% இருந்து 13% ஆக குறைந்துள்ளது. புத்தக நிலையமோ, செய்தித்தாள் விநியோகமோ இந்த பகுதியில் கிடையாது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பொதுவாக அனுமதிக்கப்படுவதில்லை. டிவி மற்றும் ரேடியோ அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. வெளிநாட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டலும் மிகவும் கவனமாக கண்காணிக்கப்படுகிறார்கள். புகைப்படம் எடுக்கவோ, குறும்படம் எடுக்கவோ அனுமதியில்லை.

4. சவூதி அரேபியா (Saudi Arabia)கடுமையான சட்டங்களை கொண்ட முக்கியமான ஒரு நாடு சவூதி அரேபியா. ஷரியத் சட்டத்தை கடைபிடிக்கும் நாடுகளில் சவூதி அரசு முதன்மையானது. பெண்கள் கட்டாயம் ஹிஜாப் ஆடையுடன் தான் வெளியில் வர வேண்டும். மது அருந்துவது, மற்றும் போதை பொருட்களை பயன்படுத்துவது இங்கு பெரிய குற்றமாகும். போதை பொருள் கடத்தல் போன்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் உடனடியாக மரண தண்டனை கொடுக்கப்படுகிறது.

 சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த அனுமதி உண்டு, அதே வேளையில் அனைத்து இணையதள செயல்பாடுகளும் அரசால் கண்காணிக்கப்படுகிறது. அரசுக்கு எதிராகவோ, சமூக விரோத கருத்துக்கள் பதிவு செய்தலோ உனடடியாக கைது செய்து தண்டிக்கப்படுவார்கள்.

3. க்யூபா ( Cuba )
விடுமுறை நாட்களை மக்கள் கழிக்க விரும்பும் நாடாக க்யூபா உள்ளது. சரியான விசா மற்றும் பாஸ்போர்ட் இருந்தால் மட்டுமே சுற்றுலா வாசிகள் அனுமதிக்கப்படுவார்கள். இன்றும் க்யூபா ஒரு கம்யூனிச நாடுதான். சமூக வலைத்தளங்களிலோ அல்லது நேரடியாகவோ அரசுக்கு எதிராக விமரிசித்து சட்டப்படி குற்றமாகும். அவர்கள் உடனடியாக சிறையில் அடைக்கப்படுவார்கள்.

2. சீனா ( china )
பொருளாதார ரீதியிலும் மக்கள் தொகையிலும் மிகப்பெரும் வளர்ச்சியை சீனா எட்டியுள்ளது. அதேவேளை மிகவும் கடுமையான சட்டங்களை கடைபிடித்து வருகிறது. அனைத்து தகவல் பரிமாற்றங்களும் சீன அரசால் கண்காணிக்கப்படுகிறது.

கூகிளுடன் ஏற்பட்ட பிரச்சினையினால் சமூக வலைத்தளங்கள், யூடூப் போன்றவை முடக்கப்பட்டுள்ளது. அதே வேளை அதற்கு மாற்றாக அரசே வேறு தகவல் பரிமாற்ற சேவைகளை வழங்கி வருகிறது. மிகப்பெரிய கம்யூனிச நாடான சீனாவில் அரசுக்கு எதிராக விமர்சனம் செய்யவோ, கருத்துக்களை பதிவிடவோ அனுமதியில்லை.


1. சிங்கப்பூர் ( Singapore )

 

சிங்கப்பூர் ஒரு சிறிய நாடக இருந்தாலும் சட்டம், ஒழுங்கு மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதி வாய்ப்புகளை செய்து கொடுப்பதில் பெரிய நாடுகளோடு ஒப்பிடும் அளவிற்கு சிறப்பாக செயல்படுகிறது.

எந்தவொரு சட்ட மீறுதல் குற்றங்கள் நடந்தாலும் உடனடி அபராதம் விதிக்கப்படும். பொது இடத்தில எச்சில் துப்பினால் அபராதம், பொது இடத்தில் புகை பிடித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

மற்றவர்கள் முகம் சுளிக்கும் படி ஆபாசமாக ஆடை உடுத்தினால் உடனடி சிறை தண்டனை என சரியான சட்ட திட்டங்களால் உலக அளவில் வர்த்தக ரீதியில் உயர்ந்த ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.


Post a Comment

0 Comments