சாக்கடல் பற்றிய 10 அரிய தகவல்கள்


Title: Dead Sea Facts in Tamil

உயிரினங்கள் வாழ முடியாத ஒரு கடற்பகுதியாக சாக்கடல் அறியப்படுகிறது.
ஆனால் சாக்கடல் என்பது உண்மையில் ஒரு கடல் கிடையாது. அதைப்பற்றிய சில சுவாரசியங்கள் இதோ...

# Dead Sea அல்லது சாக்கடல் எனப்படும் இந்த நீர்ப்பரப்பானது இஸ்ரேலிலுள்ள ஜோர்டான் பகுதியில்   உள்ளது.  இது மிக அதிகப்படியான உப்புத்தன்மையைக்கொண்ட ஓர் ஏரி ஆகும்.# அதிகப்படியான உப்பு தன்மையின் காரணமாக இங்கு உயிரினங்கள் வாழ முடியாது. எனவே இது சாக்கடல் ( Dead Sea ) என அழைக்கப்படுகிறது.

# இதன் உப்புத்தன்மையானது சாதாரண கடலை விட 8.5 மடங்கு அதிகமானது. இதன் அதிகப்படியான நீர் வரத்து ஜோர்டான் ஆறு மற்றும் ஓடைகளின் வழியாக வருகிறது.

# உலகின் அமைந்துள்ள மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆழமான உப்பு நீர் ஏரி இது தான். இதன் ஆழம் சுமார் 423 மீட்டர் (1388 அடி). இதன் நீளம் 67 KM, மற்றும் அகலம் 18 கிலோ மீட்டர்.

# இந்த நீரின் அடர்த்தி மிகவும் அதிகமாக உள்ள காரணத்தினாலேயே மனிதர்கள் இதன் மேல் மூழ்காமல் அப்படியே மிதக்கின்றனர்.
# இதனால் மனிதர்க்கு எந்த ஆபத்தும் இல்லை என நீங்கள் நினைத்தால் அது தவறு, நேராக இல்லாமல் தலை குப்புற நீங்கள் விழ நேர்ந்து இந்த நீரை விழுங்கி விட்டால் இது நுரையீரல் இயக்கத்தை நிறுத்தி விடும். உடனடியாக மரணம் சம்பவிக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

# ஆபத்துகளை தாண்டி இது அதிகப்படியான மருத்துவ குணங்களை கொண்டது.  இதில் கிடைக்கும் தாதுக்கள் சொறி, படை மற்றும் தோல் வியாதிகளுக்கு சிறந்த மருத்துவ தீர்வை அளிக்கின்றன.

# இந்த சாக்கடலை சார்ந்து இதனை சுற்றி நிறைய தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இந்த தொழிற்சாலைகளின் அதிகப்படியான இயக்கத்தினாலயே இந்த நீர்ப்பரப்பு மாடுபடுவதாக அறிய வருகிறது.

# அந்த காலத்தில் மம்மிகளை பதப்படுத்த இதன் உப்பு பயன்படுத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது.    

# மீன்கள் போன்ற ஜீவராசிகள் இதில் வாழ முடியாவிட்டாலும் சில நுண்ணுயிரிகள் இதில் வாழ்கின்றன. சாக்கடலை சுற்றியுள்ள பகுதியில் ஒட்டகங்கள், நரி, சிறுத்தை மற்றும் பறவைகள் காணப்படுகிறது.Tourism To Dead Sea


சாக்கடலுக்கு சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் வருகை தரக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 2017 ஆம் ஆண்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 3.6 மில்லியனாக புள்ளி விவரம் கூறுகிறது. இது கடந்த ஆண்டை விட 25% அதிகம்.

Post a Comment

0 Comments