![]() |
photo via BlogPoke |
Top 10 Powerful Countries in The World
உலகின் சக்தி வாய்ந்த டாப் 10 நாடுகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது. பொருளாதாரம், இயற்கை வளம், கரன்சி மதிப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய தகவல்களின் மதிப்பீட்டின் அடிப்படடையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
10. யுனைடெட் அரப் எமிரேட்ஸ் ( UAE )
![]() |
photo via Khaleej Times |
யுனைடெட் அரப் எமிரேட்ஸ் 7 கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாகும். அபுதாபி, அஜ்மான், ஷார்ஜா, பியூஜைரா, ரஸல் கைமா , உம்மல் குவைன் மற்றும் துபாய். இதில் துபாய் மற்றும் அபுதாபி உலகில் மிகவும் அறியப்பட்ட மதிப்பு வாய்ந்த சுற்றுலா தளங்களை கொண்ட நகரங்கள். உலகின் பெரும் நகரங்களுக்கு நிகராக சொகுசு, மற்றும் ஆடம்பரங்கள் தாராளமயமாக்கப்பட்ட மக்களால் அதிகம் விரும்பக்கூடிய நகரங்கள்.
உலகின் செழிப்பான நாடுகளில் UAE யும் ஒன்று. அதிகப்படியான எண்ணெய் வளங்களும், இயற்கை எரிவாயு வளங்களும் இந்நாட்டை செழிப்பாக வைத்துள்ளது. யுனைடெட் நேசன்ஸ் மற்றும் கல்ஃப் கார்பொரேஷன் போன்றவற்றில் முக்கிய உறுப்பினர். அதிக நாடுகளுடனான நட்புறவு, அசுரர் பொருளாதார வளர்ச்சி போன்றவற்றால் உலகின் சக்தி வாய்ந்த நாடக உள்ளது.
ஆயினும், பெரிய ராணுவ பலம் மற்றும் ஆயுத பலம் கிடையாது. ஆயுதங்களை பிற நாடுகளிடமே UAE பெற்றுக்கொள்கிறது.
9. சவூதி அரேபியா ( Saudi Arabia )
![]() |
photo via Verdict |
அரபு நாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நாடு சவூதி அரேபியா. யுஎஸ் மற்றும் யுனைடெட் கிங்டமுடன் நெருங்கிய நட்புறவில் உள்ளது. வெளிநாட்டு ஊழியர்களுக்கும், தல தனியார் கம்பனி முதலீட்டாளர்களுக்கு இடம் கொடுத்துள்ளது. அரசியல் ரீதியாகவும் மிகவும் சக்தி வாய்ந்த நாடக அறியப்படுகிறது. உலகின் மிகப்பெரிய ராணுவ பலம் கொண்ட நாடக திகழ்கிறது. உலகின் அதிகப்படியான ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக சவுதி அரேபியா உள்ளது. யுனைடெட் கிங்டம் மற்றும் கனடா இவர்களின் முக்கிய ஆயுத இறக்குமதியாளராக உள்ளனர்.
8. இஸ்ரேல் ( Israel )
![]() |
photo via NBC News |
மத்திய கிழக்கு நாடுகளில் சக்தி வாய்ந்த நாடாக இஸ்ரேல் அறியப்படுகிறது. சிறந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பட்ட வாழ்கை தரத்தை பெற்றுள்ளது. கல்வி வளர்ச்சியில் சிறந்து விளங்கும் இஸ்ரேல் டெக்னாலஜி தொழில் நுட்பத்திலும் வளர்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்கா, ரஸ்யாவுடனும் மத்திய கிழக்கு நாடுகளுடனும் நட்பு பூண்டுள்ளது. ராணுவ பலத்தை மேற்படுத்தி உள்ள இஸ்ரேல் அணு குண்டு தயாரிப்பிலும் காலடி பதித்துள்ளது. உலகின் மிகவும் புத்திசாலித்தனமான பாதுகாப்பு ஏஜென்சியை கொண்டுள்ளது.
7. ஜப்பான் ( Japan )
![]() |
photo via e-asakusa.jp |
உலகின் செல்வாக்கு மிக்க நாடுகளில் ஜப்பானும் ஒன்று. குறிப்பாக டெக்னாலஜியில் இவர்க்ளின் வளர்ச்சி அபாரமானது. கிழக்காசிய நாடுகளில் டெக்னாலஜியில் அமெரிக்காவை மிஞ்சும் அளவிற்கு இவர்களின் வளர்ச்சி உள்ளது. அறிவார்ந்த, படிப்பறிவுள்ள மக்கள் தொகையே இத்தகைய வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்குகிறது.உலகின் மூன்றாவது பணக்கார நாடாகவும், ஏற்றுமதியில் உலகின் முன்னணி நடக்கவும் உள்ளது.
உலகின் பல சக்தி வாய்ந்த நாடுகளுடன் நட்புறவுடன் உள்ளது. வலுவான ராணுவத்தை கொண்டுள்ள ஜப்பான் பாதுகாப்பு நலனுக்காக பெரிய பொருளாதாரத்தை ஒதுக்கியுள்ளது.
6. பிரான்ஸ் ( France )
![]() |
photo via DriveAway Holidays |
ஃபேஷன் துறையில் உலகின் முன்னோடியான பிரான்சு, இத்துறையில் மிகப்பெரும் பங்களிப்பை அளித்துள்ளது.
5. ஜேர்மனி ( Germany )
![]() |
photo via VRBO.com |
உலகின் டாப் 10 செழிப்பான நாடுகளில் ஒன்றான ஜெர்மனி திறமையான, மேம்பட்ட கல்வியறிவு கொண்ட மக்கள் தொகையை கொண்டுள்ளது. உயந்த வாழ்கை தரம், ஏற்றுமதியில் உலகின் மிகப்பெரிய ஜாம்பவான் என சக்தி வாய்ந்த நாடாக ஜெர்மனி உள்ளது. உலகின் சக்தி வாய்ந்த நாடுகளுடன் கூட்டுறவில் உள்ள ஜெர்மனி உலக பாதுகாப்பு அமைப்பில் தலையிடும் அளவிற்கு அதிகாரம் கொண்டது.
அரசியல் மற்றும் ராணுவ பலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நடக்க திகழ்கிறது.
4. யுனைடெட் கிங்டம் ( United Kingdom )
![]() |
photo by Skyticket |
யுனைடெட் நேசனின் பாதுகாப்பு அமைப்பில் மற்றொரு நிரந்தர உறுப்பினர் யுனைடெட் கிங்டம் ( United Kingdom .உலகின் சக்தி வாய்ந்த, வர்ச்சியடைந்த நகரங்களை கொண்டுள்ளது. பிரான்ஸை போலவே அதிகாரபூர்வமான அணு ஆயுத தளத்தை தந் வசம் வைத்துள்ளது. உலகின் மிகசிறந்த கப்பல் படையை கொண்டுள்ளது இங்கிலாந்து. சிறப்பான வெறியுறவு பாதுகாப்பு படை, இன்டெலிஜென்ஸ் ஏஜென்சியை கொண்டுள்ளது. அரசியல், கலை, கலாசாரம்,பேஷன், அறிவியல் மற்றும் டெக்னாலஜி என அனைத்து துறையிலும் சிந்து விளங்குகிறது.
3. சீனா ( China )
![]() |
photo by |
உலகின் அதிக மக்கள் தொகையை கொண்ட நாடு சீனா. அமெரிக்காவிற்கு அடுத்து பொருளாதாரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த நாடு. மூன்று நூற்றாண்டுகளாக மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை அடைந்து வரும் சீனா எதிர்காலத்தில் அமெரிக்காவை மிஞ்சும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் தலை சிறந்த ஏற்றுமதியாளராக சீனா உள்ளது. யுனைடெட் நேசனில் உறுப்பு நாடக உள்ள சீனா மிகப்பெரிய அரசியல் செல்வாக்கை கொண்டது.
Whatsapp groups ராணுவம், கப்பல் படை என இரண்டிலும் சீன மிகவும் வலுவாக உள்ளது. உலகின் முக்கிய நாடுகளுடன் நட்பு பூண்டுள்ள சீன உலகின் மிகப்பெரும் சக்தி வாய்ந்த நாடாக விளங்குகிறது.
2. ரஷியா ( Russia )
![]() |
photo by Mission Eurasia |
வணிக மற்றும் பொருளாதார மற்றும் இயற்கை வளங்களின் அடிப்படையில் ரஷியா மிகவும் சக்தி வாய்ந்த நாடாக உள்ளது. உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் உலகின் லீடராக ரஷியா உள்ளது. யுனைடெட் நேசனின் நிரந்தர உறுப்பினரான ரஷியா, உலகின் மிகப்பெரும் ராணுவ படை பலத்தை கொண்டுள்ளது. 7000 திற்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை காய் வசம் கொண்டுள்ளது. உலகின் பெரும் நாடுகளுடன் நட்பு பூண்டுள்ள ரஷியா, சீனாவுடன் அதிகமாக நட்பு பாராட்டும் நாடாக உள்ளது. ரஷியாவின் அதிபர் விளாடிமிர் புடின், உலகின் சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படுகிறார்.
1. அமெரிக்கா ( The United States )
![]() | |
photo via Collette Vacations |
உலகின் மாபெரும் சக்திபடைத்த வல்லரசாக அமெரிக்கா விளங்குகிறது. பொழுதுபோக்கு, மற்றும் மீடியா துறையின் அரசனாக அமெரிக்கா விளங்குகிறது. கலிபோர்னியாவின் பொருளாதாரம் மட்டும் 2.5 ட்ரில்லியன் டாலராக உள்ளது . யுனைடெட் நேசனின் நிவினரான யுனைடெட் ஸ்டேட்ஸ் உலக வர்த்தகம், நாட்டு பிரச்சனை மற்றும் உலக பாதுகாப்பில் முடிவு எடுக்கும் அதிகாரத்தில் உள்ளது. அமெக்காவின் ஆதிபராக உள்ளவரே உலகின் மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படுகிறார்.
உலகின் மிகப்பெரிய ராணுவ பலத்தையும், அணு ஆயுத பலத்தையும் அமெரிக்கா தன வசம் வைத்துள்ளது. பொருளாதார பலம், ராணுவம் மற்றும் ஆயுத பலம், அதிகாரம் என அனைத்திலும் வல்லமை படைத்துள்ள யுனைடெட் ஸ்டேஸ்ட் உலகின் சக்தி வாய்ந்த நாடாக அறியப்படுகிறது.
0 Comments