10 Things You Should Not Do in Saudi Arabia
அரபு நாடுகளில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாக அறியப்படுவது சவூதி அரேபியா. கடந்த அரை நூற்றாண்டில் இந்த நாடு பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. அதிகப்படியான எண்ணெய் மற்றும் இயற்கை எரி வாயு வளங்கள் இந்நாட்டின் மிகப்பெரிய பொருளாதார ஆதாரமாக உள்ளது. அதையும் தாண்டி இந்நாட்டின் வளர்ச்சிக்கு அந்நாட்டில் கடைபிடிக்கப்படும் கடுமையான சட்டங்கள் இந்நாட்டின் வளர்ச்சிக்கும், மேலும் உலக அரங்கில் இந்த நாட்டை தனித்துவமாக காட்டுகிறது.சவுதி அரேபியாவிற்கு செல்லும் முன் சில சட்டங்களை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம். சாதாரணமாக மற்ற நாடுகளில் இருப்பது போல் நாம் இங்கு சாதாரணமாக நடமாட முடியாது. அவற்றில் நாம் சவுதி நாட்டில் கடைபிடிக்க வேண்டிய சில சட்டங்களை இங்கே காணலாம்.
1. பெண்களின் ஆடை:
![]() |
photo by egyptianstreets.com |
இந்நாட்டு பெண்களோ, அல்லது வெளிநாட்டுப்பெண்களோ யாராக இருந்தாலும் அபாயா என்ற ஆடையுடன் தான் பொது இடத்தில் நடமாட முடியும். அபாயா என்பது முகம், கை, கால் தவிர மற்ற பகுதிகளை மறைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட ஆடை.
2. ஆபாசத்திற்கு தடை :
![]() |
photo by Deccan Chronicle |
உங்கள் மொபைலிலோ, லேப்டாப்பிலோ ஆபாச படங்களை வைத்துக்கொள்வது மற்றும் பார்ப்பது இங்கு மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம்.
3. ஆல்கஹால் மற்றும் பன்றி உணவு:
![]() |
photo by StepFeed |
மது அருந்துவது இங்கு தடை செய்யப்பட்ட ஒன்று. மேலும் பன்றி உணவு இந்த நாடு முழுவதும் தடை செய்யப்பட்டிள்ளது.
4. ரமலான் மாதம்:
![]() |
photo by Al Arabiya English |
ரமலான் மாதத்தில் பொது இடத்தில் உணவோ அல்லது பானமோ உட்கொள்வது இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.
5. புகைப்படத்திற்கு தடை :
![]() |
photo by Wonder360d |
அந்நாட்டு பெண்களை தெரியாமல் கூட புகைப்படம் எடுத்து விடாதீர்கள், இது அந்நாட்டில் மிகப்பெரிய தவறு. குறிப்பிட்ட அரசு சார்ந்த கட்டிடங்களை புகைப்படம் எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.
6. இசை:
![]() |
photo by Listverse |
ஷாப்பிங் மாலிலோ, பொது இடங்களிலோ இசைப்பாடல்கள் ஒலிப்பதை கேட்க முடியாது. நீங்கள் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்ளலாம். ஆனால், கல்வி பாடத்திட்டங்களில் இசைக்கல்விக்கு அனுமதி கிடையாது.
7. காதலர் தினம்:
![]() |
photo by independent.co.uk |
காதலர் தினம் இங்கு அனுசரிக்கப்படுவதில்லை, அது சம்பத்தப்பட்ட சிவப்பு ரோஜா, வாழ்த்து மடல்கள் விற்பனை செய்யவும் தடை உள்ளது.
8. மதம் பற்றி அவதூறு:
![]() |
photo by The Independent |
பிற மத மக்களுக்கு இங்கு மதிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் இஸ்லாம் பற்றி விமர்சனம் செய்வது, சமூக வலை தளங்களில் பதிவிடுவது குற்றச்செயல் ஆகும்.
9. தடை செய்யப்பட்ட பொருட்கள்:
![]() |
photo by Victor Matara |
போதை பொருட்கள் மற்றும் ஆபாசத்தை வெளிப்படுத்தும் வகையான செயல்களுக்கு இங்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகிறது.
10. தனியாக பயணம் :
![]() |
photo by CBC.ca |
ஆண் துணை இல்லாமலோ, குடும்ப உறுப்பினர் இல்லாமலோ பெண் தனியாக பயணம் மேற்கொள்ள அனுமதியில்லை.
வெளிநாட்டு நாட்டு பயணிகளுக்கும், பெண்களுக்கும் சவுதி அரேபியாவில் அதிக மரியாதையும் மதிப்பும் கொடுக்கப்படுகிறது. அதே வேலை அந்நாட்டு சட்டங்களை கடை பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். எப்போதுமே பாஸ்போர்ட் மற்றும் இக்காமா பதிவுகளை என்றும் கையில் வைத்திருப்பது நல்லது.
5.
0 Comments