The Darvaza gas crater அதாவது "Door to Hell" " நரகத்தின் கதவு " என அழைக்கப்படும் இந்த பகுதியானது துர்க்மெனிஸ்தானில் அமைந்துள்ளது. மீத்தேன் வாயு சம்பத்தப்பட்ட புவியியல் ஆய்வின் போது ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட பள்ளம் தான் இது. சுமார் 45 வருடத்திற்கும் மேல் இந்த பள்ளமானது எறிந்த நிலையிலேயே காணப்படுகிறது.
இந்த பள்ளத்தின் நீளமானது 69 மீட்டர் ( 266 அடி ), ஆழம் 30 மீட்டர் அதாவது சுமார் 98 அடி. இந்த பகுதியானது பிரபலமான சுற்றுலா தலமாக தற்போது அறியப்படுகிறது. 2009 லிருந்து 50,000 ற்கும் மேற்பட்ட சுற்றுலா வாசிகள் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த எரியும் மீத்தேன் பள்ளமானது துர்க்மெனிஸ்தானின் டார்வாசா எனும் கிராமத்தில் உள்ளது. இது ( Karakum Desert ) காராகும் பாலைவனித்தின் மத்தியில் சுமார் 250 km தொலைவில் அமைந்துள்ளது.
பள்ளம் உருவான கதை:
இந்த பகுதியானது 1971 ஆம் ஆண்டு சோவியத் பொறியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பகுதியானது எண்ணெய் வளம் மிக்க ஒரு பகுதியாகவே அறியப்பட்டது. அங்கே உள்ள எண்ணெய் வளத்தின் அளவை அறிய பல்வேறு துளையிடும் எந்திரங்களை கொண்டு துளையிடப்பட்டது. அங்கே ஏற்பட்ட தவறின் காரணமாக அதிகப்படியான மீத்தேன் வாயு வெளியேற ஆரம்பித்தது.
அந்த வாயு ஊருக்குள் சென்று விடாமல் தடுக்க அதை தீ மூட்ட முடிவு செய்தனர். அங்கே ஏற்பட இருந்த மிகப்பெரிய விபத்து இதனால் தவிர்க்கப்பட்டது. ஆனால், அன்று சிறு தீர்வாக பற்ற வைக்கப்பட்ட நெருப்பு இன்று வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. 2010 இல் இங்கு வந்து பார்வையிட்ட அந்த நாட்டு அதிபர் அந்த பள்ளத்தை மூட உத்தரவிட்டார். பிறகு, 2013 இல் அதை அந்த பாலைவனத்தின் ஓர் பகுதியாக இருக்க விட்டு விடுமாறு ஆணையிட்டார்.
தற்போது வரை எரிந்து கொண்டிருக்கும் இந்த மிகப்பெரிய பள்ளமானது, இப்போது மக்களுக்கு ஓர் காட்சிப்பொருளாக ஆகி விட்டது. வருடந்தோறும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இங்கே வந்து பார்வையிட்டுச்செல்லுகின்றனர். இரவில் இதன் காட்சி மிகவும் அற்புதமாக இருக்கும். பாதுகாப்பான தூரத்தில் இருந்து ரசித்தால் இந்த இடம் ஓர் அற்புதமான சுற்றுலா தளமாக இருக்கலாம்.
0 Comments