மர்மங்களும், ஆச்சரியங்களும் நிறைந்த இந்தியாவின் டாப் 5 இடங்கள்

  

5 Mystery Places In India

 வித்தியாசங்களும், மர்மங்களும் நிறைந்த உலகின் பல இடங்களை பற்றி நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த பட்டியலில் நம் நாடு மட்டும் தப்புமா என்ன? இந்தியாவில் மர்மங்களும், ஆச்சரியங்களும் கொண்ட பல கோவில்கள், கிராமங்கள், புராதான இடங்கள் என் நாம் வியக்கும் வண்ணம் பல இடங்கள் உள்ளது.

வழக்கத்திற்கு மாறாக, வினோதமான வரலாற்றை கொண்ட இந்தியாவின் மர்மங்கள் நிறைந்த பகுதியை பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

1. சாணி சிக்னாபூர் ( Shani Shingnapur )

மஹாராஷ்டிராவில் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் தான் இந்த சாணி சிக்னாபூர் ( Shani Shingnapur ). இந்த கிராமமானது அகமது நகரிலிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள ஆச்சர்யம் என்னவென்றால் இங்குள்ள வீடுகளில் கதவுகள் கிடையாது. வீடு மட்டுமல்லாது பள்ளிக்கூடம், வியாபார தளங்கள் போன்ற எங்கேயுமே கதவுகள் இருக்காது.
இந்த கிராமத்தில் உள்ள காவல் தெய்வம் இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதாக நம்புகிறார்கள், அதே வேளை திருட்டு போன்ற எந்தவொரு குற்ற சம்பவமும் இங்கு பதிவானதில்லை. வங்கி லாக்கர் முதல் கொள்ளை போகும் இந்த நாட்டில் இந்த கிராமம் நிச்சயம் ஓர் ஆச்சர்யம் தான்.

 2. ட்வின்ஸ் டௌன் ( Twin Town kerala )
கேரளா மலப்புத்தில் உள்ளது காதினி கிராமம், இங்கு ஏறத்தாழ 2000 கும்பங்களுக்கு மேல் வாழ்கின்றனர். கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இங்கு 220 ஜோடி இரட்டை குழந்தைகள் ( Twins ) உள்ளனர்.
இதன் காரணமாக இந்த கிராமம் ட்வின்ஸ் டௌன் ( Twin Town ) என அழைக்கப்படுகிறது.சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட சர்வேயில் இங்கு இரட்டை குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இந்த வினோதமான நிகழ்விற்கு இங்கே புழக்கத்தில் உள்ள குடிநீரின் ரசாயன கலவை ஒரு காரணமாக இருக்கலாம் என கூறுகின்றனர். ஆனால், உண்மையில் இது ஓர் தீர்க்கப்படாத மர்மமாகவே உள்ளது.

3. எலி கோவில், ராஜஸ்தான் ( Temple of Rats )


ராஜஸ்தானில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள பிக்கானார் பகுதியில் அமைந்துள்ளது கார்னி மாதா கோவில். இங்கு ஏறத்தாழ 25,000 எலிகள் இந்த கோவிலுக்குள் வாழ்கின்றன, மேலும் இங்கே இவை புனிதமாக மதிக்கப்படுகின்றன.

இங்கே உள்ள எலிகள் கப்பாஸ் ( kabbas ) என அழைக்கப்படுகிறது. நிறைய மக்கள் குறிப்பிட்ட தூரத்தில் நின்று ஆசி பெற்று செல்கின்றனர், உள்ளூர் முதல் உலகின் பல இடங்களில் இருந்தும் இங்கு வந்த வண்ணம் உள்ளனர்.இங்கு வரக்கூடிய மக்கள் இங்கே உள்ள எலிகளுக்கு உணவளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்த கோவிலின் நுழைவாயில் மார்பில் ( marble) கற்களால் அமைக்கப்பட்டுள்ளது, மகாராஜா கங்கா சிங்கால் ஏற்படுத்தப்பட்டுள்ள மிகவும் வலுவான உலோக கதவுகள் கம்பீரமாக உள்ளது. மேலும் உள்ளே பல கடவுள்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.

4. ரூப்கந்த் மர்ம ஏரி ( Roopkund Lake )


16,499 அடி உயரத்தில் அமைந்துள்ள பனிப்பாறையால் மூடப்பட்ட ஏரி, இந்த ரூப்கந்த். இது உத்ரகாண்டில் அமைந்துள்ளது. மலையேற்றத்தின் போது ஏரியின் கரையில் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பகுதியானது மனிதன் வாழாத 5030 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. சுற்றிலும் கற்களாலும், பனிப்பாறைகளாலும் சூழ்ந்துள்ளது. இந்த எரிப்பகுதியானது மலையேற்றத்திற்கு மிகவும் பிரபலமானது.

இந்த ஏரி 2 மீட்டர் ஆழம் கொண்டது, நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் இங்கு கண்டுபிடிக்கப்பதில் இந்த ஏரி பிரபலமானது. இதைப்பற்றி ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த சம்பவம் 9ஆம் நூற்றாண்டில் நடந்த நிகழ்வாக இருக்கலாம் என்று கூறுகின்றனர். மேலும் மனித எலும்புகள் கண்டரறியப்பட்டதால்  இந்த ஏரி ஸ்கெல்டன் ஏரி ( Skeleton Lake ) என அழைக்கப்படுகிறது.

5. குல்தாரா கிராமம், ராஜஸ்தான் 


ஜெய்சல்மேர் நகரை சேர்ந்த ஒரு கிராமம் தான் குல்தாரா. இது ராஜஸ்தானில் உள்ளது. 13 ஆம் நூற்றாண்டில் வளமாக இருந்த இந்த கிராமத்தில் பலிவால் பிராமின்ஸ் மக்கள் வாழ்ந்து வந்தனர். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறியப்படாத காரணங்களால் இந்த கிராமம் யாரும் வசிக்காதவாறு கைவிடப்பட்டது. கிராமத்திற்கு வரும் நீர் வரத்து குறைதல், அல்லது அக்கிராமத்தின் ஊர்தலைவர்களின் துன்புறுத்தல் கூட காரணமாக இருக்கலாம் என்று வரலாற்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆண்டுகள் பல கடந்த பிறகு குல்தாரா ஒரு வேட்டையாடப்பட்ட பகுதியாக இந்த இடம் பிரபலமானது. 2010ல் ராஜஸ்தான் அரசாங்கம் இதை ஓர் சுற்றுலாத்தலமாக அங்கீகரித்தது. சுற்றுலாத்துறையினர் இந்த இடத்தை புதுப்பிக்க விரும்புகின்றனர். மேலும், அமானுஷ்ய அனுபவங்களை கொடுக்கும் மனிதர்கள் வாழாத இந்த இடத்தில் மீண்டும் மக்கள் வாழும் ஒரு த்ரில்லான அனுபவத்தை கொடுக்க முயற்சி செய்கின்றனர். 2010ல் அமானுஷ்யத்தை பற்றி ஆராய்ச்சி செய்யும் 18 பேர் கொண்ட குழு இங்கு முகாமிட்டது. இதில் 12 பேர் இரவில் தங்கி ஆய்வு மேற்கொண்டதில் இங்கே நிழல் உருவங்களை கண்டதாகவும், கதறல் சத்தம் மற்றும் ஆவிகளின் சப்தங்கள் கேட்பதாகவும் அறிக்கையை அளித்துள்ளனர். இதனால், இந்த இடம் அமானுஷ்யம் நிறைந்த இடமாக அறியப்படுகிறது.

குறிப்பு: 
 இந்தியாவில் இது போன்ற நிறைய இடங்கள் உள்ளது, அவைகள் பற்றி நாம் அடுத்த பதிவுகளில் காணலாம்  

Post a Comment

0 Comments