இயற்கை அழகின் உச்சம் " போரா போரா "


 World Tourism: Bora Bora Island

போரா போரா ( Bora Bora ), இந்த இடம் உலக அளவில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாகும். பிரெஞ்சு பொலினேசியாவை சேர்ந்த இந்த பகுதி இந்நகரத்தில் இருந்து 230 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுற்றிலும் பவளப்பறைகளாலும் நீல நிறத்தில் சிறிய நீர்ப்பரப்பினாலும் சூழப்பட்டு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

2007 ஆம் ஆண்டு கணக்கின் படி இந்த தீவின் மக்கள் தொகை 10,605. இங்கு காணப்படும் நிறைந்த தென்னை மரங்கள் தான் ஆரம்பத்தில் இந்த தீவின் பொருளாதார காரணியாக இருந்ததாக கூறப்படுகிறது.


போரா போரா என்பதன் பொருள் கடவுளின் அழகான படைப்பு என்பதாகும்.
இந்த தீவின் இயற்கை அழகே இப்பெயர் வர காரணமென்று இத்தீவின் வரலாறு கூறுகிறது.

 இங்கே நிறைய ஹோட்டல்கள், உயர் ரக சொகுசு தங்கும் விடுதிகள் அனைத்தும் நீர்ப்பரப்பிற்கு நடுவே அமைக்கப்பட்டுள்ளது. உணவு மற்றும் தங்கும் விடுதிகளின் செலவானது மற்ற இடங்களை ஒப்பிடும் போது இங்கு மிக அதிகம் ( very expensive ).

நீர்பரப்பில் திறந்த வெளியில் உணவு அருந்தும் வசதி, வண்ண மீன்களுடன் சேர்ந்து பானம் அருந்தும் வசதி, தனியாக படகு சவாரி, கலை நயமிக்க அழகான உணவருந்தும் விடுதிகள் , சுற்றிலும் அழகு சூழ்ந்த கடற்கரை, அழகான ஷாப்பிங் செய்யும் இடங்கள் என திரும்பும் இடமெல்லாம் இயற்கை அழகுடன் காட்சியளிக்கிறது.

முக்கிய அம்சங்கள்:

1. ஸ்கூபா டைவிங் ( scuba diving )


 தெளிந்த கடல் நீரில் கவச உடைகளுடன் நீந்துவதே இதன் சிறப்பாகும். மேலும், சுறா, பெரிய வாவல்  மற்றும் பல வண்ண மீன்களுக்கு மத்தியில் நீந்துவது நமக்கு த்ரில்லாகவும் மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். இதற்கு 70 முதல் 80 டாலர் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.2. டியூப் டோவிங் ( Tube Towing ) இதில் water skiing, mono skiing  மற்றும் பல வகைகள் உள்ளது, நமக்கு பிடித்த ஆப்ஷனை தேர்வு செய்து கொள்ளலாம். பாதுகாப்பான ரப்பர் படகில் நாம் கட்டப்பட்டு கடலில் இழுத்துச்செல்லப்படுவோம், இது மிகவும் பாதுகாப்பு உபகரணங்களுடன் செய்யப்படுகிறது.. இந்த வகை விளையாட்டிற்கு 80 டாலர் வரை கட்டணமாக பெறப்படுகிறது.

3. Stand up paddle board


இது நீரில் நின்ற நிலையில் ஸ்கேட்டிங் போர்டில் சவாரி செய்வதாகும். மேலும் தெரியாதவர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதற்கென தனி பயிற்சியாளர்கள் இங்கு உள்ளனர். அனுபவம் உள்ளவர், இல்லாதவர் என அவர்களுக்கு ஏற்ற படி பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு 80 முதல் 85 டாலர் வரை கட்டணமாக பெறப்படுகிறது.

Post a Comment

0 Comments