அவதார் படத்தில் வரும் தியான்ஜி மலை பற்றிய சுவாரசியங்கள்Tianzi Mountain in Avatar Film

அவதார் படம் பார்த்தவர்கள் கண்டிப்பாக அந்த படத்தில் காட்டப்பட்ட இடங்களை பார்த்து வியந்திருப்போம். நீங்கள் நினைப்பது போல் அது ஒரு தனி மனிதனின் கற்பனை கிடையாது. அது ஒரு இயற்கையின் படைப்பு. அதன் தோற்றத்தை தழுவியே அப்படத்தில் மக்கள் வாழும் பகுதியை கட்டமைத்துள்ளனர். ஆம்,  அந்த இடம் தான் தியான்ஜி மலை. இது சீனாவின் ஜாங்ஜியாஜி பகுதியில் உள்ளது. தியான்ஜி என்பதற்கு சொர்க்கத்தின் பிள்ளை என்று பொருள்.மூடுபனியால் சூழப்பட்டு, பார்க்க டவர் கோபுரம் போன்று உயந்து பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது இந்த சொர்க்கத்தின் பிள்ளை ( Tianzi Mountain ). இதன் அமைப்பானது சாதாரண மலைகளைப்போல் இல்லாமல் மிகவும் தனித்துவமான தோற்றத்தை கொண்டது. இந்த மலைகளின் நடுவே அமைந்துள்ள மிகப்பெரிய மலையின் உயரம் 1212 மீட்டர் ( 4140 அடி ). சுமார் 67 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இம்மலைப்பகுதி அமைந்துள்ளது.
தியான்ஜி மழையின் உருவாக்கம் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. முரண்பாடான இயற்கை மாற்றங்கள், கற்களின் அரிப்பே இதன் தோற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். இங்கே காணப்பட்ட மண் அரிப்பின் காரணமாக பல அடுக்குகளும், வித்தியாசனமான பல நிறங்களும் மற்றும் தனித்துவமான தோற்றத்தை பெற்றுள்ளது. மேலும் இங்கே ஏற்பட்ட மண் அரிப்பின் அளவானது சீராக இல்லாமல் இடத்திற்கு இடம் மாறுபட்டுள்ளது, இதன் காரணமாகவே இப்படி துண்டிக்கப்பட்ட வடிவங்களாக காட்சியளிக்கிறது. இதை சுற்றியுள்ள காடுகளில் வித்தியாசமான பூக்கள், மரங்கள் மற்றும் புதர்களும் உள்ளன. இந்த வனப்பின் காரணமாக பல விலங்குகளுக்கு இந்த இடம் வாழ்விடமாக உள்ளது, குறிப்பாக பறவைகளுக்கு..


தியான்ஜி மலைக்கு வருடந்தோறும் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக மழைக்காலத்திற்கு பிறகு இப்பகுதி முழுவதும் பனிமூட்டத்துடன் காணப்படும். அந்த கட்சியானது வர்ணிக்க இயலாத அளவுக்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். ஜூலை மாதம் இங்கு வெப்பநிலை 30°C வரை இருக்கும், அதே வேலை குளிர் காலங்களில் வெப்பநிலையானது 5°C ஆக குறைந்து விடும். ஆக வாழ்நாளில் காண வேண்டிய மிகவும் அற்புதமான இடங்களில் இதுவும் ஒன்று. 

Post a Comment

0 Comments