நரகத்தின் நுழைவாயில் "எர்டா அலி"


எர்டா அலி என்ற இந்த எரிமலை பல ஆண்டுகளாக செயலில் உள்ள ஓர் கருங்கல் எரிமலை ஆகும். இந்த எரிமலை எத்தோப்பியாவின் அஃபர் ( Afar Region ) என்ற பகுதியில் உள்ளது. எத்தோப்பியாவில் உள்ள முக்கியமான எரிமலைகளில் இது முக்கியமானது.

எர்டா அலியின் உயரம் 613 மீட்டர் ( 2012 அடி ), எப்போதாவது ஒன்றோ அல்லது இரண்டு எரிமலை ஏரிகள் வெடித்து சிதறி லாவா குழம்பாக தெற்குப்பகுதியில் ஓடும். இதில், குறிப்பிடத்தக்க ஒன்று இந்த எரிமலையானது 1906 லிருந்து தீயை கக்கியவாறு செயலில் உள்ளது. எரிமலை வெடித்து ஆறாக ஓடுவது மிகவும் அரிதாக நடக்கக்கூடியது, அப்படி மொத்தமே 6 எரிமலைகள் உலகில் உள்ளது.


எர்டா அலி என்பதற்கு அவர்களின் மொழியில் "smoking mountain" அதாவது புகைந்து கொண்டிருக்கும் மலை என்று பொருள். பொதுவாக இந்த எரிமலை "the gateway to Hell" நரகத்தின் நுழைவாயில் என்று வர்ணிக்கப்படுகிறது. 2009ல் BBC குழுவால் மூன்று வித்தியாசமான பரிமாணத்தில் அதன் செயலை அறியும் வகையில் லேசர் தொழில்நுட்பத்தில் ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது .
இங்கு 2005 ல் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு ஏற்பட்டது, இதில் 250 பேர் பலியாயினர் மேலும் 1000 ற்கும் மேற்பட்டோர் வேறு இடத்திற்கு தப்பி ஓடினர். அடுத்ததாக 2007ல் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் போது 100 ற்கும் மேற்பட்டோர் அப்பகுதியை விட்டு வெளியேற்றப்பட்டனர், மேலும் இரண்டு பேரை காணவில்லை.

 2008ல் நவம்பர் 8 ஆம் தேதி ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சியில் 2017 ல் மேலும் ஒரு பெருவெடிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தனர்.


எர்டா அலிக்கு பயணம் ??


இந்த பகுதிக்கு செல்ல போதிய அளவு வழிகாட்டுதல்கள்களோ, மருத்துவ வசதிகளோ அங்கு கிடையாது. மேலும் இங்கு பயணம் மேற்கொள்ளுவது மிகவும் கடினமாதும், ஆபத்தானதும் கூட. இந்த அஃபர் பகுதியில் ஒற்றுமையின்மை காரணமாக அதிக வன்முறைகள் நிகழும் இடமாக காணப்படுகிறது.

2012 ஜனவரியில் எர்டா அலிக்கு சென்ற ஐயூரோப்பை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர், 7 பேர் காயமடைந்தனர் மேலும் இரண்டு பேர் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்டனர் .

இந்த தாக்குதலுக்கு ( ARDUF ) என்ற அமைப்பு பொறுப்பேற்று 2012 மார்ச்சில் இரண்டு பிணைக்கைதிகளை விடுவித்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு, ஒன்றோ அல்லது இரண்டு காவலர் உதவி இல்லாமல் இந்த பகுதிக்கு செல்வது பாதுகாப்பானது அல்ல என்று சுற்றுலா துறை வட்டாரங்கள் தெரிவித்தன. தற்போது நிறைய சுற்றுலா துறை நிறுவனங்கள் ராணுவ உதவியுடன் பயண ஏற்பாட்டை செய்து தருகின்றன.
இவ்வளவு ஆபத்துகளையும்  தாண்டி  எர்டா அலி மிகவும் அசாதாரண, அவசியம் காண வேண்டிய இயற்கை அழகாக சுற்றுலா வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments