ராயல் என்ஃபீல்ட் " Bullet " உருவான கதை


History Of Royal Enfield
 
ராயல் என்ஃபீல்ட், இந்த இரு சக்கர வாகனத்தை பற்றி தெரியாத நபரே இருக்க முடியாது. டீனேஜ் முதல் பெரியவர்கள் வரை விரும்பக்கூடிய ஓர் இரு சக்கர வாகனம் தான் இந்த புல்லட். 1970, 80 களில் இந்த புல்லட் பெரிய ஆட்கள் மட்டும் பயன்படுத்தும் ஓர் வாகனம், அந்த காலத்தில் இந்த வண்டியில் வருவதே ஒரு தனி கம்பீரம். "இந்த வண்டியை ஓட்டினவங்க வேற எந்த வண்டியையும் விரும்ப மாட்டாங்க" இப்படி அந்த கால பெருசுக வாயில நாம நிறைய கேட்டிருப்போம். அப்படி பல பேர் விரும்பக்கூடிய இந்த புல்லேட்டோட வரலாற்றை பற்றி தான் இங்கே பார்க்கப்போகிறோம்.

புல்லட்டின் உருவாக்கம் :

புல்லட் பைக்கை உருவாக்கியவர்கள் இங்கிலாந்தை சேர்ந்த Albert Eadie மற்றும் Robert Walker Smith. இங்கிலாந்தின், ரெட்டிச் ( Redditc ) 
என்ற பகுதியில்  1850ல் Eadie Manufacturing Co என்ற கம்பெனியை தொடங்கினார்கள்.  இந்த கம்பெனி 1890 ல் Enfield Cycle Co என பெயர் மாற்றப்பட்டது. எட்டியின் மறைவிற்குப்பிறகு ரெட்டிட்ச் நிறுவனம் பொறுப்பேற்றுக்கொண்டது.

ஆரம்பத்தில் என்ஃபீல்ட் நிறுவனம் மோட்டார் சைக்கிள், மிதி வண்டிகள் மற்றும் புல் அறு இயந்திரங்கள் போன்றவற்றை தயாரித்து வந்தன. முதல் ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள் 1901 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டது. இதன் தோற்றத்தை உருவாக்கிய பெருமை " Enfield Cycle Company " நிறுவனத்தையே சேரும். மோட்டார் சைக்கிள் வரலாற்றிலேயே இந்த புல்லட் பைக்கின் வடிவமைப்பு தான் நீண்ட காலமாக நிலைத்து நிற்கும் வரலாற்றின் பிரசக்தி பெற்ற ஒன்று.
 ரெட்டிட்ச் நிறுவனம், 1949 களில் இந்தியாவில் விற்பனையை தொடங்கியது. 1955ல் இந்திய அரசாங்கம் காவல் துறை மற்றும் ராணுவ வீரர்களுக்காக 800 புல்லட் பைக்குகளை வாங்கியது. இதே வருடம் ரெட்டிட்ச் நிறுவனம் இந்தியாவில் உள்ள மெட்ராஸ் மோட்டர்சுடன் இணைந்து அதற்கான உரிமத்தையும் பெற்றது.

Royal Enfield 350 CC


350 சிசி ரக வண்டிகளை அறிமுகம் செய்தது என்ஃபீல்ட் இந்தியா. ராயல் என்ஃபீல்ட் தொழிற்சாலை சென்னையின்  திருவொற்றியூரில் உள்ளது. இன்றும் உலகில் உள்ள மிகப்பழமையான தொழிற்சாலைகளில் இதுவும் ஒன்று. 2013 ஆம் ஆண்டில் சென்னையில் 2 வது தொழிற்சாலையும், 3வது தொழிற்சாலை சென்னையில் உள்ள ஓரகடத்தில் பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளது.1993 ஆம் ஆண்டு ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் 60% ம் அதிகமான பங்குகள் ஈச்சர் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. தற்போது காலத்திற்கு ஏற்ப டிஸ்க் பிரேக், அலாய் வீல் மாற்றியமைக்கப்பட்ட பிரேக் மற்றும் கியர் சிஸ்டத்துடன் இம்மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யப்படுகிறது, மேலும் 2016 முதல் 2018 வரையிலான விற்பனையானது பெரிய உச்சத்தை பெற்றுள்ளது. 118 ஆண்டுகள் தாண்டி இன்றும் முத்திரை பதிக்கிறது இந்த ராயல் என்ஃபீல்ட். 

Post a Comment

0 Comments