வானவில் வண்ணத்தில் உலகின் அழகான கொதிக்கும் நீரூற்று ( Grand Prismatic )Sub: " Grand Prismatic " Hot spring and Facts In Tamil


உலகில் நாம் காணாத நிறைய இயற்கை அதிசயங்கள் உள்ளது, அவற்றில் குறிப்பிடும்படியான ஒன்று ( Hot Spring ) எனப்படும் வெப்ப நீரூற்று. வெப்ப நீரூற்று எனப்படுவது பூமியின் அடியில் நிலவும் வெப்பத்தின் காரணமாக அரிதாக உலகின் சில இடங்களில் வெப்ப நீரூற்றாக வெளிப்படும். இவற்றில் சில மக்கள் பயன்படுத்தும் வகையில் இருக்கும், மற்றவை உயர் கொதிநிலையில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். அப்படி, உயர் வெப்ப நிலையில் காணப்படும், உலகின் பெரும்பாலான மக்களால் அதிகம் விரும்பக்கூடிய ஒரு அழகான வெப்ப நீரூற்றை பற்றி நாம் இங்கு காண உள்ளோம்.


அமெரிக்காவின் எல்லோ ஸ்டோன்  ( Yellowstone National Park ) தேசிய பூங்காவில் உள்ள கிராண்ட் பிரிஸ்மாடிக் ( Grand Prismatic ) வெப்ப நீரூற்று அமெரிக்காவின் மிகப்பெரிய கொதிக்கும் வெப்ப நீரூற்றாகும், மற்றும் உலகின் மூன்றாவது மிகப்பெரிய வெப்ப நீரூற்றாகும்.  அமெரிக்கா பயணமாகும் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக விரும்பி செல்லக்கூடிய ஓர் அரிதான இடம் தான் இந்த பகுதி.
புவியியல் ஆய்வாளர்களால் 1871 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது இந்த வெப்ப நீரூற்று. வானவில் நிறத்தை பிரதிபலிக்கும்படி நீலம், ஆரஞ்சு, சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் என பல வண்ணங்களில் இதனை சுற்றியுள்ள இடங்கள் அழகாக காட்சியளிக்கிறது.


நீரூற்றை சுற்றியுள்ள நிலப்பகுதி  ஆரஞ்சு சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் காணப்படுகிறது. மேலும் இந்த நிறங்கள் வெப்பத்தை பிரதிபலிப்பதாகவும் உள்ளது. அதிக வெப்பநிலையின் காரணமாக நீர்ப்பரப்பின் நடுப்பகுதியானது அடர் நீல நிறத்தில் காட்சியளிக்கிறது.
காலத்தின் தட்ப வெப்ப நிலையை பொறுத்து இந்த இடத்தின் நிறமும் மாறுதல் அடையும். கோடை காலங்களில் ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்களிலும், குளிர் களங்களில் அடர் பச்சை நிறமாகவும் காட்சியளிக்கிறது. இந்த நீரூற்று தொடர்ச்சியாக 2100 லிட்டர் நீரை வெளியேற்றுகிறது.

இந்த நீரூற்று 110 மீட்டர் ( 370 அடி ) விட்டமும், 50 மீட்டர் ( 160 அடி ) ஆழமும் கொண்டது. இந்த நீரின் வெப்பநிலையானது 70 °Cஅதிக மேகமூட்டமில்லாத நிலையில் இது வண்ணமயமாக காட்சியளிக்கும், நிறைய சுற்றுலா பயணிகள் இங்கு ஒன்றிற்கும் அதிமான முறை இங்கு வந்து செல்கின்றனர். பாதுகாப்பான முறையில் கண்டு கழிக்க குறிப்பிட்ட இடைவெளியில் வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நம்ப முடியாத சுற்றுலா அனுபவத்தை இந்த பயணம் தருவதாக சுற்றுலாவாசிகள் கூறுகின்றனர்.Post a Comment

0 Comments