பெரு நாட்டின் பாலைவனச்சோலை "Huacachina"
சவுத்வெஸ்டர்ன் பெருவில் ( Peru ) அமைந்துள்ள ஒரு கிராமம் தான் Huacachina. சுற்றிலும் மணற்பரப்பில் சூழ்ந்துள்ள ஓர் பாலைவனச்சோலை. Ica Districtல் இருந்து 5 km தொலைவில் அமைந்துள்ளது. இரவில் இந்த கிராமத்தின்  கட்சியானது மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும். பரந்த பாலைவனத்திற்கு நடுவே பச்சை பசேல் என்று பல வண்ண ஒளி அலங்காரங்களால் மின்னுகிறது.

 அங்கு குடியிருக்கும் குடும்பங்கள் ஏறத்தாழ 100 குடும்பங்கள். ஆனால் வருடந்தோறும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா வாசிகள் உலகின் பல இடங்களில் இருந்தும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கிராமத்தின் கட்டமைப்பானது இயற்கையாய் அமைந்த ஒரு ஏரியை சுற்றி அமைந்துள்ளது. இந்த கிராமம் "oasis of America" அதாவது அமெரிக்காவின் சோலைவனம் என அழைக்கப்படுகிறது. இங்கே சுற்றுலா பயணிகள் தங்கும் வண்ணம் நிறைய ரிசார்ட்கள் ( Resorts ), ஹோட்டல்கள் இருக்கின்றன.சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் sandboarding விளையாட்டுகள், மற்றும் dneu buggy rides போன்ற அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. sandboarding என்பது பனிச்சறுக்கு போல மணலில் விளையாடும் ஓர் விளையாட்டு ஆகும்.dneu buggy முற்றிலும் மணற்பகுதில் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட ஓர் வாகனம் ஆகும். ரூப் இல்லாமல் இயற்கையை ரசித்த வண்ணம் பயணிகள் செல்ல வடிவமைக்கப்பட்ட ஓர் வாகனம் ஆகும்.

அங்கே உள்ள மக்களை பொறுத்த வரை அந்த ஏரியின் நீரானது மகத்துவ குணம் மிக்கது. அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் அந்நேரத்தில் குளித்து மகிழ்கின்றனர். இந்நீரினால் கீல்வாதம், ஆஸ்துமா போன்ற நோய்கள் குணமாவதாக நம்புகின்றனர். மேலும் முன்னர் வாழ்ந்த ஓர்   தேவதையால் இப்பகுதி பாதுகாக்கப்படுவதாக நம்பட்டடுகிறது.உலக சுற்றுலாவை அனுபவிக்க விரும்புவோர் கண்டிப்பாக செல்ல வேண்டிய பகுதி இது. பெரு நாட்டில் மிகவும் பிரபலமான நிறைய சுற்றுலாத்தலங்கள் உள்ளது. அதில் குறிப்பிடும் படியான இடம் இதுவாகும்.Post a Comment

0 Comments