கடல் சரித்திரத்தின் அச்சுறுத்தும் வேட்டை இயந்திரம் " Megalodon "


Interesting facts about Megalodon

photo via YouTube

 

மேகல்டான் ( Megalodon ) என்பது உலகில் வாழ்ந்த மிகப்பெரிய சுறா வகையைச்சேர்ந்த மீனினம். ஆய்வின் அடிப்படையில் சுமார் 2.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகச்சிறந்த வேட்டை விலங்கு. Megalodon என்பதற்கு ( Big tooth ) பெரிய பல் என்று அர்த்தம். இது லேமினேட் (  Lamnidae ) எனும் குடும்பத்தை சேர்ந்தது. தற்போது காணப்படும் வெள்ளை சுறா வகையுடன் தொடர்புடையது.

மேகல்டானின் உருவம்:

photo via Reddit

ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் மேகல்டானின் உருவமானது மிகவும் பிரம்மாண்டமான வெள்ளை சுறாவை காண்பது போல் இருக்கும் என்கின்றனர். இன்னும் சில ஆய்வாளர்கள் மிகப்பெரிய பாஸ்கிங் சுறாவைப்போல் இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். கிடைத்த படிமங்களின் அடிப்படையில் மிகப்பெரிய மேகல்டானின் நீளம் 18 மீட்டர்  (59 அடி ) இருக்கும். இந்த இனத்தின் சராசரி நீளம் 34 அடி இருக்கலாம்
என்று கூறுகின்றனர்.

மேகல்டான் கடிக்கும் சக்தி : 
 
photo via Wikipedia

இது கடிக்கும் விசையானது சுமார் 10 முதல் 13 டன் இருக்கும்.  இதன் அதிகபட்ச எடை 30 முதல் 59 டன் வரை இருக்குமாம். இதன் பல்லானது இரையின் எலும்பை நொறுக்கும் அளவிற்கு பலமானது. கண்டெடுக்கப்பட்ட மேகல்டானின் பல் 18 சென்டி மீட்டர் உயரம் கொண்டது.

மேகல்டானின் உணவு:

photo via Sciencing

இது உணவாக திமிங்கலங்கள், சீல்கள், பெரிய ஆமைகள் மற்றும் வேறு சுறா வகைகளை தனது உணவு பட்டியலில் வைத்துள்ளது. இது இரைகளை தாக்கும் பொது பக்கவாட்டிலிருந்து தாக்கி எலும்புகளை நொறுக்கி விடும். இதன் வாய் திறந்த நிலையில் 2.5 முதல் 3.5 மீட்டர் இருக்கும் மேலும் இரு மனிதர்களை ஒரு நேரத்தில் விழுங்கும் அளவிற்கு இதன் வாயின் உருவ அமைப்பு இருக்கும். விழுந்தால் முலைக்கக்கூடிய பற்களை மேகல்டான் கொண்டுள்ளது, வாழ்நாளில் சுமார் 40,000 பற்கள் வரை விழுந்து முலைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேகல்டானின்  குணம்:

photo via Natural History Museum


பிரம்மாண்டமான உடலமைப்பு, சிறப்பான நீந்தும் திறன், சாதுர்யமாக இரையை கையாளும் யுக்தி போன்றவைகளால் மேகல்டான் மிகச்சிறந்த வேட்டை விலங்காக அறியப்படுகிறது. நிறைய திமிங்கலங்களின் எலும்புக்கூடுகள் கடலில் கிடைத்துள்ளது, மேலும் அவைகள் நிறைய வெட்டுக்காயங்கள் மற்றும் கீறல்களுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் மேகல்டானின் வேட்டையாடும் விதம் மூர்க்கத்தனமாக இருக்கும் என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

மேகல்டானின் மறைவு:

pics from FossilGuy.com

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் ஏற்பட்ட மாற்றங்களின் காரணமாக இதன் இனம் அழிந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. முக்கியமாக கடல் பனிப்பாறைகள் விரிவாக்கம், கடல் மட்டத்தின் ஏற்ற இறக்கம் போன்றவை இதன் இனம் விருத்தியடைவதை பாதித்திருக்கலாம் என கருதுகின்றனர்.

மேகல்டான் இன்று:

pics from bestbuy.com


மேகல்டானின் ஆக்ரோஷம், பயமுறுத்தும் உருவம் போன்றவைகளால் வியந்து போன பல பேர் இதைப்பற்றிய நாவல்கள், கதைகள், டிவி தொடர்கள் என இன்றளவும் வந்த வண்ணம் உள்ளது. பிபிசி, ஹிஸ்டரி சேனல் போன்ற புகழ் பெற்ற சேனல்கள் மேகல்டான் பற்றிய நிகழ்ச்சிகளை பதிவு செய்துள்ளனர். கடந்த 2018ல் கூட " தி மெக் " என்ற ஹாலிவுட் படம் மேகல்டானை மையப்படுத்தி படமாக்கப்பட்டிருந்தது.
Post a Comment

0 Comments