ஓட்டப்பயிற்சிக்கு ( Jogging ) முன் நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டியவை


 Must You Listen Start Jogging


எளிய உடற்பயிற்சிகளில் மிகவும் சக்தி வாய்ந்த அதிக பலன் தரக்கூடிய ஒரு பயிற்சி ஓட்டப்பயிற்சி தான். நடை பயிற்சி, ஓட்டப்பயிற்சி இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பலன் தரக்கூடியது. தொடர்ந்து ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என ஆய்வுகள் தெரிவிக்கன்றன.

மேலும் வேகமாக உடல் கொழுப்பை குறைக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் ஓட்டப்பயிற்சியை விட சிறந்த ஒரு உடற்பயிற்சி கிடையாது.

நாம் ஜிம் போன்ற இடங்களுக்கு சென்று உடற்பயிற்சி செய்தாலும் முழு உடம்பிற்கும் ஒரு சேர பயிற்சி கொடுக்க முடியாது. ஜிம்மில் செய்யும் பயிற்சியை நீங்கள் தொடரா விட்டால் நீங்கள் கஷ்டப்பட்டு மெருகேற்றிய உங்கள் உடல் அலங்கோலமாக போய்விடும். ஆனால், ஒட்டப்பயிற்சி அப்படியல்ல. இருப்பினும் நீங்கள் ஒட்டப்பயிற்சியை துவங்கும் முன்னர் சிலவற்றை கடைபிடித்தால் சிறந்தது.# ஓட்டப்பயிற்சியின் போது T-சர்ட், ஷார்ட்ஸ் போன்ற எளிமையான உடைகளை உபயேகிக்கவும்.

# தவறாமல் ஒரு நல்ல சூவை பயன்படுத்தவும், கடினமான காலணியுடன் ஒட்டப்பயிற்சி மேற்கொண்டால் மூட்டு வலி, தசை வலி ஏற்படலாம். இதனால் ஓட்டப்பயிற்சில் உங்களுக்கு ஓர் வெறுப்பு ஏற்படலாம்.# நீங்கள் எந்த உடற்பயிற்சியாக இருந்தாலும் அதிகாலை, மற்றும் மாலை

வேளையில் மட்டுமே செய்யுங்கள். மாலையில் செய்வதைவிட அதிகாலை வேளையில் ஓடுதல் மற்றும் நடை எதுவாக இருந்தாலும் அது சிறந்தது. ஏனெனில் அதிகாலை வேளையில் இயற்கையான காற்றும், மாசு இல்லாத சுற்றுச்சூழலும் உடற்பயிற்சி மேற்கொள்ள ஒரு உற்சாகமான மனநிலையை கொடுக்கும்.

# ஓடுதல் பயிற்சியின் போது மிதமான வேகத்தில் ஓடுவது தான் சிறந்தது, ஜாகிங் என சொல்லப்படும் மெது ஓட்டம் உங்களுடைய இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.
# கடற்கரையிலோ அல்லது பூங்காவிலோ ஓடுவதற்கு பதிலாக மைதானத்தில் ஓடுவது சிறந்தது. சம தளமாக இருப்பதுடன், ஓடுவதற்கும் எளிதாக இருக்கும்.

# நீங்கள் ஓடும்போது உங்கள் பின்னங்கால்கள், அதாவது பாதங்களை பயன்படுத்தாமல் முன்னங்கால்களில் ஓடுவது நல்லது. பாதங்களை வேகமாக தரையில் பதியுமாறு செய்யும் செயல்கள் மூளையை பாதிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

# அப்படி உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியாதவர்கள் ட்ரெட் மில்லை ( Treadmill ) பயன்படுத்தி கொள்ளலாம்.


Post a Comment

0 Comments