![]() |
photo via liveaboard.com |
World Tourism : The Great Blue Hole in Tamil
சென்ட்ரல் அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஓர் நாடு தான் பெலிஸ் ( Belize ). லைட்ஹவுஸ் ரீஃப் என்ற தீவின் நடுவே நீர்ப்பரப்பிற்கு மத்தியில் அமைந்துள்ளது பிரம்மாண்டமான கடல் புதைகுழி. ஆம் இவ்வாறு தான் இந்த பகுதி அழைக்கப்படுகிறது ( The Great Blue Hole ) என்று.பெலிஸ் சிட்டி நகரத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது லைட்ஹவுஸ் ரீஃப் தீவு. இந்த பிரமாண்டமான புதைகுழியானது 318 மீட்டர் (1,043 அடி ) விட்டமும், 124 மீட்டர் (407 அடி ) ஆழமும் கொண்டது. ஆராய்ச்சியாளர்கள் இந்த பகுதியானது ( stalactites ) எனும் முறையில் தோன்றியிருக்கலாம் என கருதுகின்றனர்.
![]() | |||||||||
photo via Wikipedia |
![]() |
photo via myNoise |
Stalactites என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலில் மூழ்கிய பகுதிகளில் ஏற்படும் ஒருவகை இயக்கியான உருவாக்கம். அதாவது, மூழ்கிய குகை மற்றும் பாறைகளில் ஏற்படும் நீரோட்டம் காரணமாக ஏற்படும் உராய்வில் அந்த பாறைகள் உருமாற்றம் அடையும். அப்படி இங்கு கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த மாற்றங்கள் நிகழ 15,000 முதல் 1,53,000 வருடங்கள் ஆகியிருக்கலாம் என கணக்கிடப்படுகிறது.
கடல் வெள்ளத்தில் மூழ்கிய கடற்குகைகளின் மேற்பகுதியே இதை ஓர் பிரம்மாண்டமான புதைகுழி போன்ற வடிவத்தில் காட்சியளிக்கிறது.
கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வு
![]() |
OrangeSmile Tours |
Jacques Cousteau, ஜேக்கஸ் காஸ்டி என்பவரால் இந்த இடம் பிரபலமாக்கக்கப்பட்டது. ஸ்கூபா டைவிங்கிற்கு மிகவும் பிரபலமான டாப் 5 இடங்களில் இதும் ஒன்று என அறிவிக்கப்பட்டது. 1971 ல் இவருக்கு சொந்தமான கப்பலில் பயணம் செய்த போது இந்த இடம் புலப்பட்டது.
![]() |
photo via National Geographic Society |
ஆய்வில் இந்த பகுதியானது நான்கு படிநிலையாக இந்த மாறுதல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. முன்பு இதன் ஆழமானது 21 மீட்டர் , 49 மீட்டர் மற்றும் 91 மீட்டர் இருந்ததாக தெரிய வந்தது. இறுதியாக ஆய்வு செய்த போது 125 மீட்டர் ஆழம் இருந்த இந்த பகுதி 1997ல் Cambrian Foundation ஆல் இதன் ஆழ்மன பகுதியை ஆய்வு செய்த போது 124 மீட்டர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மூலம் இந்த stalactites எனும் formation தொடர்ந்து நடைபெறுவது உறுதி செய்யப்பட்டது.
Tourism in Great Blue Hole
இந்த பகுதி ஸ்கூபா டைவிங்கிற்கும், பொழுது போக்கிற்கும் மிகவும் பிரபலமான உள்ளது. இங்கே ஸ்கூபா டைவிங்கின் போது வித்தியாசமான அழகான நிறைய மீன் வகைகளை காண முடிகிறது. குறிப்பாக கருப்பு நிற பெரிய கிளி மீன், ரீஃப் சுறா போன்றவைகளை காண முடியும். சுறா இனங்களில் bull shark மற்றும் hammerheads போன்ற வகைகளை காணலாம். நீர்ப்பரப்பிற்கு அடியில் இயற்கையாக அமைந்த கடற்குகைகளின் அழகானது நம்மை வியக்க வைக்கும். அழகான வண்ணமான ஓர் அற்புத உலகை அங்கே காண முடியும்.
![]() | ||||||||||||||
photo via Astrum Helicopters |
![]() |
photo via Astrum Helicopters |
2012 ஆம் ஆண்டு டிஸ்கோவெரி சேனல் வெளியிட்ட உலகின் டாப் 10 அற்புதமான இடங்களின் பட்டியலில் தி கிரேட் ப்ளூ ஹோலுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது குடிப்பிடத்தக்க ஒன்று. நீச்சலில் அதிக அனுபவம் உள்ளவர்களுக்கு மட்டுமே இங்கே நீச்சல் அடிக்க அனுமதிக்கப்படுகின்றனர். நம் வாழ்நாளில் ஒரு தடவையாவது காண வேண்டிய உலகின் அற்புதமான இடம் இது என்றால் அது மிகையாகாது....
0 Comments