![]() |
photo via Travel in Portugal |
World Tourism : Benagil Cave
அல்கார்வே ( Algarve ) போர்ச்சுக்களில் அமைந்துள்ள ஓர் மீனவ கிராமம் மற்றும் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமும் கூட. கோடைகால சுற்றுலா பயணத்திற்கு மிகவும் ஏற்றது. இங்கே குறிப்பிடும் வகையில் முக்கியமான பகுதி ( Benagil )பெனாஜில் கடற்குகை.உலகின் மிகவும் அழகான டாப் 10 கடற்குகைகளில் இதுவும் ஒன்று. அழகான கடலோரப்பகுதி , தங்கம் போல ஜொலிக்கும் பாறைகள், தெளிவான கடல் நீர் என நிறைய குறிப்பிடும் வகையான அம்சங்கள் உள்ளது. இங்கே அமைந்துள்ள கடற்குகையும், அதன் மேற்பரப்பில் இயற்கையாக உள்ள மிகப்பெரிய திறந்த வெளிப்பகுதி உங்களை பிரமிக்க வைக்கும். குகைக்கு மேலும், கீழும் நீங்கள் பயணிக்கும் வசதி உள்ளது.
![]() |
photo via Algarve Tips |
கடற்பகுதியில் 150 மீட்டர் தூரத்தில் உள்ளது இந்த அழகான கற்குகை. நீங்கள் படகின் மூலமோ, ( SUP ) எனப்படும் தனிநபர் சிறு படகின் மூலமோ இந்த இடத்திற்கு வந்து சேரலாம். குறிப்பிட்ட பகுதிகளில் இங்கே நீந்துவதற்கு அனுமதியில்லை, ஏனெனில் தொடர்ந்து படகுகள் இந்த இடத்தில் பயணித்த வண்ணம் உள்ளதால் அந்த பகுதியில் நீந்தித்துவது ஆபத்தானது,.
இங்கே 10 முதல் 15 கடற் குகைகள் உள்ளது. படகு சவாரி மூலம் நாம் இங்கு சுற்றிப்பார்க்கலாம். 1 மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை நீங்கள் படகு சவாரி மூலம் இந்த குகைகளை கண்டு ரசிக்க முடியும். குகையின் கீழுருந்து சீலிங்கின் திறந்த வெளியில் வானத்தை ரசிப்பது மிகவும் ரம்மியமானது.
![]() |
pics via experitour.com |
![]() |
pics by Live Portugal |
புகைப்படக்கலைஞர்களுக்கு இங்கு ஏகபோக விருந்துக்கு பஞ்சமிருக்காது.இங்கே மோட்டாரில் இயங்கும் படகுகள் வாடகைக்கு கிடைக்கும், மீனவர்களின் உதவியுடன் நீங்கள் இதில் பயணம் செய்யலாம். Life Jacket எனப்படும் பாதுகாப்பு உடை அணிவது இங்கே அவசியம்.
இந்த நீங்கள் கடற்கரைக்கு கார் மூலம் செல்லலாம், கார் பார்க்கிங் வசதி இருந்தாலும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்தால் சாலையிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம். கடற்கையில் நீங்கள் ஓய்வெடுக்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது, அருகிலேயே ரெஸ்டாரெண்ட் வசதி, கழிப்பிட வசதி, குளிக்கும் வசதி மற்றும் கடற்கரை காவலர் பாதுகாப்பும் உள்ளது.
கடற்கரையிலிருந்து வலது புறமாக நடந்து செல்லும் தூரத்தில் ஒரு பாறை உள்ளது. பாறையிலிருந்து தண்ணீருக்குள் குதிக்கும் வகையிலான தூரத்தில் இது உள்ளது. இது எந்தவொரு பாறையோ, கற்களோ இருக்காது. இருந்தாலும் குதிக்கும் தூரத்தை கவனமாக நீங்கள் தான் தேர்வு செய்ய வேண்டும்.
![]() |
pics by kinging-it.com |
சரியான பாதுகாப்பு வசதி, சரியான வழிகாட்டுதல்களுடன் இங்கே பயணம் செய்தால் கோடை காலத்தை இயற்கை அழகுடன் செலவழிக்க இது ஒரு அருமையான சுற்றுலா தளம்.
0 Comments