பேத்தை மீன் ( "Puffer Fish" )பற்றிய சுவாரசியமான 10 தகவல்கள்10 Facts About "Puffer Fish"

 இது ஒரு வகை விநோதமான கடல் மீனாகும். இதை ஆங்கிலத்தில் ( Puffer Fish ) பேத்தை, தவளை மீன், முள்ளம்பன்றி மீன் என வித்தியாசமான பெயர்களால் அறியப்படுகிறது. அதிக நச்சுத்தன்மை கொண்ட மீனினங்களில் இதுவும் ஒன்று. இந்த மீனை பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

# கடலில் ஆழம் குறைந்த இடத்தில் வாழக்கூடிய இந்த மீன், தன் உடலைக்கட்டிலும் 10 மடங்கு பெரிது படுத்திக்கொள்ளும்  தன்மை கொண்டது.

# இந்த மீனில் 190 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளது, ஒவ்வொன்றும் பல வண்ணங்களில், வித்தியாசமான உடலமைப்புடன் காணப்படுகிறது.

# இந்த மீன் கடலில் மிகவும் மெதுவாக நீந்தக்கூடியது, இதில் சில வகை மீன்களின் உடலின் மேற்பகுதியில் நிறைய முட்களால் சூழப்பட்டிருக்கும். முட்கள் படுக்கை நிலையில் இருப்பதால் நீந்துவதற்கு எந்த பிரச்னையும் ஏற்படுவதில்லை.


# தன்னை மற்றவரிடம் காத்துக்கொள்ளவே இப்படி தன் உருவத்தை பெரிதாக்கிக்கொள்கிறது.

# இந்த மீனின் நச்சு தன்மையானது 30 பேரைக் கொள்ள போதுமானது. இதன் தலைப்பகுதியை மிகவும் அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது.

# ஜப்பானில் ( Fugu ) என்ற பெயரில் இந்த மீன் அறியப்படுகிறது. அதிக விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும் ஆண்டுக்கு 10,000 டன் உணவாக இந்த மீன் உட்கொள்ளப்படுகிறது.

# இந்தியாவில் விலை குறைவாக கிடைக்கும் இந்த மீனுக்கு ஜப்பானில் 20$ வரை விலை போகிறது.

# இந்த மீனை சமைப்பதற்கென தனி படிப்பே ஜப்பானில் உள்ளது, அந்த படிப்பை முடித்தவர்கள் மட்டுமே ரெஸ்டாரண்ட்களில் இந்த மீனை சமைக்க அனுமதிக்கப்படுகின்றனர். சமைப்பவர் ஏதேனும் தவறு செய்தால், சாப்பிடுவோருக்கு அதுவே கடைசி விருந்து.

# நச்சுத்தன்மை காரணமாக கடலில் எந்த பெரிய மீனும் இதை உண்ணாது, தவறி விழுங்கி விட்டால் ஊதி பெரிதாகி அந்த மீனையே கொன்று விடும்.


தமிழில் வீடியோவை காண இங்கே கிளிக் செய்யுங்கள்  

# இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று இதன் பற்கள். இந்த மீன்களின் பற்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. செம்மீன், பூச்சி, பூரான் என எது கிடைத்தாலும் துண்டு துண்டாக நறுக்கி விடும். சில்வர் டின்களில் வரும் பெப்ஸி, கோக் பாட்டில்களை கடித்து நொறுக்கக்கூடிய பல வீடியோக்களை நாம் இணையதளத்தில் காண முடியும்.

குறிப்பு: இந்த மீன்கள் சாப்பிடக்கூடியதே.. பெரும்பாலும் இந்தியாவில் தலையை வெட்டிய நிலையில் விற்பனைக்கு வருகிறது, ஒரு வேலை வெட்டாத நிலையில் நீங்கள் இதை வாங்கினால் இதன் தலையை சரியான முறையில் வெட்டி சுத்தம் செய்யவும்.  இல்லையென்றால் உணவு நஞ்சாக மாறிவிடும்.

Post a Comment

0 Comments