Top
Read more at:
Read more at:
Top
Read more at:
Read more at:
Top
Read more at:
Read more at:
Top 10 Deepest Hole in The World By Man Hand
நாம் வசிக்கும் உலகமானது பல அசாதாரண படைப்புகளை கொண்டுள்ளது. நம்மை தாண்டி ஏதோ ஒரு ஆற்றல் சக்தி உலகை ஆள்கிறது என்பதை இதன் மூலம் நாம் அறியலாம். உலகில் ஏற்படும் காலமாற்றங்கள் மற்றும் பேரழிவுகள் ஏதாவதொரு சுவடை விட்டுச்செல்கிறது.![]() |
photo via topscience.net |
மனிதனும் தன் பங்கிற்கு இயற்கை வளங்களை தேடியும், கனிமங்களை தேடியும் இந்த பூமியை தோண்டிக்கொன்டே இருக்கிறான். இத்தகைய செயல்கள் சில அசாதாரணமான படைப்புகளாக உருமாறி விட்டது. இயற்கை சக்தியாலும், மனிதனாலும் ஏற்படுத்தப்பட்ட மிக அபாயகரமான மிகப்பெரிய ( Sinkholes )புதைகுழியை பற்றி தான் இங்கு காண உள்ளோம்.
10. க்ளோரி ஹோல் ( Monticello Dam )
![]() |
photo via Die Hard Survivor |
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமைந்துள்ளது மொண்டிசெலோ அணை (Monticello Dam ). அணையின் நீர்மட்டம் உயரும் போது அதை கட்டுப்படுத்தவும், அதிகப்படியான நீரை வேறு நீர்நிலைகளுக்கு மாற்றவும் கட்டப்பட்டது தான் இந்த க்ளோரி ஹோல். இது 78 அடி விட்டமும் 28 அடி ஆழமும் கொண்டது. அணை நிறையும் போது அதிகப்படியான நீர் அதிவேகத்துடன் இதில் விழும் அந்த காட்சி ஒரு பிரம்மாண்டமான நிகழ்வாக தோற்றமளிக்கிறது. அணையின் இந்த குளிப்பதற்கு அனுமதி கிடையாது. இந்த க்ளோரி ஹோலை காண்பதற்காகவே சுற்றுலா பயணிகள் இந்த அணைக்கு வருகை தருகின்றனர்.
![]() |
photo via Smithsonian Magazine |
துர்க்மெனிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியின் போது ஏற்பட்ட விபத்தில் இந்த பள்ளம் உருவானது. இந்த பள்ளத்தின் நீளமானது 69 மீட்டர் ( 266 அடி ), ஆழம் 30 மீட்டர் அதாவது சுமார் 98 அடி. தொடர்ந்து மீத்தேன் வாயு கசிந்து வருவதால் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக எரிந்த நிலையில் காட்சியளிக்கிறது. தற்போது இந்த இடம் ஓர் பிரபலமான சுற்றுலா தளமாக அறியப்படுகிறது.
8. குவாதமாலா பள்ளம் ( Sinkhole in Guatemala )
![]() |
photo via topscience.net |
2010 ல் சென்ட்ரல் அமெரிக்காவிற்கு அருகே அமைந்துள்ள Guatemala ல் ஏற்பட்ட மிகப்பெரிய சூறாவளி புயலால் நகரத்தின் நடுவே மிகப்பெரிய ஓர் பள்ளம் உருவானது. இந்த பள்ளம் 65 அடி அகலமும் 300 அடி ஆழமும் கொண்டது. 2007ல் கழிவு நீர் வெளியேற்றத்திற்காக 100 அடி ஆழத்தில் பள்ளம் உருவாக்கப்பட்டுள்ளது. அப்போதே சில எரிமலை லாவாவுடைய சாம்பல் கிடைத்துள்ளது. பிறகு அந்த இடத்தில ஏற்பட்ட தொடர் புயலால் இத்தகைய மிகப்பெரிய பள்ளம் உருவானது.
![]() |
photo via Wikipedia |
கனடாவில் உள்ள மிகப்பெரிய வைர சுரங்கம் டிவிக். 1992 ல் இங்கு ஆராயப்பட்டு 2003 ல் சுரங்கம் தோண்டப்பட்டது. இந்த சுரங்கத்தின் ஆழம் தற்போது 600 அடியை தாண்டி விட்டது. உலகின் மிகவும் ஆழமான பகுதிகளில் இதுவும் ஒன்று. இங்கே நிர்வாக அலுவலக கட்டிடங்கள் , மிகப்பெரிய கொதிக்கலன்கள், தண்ணீர் சேமிப்பு கிடங்குகள் மற்றும் வேலையாட்கள் தங்குவதற்கான இருப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 2015 ல் 187.7 கேரட் மதிப்புள்ள வைரம் கண்டுபிடிக்கப்பட்டதாக இதன் உரிமையாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
![]() |
photo via Rooms for Africa |
கிம்பெர்லே தென் ஆப்ரிக்காவில் அமைந்துள்ள ஓர் நகரம் ஆகும். நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கு செயல்பட்ட வைர சுரங்கத்தால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறியப்படுகிறது. 1871 முதல் 1914 வரை 50000 பணியாளர்கள் இந்த சுரங்கத்தில் வேலை செய்தனர். தற்போது இந்த இடம் பூமியில் துளையிடப்பட்டது போல் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. தற்போது இதன் ஆழம் 705 அடியாக உள்ளது. மனிதனால் உருவான உலகின் மிகப்பெரிய பள்ளமாக அறியப்படுகிறது. 2004 ஆம் ஆண்டு இதை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவித்தது.
5. தி கிரேட் ப்ளூ ஹோல் ( Great Blue Hole )
![]() |
photo via Cahal Pech Village Resort |
பெலிஸ் சிட்டி நகரத்திலிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது லைட்ஹவுஸ் ரீஃப் தீவு. இந்த பிரமாண்டமான புதைகுழியானது 318 மீட்டர் (1,043 அடி ) விட்டமும், 124 மீட்டர் (407 அடி ) ஆழமும் கொண்டது. ஆராய்ச்சியாளர்கள் இந்த பகுதியானது ( stalactites ) எனும் முறையில் தோன்றியிருக்கலாம் என கருதுகின்றனர்.
கடல் வெள்ளத்தில் மூழ்கிய கடற்குகைகளின் மேற்பகுதியே இதை ஓர் பிரம்மாண்டமான புதைகுழி போன்ற வடிவத்தில் காட்சியளிக்கிறது.
4. மிர்னி மைன் வைர சுரங்கம் ( Mir mine, Russia )
![]() |
photo by Interesting Engineering |
3. உட்சனயா பைப் ( Udachnaya pipe, Russia )
![]() |
photo via Alrosa |
ரஷ்யாவின் ஆர்டிக் சர்கிலில் அமைந்துள்ளது இந்த வைர சுரங்கம். ஜூன் 15, 1955 ல் நிலவிவியல் வல்லுநர் விளாடிமிர் சுசின் மற்றும் அவருடைய அணியினர் இதை கண்டறிந்தனர். அடுத்த இரண்டு நாட்களில் தோண்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சுரங்கத்தின் தற்போதைய ஆழம் 1970 அடி .
2010 ல் இந்த சுரங்கம் அல்ரோசா டைமண்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. ஏறத்தாழ 225.8 மில்லியன் கேரட் வைரங்களை இந்த சுரங்கத்தின் மூலம் பெறப்பட்டுள்ளது.
2. சுகிகமடா ( Chuquicamata Copper Mine )
![]() |
Add caption by Minube |
மனித படைப்பில் உருவான உலகின் மிகப்பெரிய மற்றும் 2 வது பெரிய ஆழமான பள்ளம் இதுவாகும். சிலியின் வடக்கு பகுதியில் இந்த சுரங்கம் அமைந்துள்ளது. உலகின் அதிகமான காப்பர் மூலங்கள் இந்த சுரங்கத்திலிருந்து கிடைக்கிறது. இதன் ஆழம் சுமார் 2780 அடி ஆழம் .
1. பிங்ஹாம் கென்யான் சுரங்கம் ( Bingham Canyon Mine )
![]() |
photo via Axiom Images |
பெரும்பாலும் கென்கோட் காப்பர் சுரங்கம் என அறியப்படும் இந்த சுரங்கம் தான் உலகின் மிகப்பெரிய மற்றும் மிக ஆழமான பள்ளம் ஆகும். இதன் பரப்பளவானது 13120 அடி விட்டமும், 3180 அடி ஆழமும் கொண்டது. உலகில் பெறப்படும் காப்பர்களில் இதன் பங்கு முதன்மையானது. 19 மில்லியன் டன்களுக்கும் மேலாக இங்கே காப்பர் பெறப்பட்டுள்ளது. 1848 ல் இந்த சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டு 1906 முதல் செயல்பட துவங்கியது. 2006 ல் மட்டும் இந்த சுரங்கத்தில் கிடைத்த கனிமங்களின் மதிப்பு 1.8 பில்லியன் டாலர்கள்.
0 Comments