Top 10 Websites in The World
இணையத்தளம் என்பது இன்றய தலைமுறையின் வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இணையதள வசதியுடன் உங்களிடம் ஒரு ஸ்மார்ட் ஃபோன் இருந்தால் உலகமே உங்கள் கைகளில் அடக்கம். சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் இளம் பெண்கள் தனது உறவுகள், ஷாப்பிங், பிற சொத்துக்கள் இவை எல்லாவற்றையும் விட தாங்கள் அதிகம் விரும்புவது இணையத்தளத்தில் நேரத்தை செலவிடுவதைத்தான்.
அந்த சர்வேயில் பல பெண்கள் தன் காதலன் இல்லாமல் கூட இருக்க முடியும், ஆனால் இணைய வசதி இல்லாமல் இருக்க முடியாது என கருத்து கூறுகின்றனர்.
இப்படி உலகையே தன் வசம் வைத்துள்ள இணையத்தளத்தில் மக்கள் விரும்பும் டாப் 10 இணைய தளங்கள் பற்றி இங்கே காண உள்ளோம். அலெக்ஸா என்ற இணையதளம் உலகில் உள்ள அணைத்து இணைய தளங்களையும் கவனித்து வருகிறது. அவற்றின் தரம், மக்களிடத்தில் உள்ள செல்வாக்கு, அதிக மக்களால் உபயோகப்படுத்துதல், தனித்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தர வரிசை அளிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் டாப் 10 இணையதளங்கள் பற்றி இங்கே காணலாம்.
10. அமேசான் ( Amazon )
![]() |
pics from wvlt.tv |
அமேசான் உலக அளவில் மிகப்பெரிய நிறுவனம். ஆன்லைன் வர்த்தகம், வெப் சர்வீசஸ், கிண்டல் புக் ஸ்டார், இசை மற்றும் பல தரப்பட்ட ஆன்லைன் சேவைகளை அளித்து வருகிறது. இதன் மூலம் 2019 ல் உலக மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் இணையத்தளமாக 10 வது இடத்தில உள்ளது.
9. யாஹூ ( Yahoo )
![]() |
pics from www.youtube.com |
கூகிளுக்கு அடுத்த படியாக மக்களால் அதிகம் அறியப்பட்ட தேடுதல் தளம் யாஹூ. வெப் சர்வீசஸ், யாஹூ மெயில், யாஹூ குரூப்ஸ், விளம்பரம் என நிறைய இணைய சேவைகளை மக்களுக்கு செய்து வருகிறது.
8. டீமால் ( Tmall.com )
![]() |
pics from Wikipedia |
சீனாவை மையமாக வைத்து செயல்படும் ஒரு இணையத்தளம் டீமால் ( Tmall.com ). அலிபாபா குரூப்களால் இயக்கப்படும் இந்நுறுவனம் மிகப்பெரிய வியாபார தளமாக உள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக தளங்களில் இதுவும் ஒன்று. 2018 பிப்ரவரியில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி 500 மில்லியனுக்கும் அதிகமான வாசகர்களை கொண்டுள்ளது.
7. டபோ ( Taobao )
![]() |
pics from WHY EC4U |
உலகின் மிகப்பெரிய வர்த்தக இணையதளமான Taobao, உலக அளவில் அதிக மக்கள் வருகை தரும் 8 வது இணைய தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 ன் கணக்கெடுப்பின்படி 670 மில்லியன் வாசகர்களை கொண்டுள்ளது.
6. டென்சென்ட் ( Tencent QQ )
![]() |
pics from China Internet Watch |
உலக அளவில் மிகப்பெரிய தகவல் பரிமாற்ற வசதிகளை வழங்கி வருகிறது. மேலும் ஆன்லைன் விளையாட்டுகள், ஷாப்பிங், இசை உள்ளிட்ட பல வசதிகளை அளித்து வருகின்றனர். 2014 ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 899 மில்லியன் அக்கௌன்ட்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
5. விக்கிப்பீடியா ( Wikipedia )
![]() |
pics from Wikipedia |
விக்கிப்பீடியா உலகில் மிகவும் அறியப்பட்ட, மிகவும் பிரபலமான ஒரு இணையத்தளம். 2001 ல் தொடங்கப்பட்ட இது ஒரு நாளைக்கு 500 மில்லியன் மக்கள் வருகைய பெற்றுள்ளது. பிரபலங்கள் முதல் உலகின் எண்ணற்ற தகவல்களை இதன் மூலம் பெறலாம்.
4. பைடு ( Baidu )
![]() |
pics from www.zdnet.com |
2000 ல் துவங்கப்பட்ட இந்த தளம் சீனாவை மையமாக கொண்டு செயல்படும் மற்றும்மொரு மிகப்பெரிய நிறுவனம். உலக அளவில் 2 பில்லியன் மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது.
3. முகநூல் ( Facebook )
![]() |
pics from www.cnet.com |
இதற்கு அறிமுகமே தேவையில்லை, அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமான ஓர் சமூக வலைத்தளம். மார்க் சுகன்பெர்க்கால் 2004 ல் அறிமுகம் செய்யப்பட இந்த வலைத்தளம் இவரை உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக ஆக்கிவிட்டது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அண்மையில் பதிவு செய்யப்பட்ட தகவலின் அடிப்படையில் மாதத்திற்கு சராசரியாக 2.2 பில்லியன் மக்களை ஆட்கொண்டுள்ளது.
2. யூடியூப் ( YouTube )
![]() |
pics from www.youtube.com |
இது ஓர் அமெரிக்கன் வீடியோ ஷேரிங் கம்பெனியின் இனைய தளம். 2006ல் 1.6 பில்லியன் அமெரிக்கா டாலருக்கு கூகிள் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. 2017 ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஒவ்வொரு நிமிடமும் 400 மணி நேரம் ஓடக்கூடிய வீடியோக்கள் பதிவு செய்யப்படுகிறது. உலகில் மிகவும் அதிகமாக அறியப்பட்ட ஓர் இணையதளமாக இருக்கக்கூடிய யூடியூப் மக்கள் பயன்படும் வண்ணம் ஆன்லைன் மூலம் பணம் ஈட்டும் வாய்ப்பையும் அளித்து வருகிறது.
1. கூகிள் ( Google )
![]() |
pics from thenextweb.com |
1998 ல் தொடங்கப்பட்ட இந்நுறுவனம் இன்று வரை உலகின் அசைக்க முடியாத ஒரு தேடல் இயந்திரமாக உள்ளது. பல ஆன்லைன் சேவைகளை கூகிள் நிறுவனம் வழங்கி வருகிறது. பல மக்களின் அறிவுக்களஞ்சியமாக இது பார்க்கப்படுகிறது. ஒரு வினாடிக்கு 40,000 முறை இந்த தளம் பயன்படுத்தப்படுகிறது. கூகிள் தேடல் தளம் மூலம் ஒரு நாளைக்கு 3.5 பில்லியன் முறை மக்களால் தேடப்படுகிறது மேலும் ஒரு வருடத்திற்கு 1.2 டிரில்லியன் எண்ணிக்கையில் இந்த தளம் மக்களால் பயன்படுத்தப்படுகிறது.
0 Comments