உலகின் சக்தி வாய்ந்த டாப் 10 விலங்குகள்


 Top 10 Strongest Animals in The World in Tamil


உலகின் சக்தி வாய்ந்த விலங்கு எது என்று உங்களிடம் கேட்டால் நீங்கள் எதை சொல்வீர்கள்?? கண்டிப்பாக உங்களது பதில் யானையாக இருக்கலாம் அல்லது சிலருக்கு சிங்கம் என்று இருக்கலாம். இரண்டுமே கிட்டத்தட்ட சரியாக இருந்தாலும், தன் உடல் எடையைக்கட்டத்திலும் பல மடங்கு எடையுள்ள ஒரு பொருளை சுமந்து செல்லுதல், கையாளும் திறன் போன்றவற்றை காணும்போது யானையை விட உருவத்தில் சிறிய விலங்குகள் இந்த பட்டியலில் முந்திக்கொள்கிறது. உலகின் டாப் 10 சக்தி வாய்ந்த விலங்குகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

10. பழுப்பு நிற கரடி ( Grizzly bear )

photo via Discovery

உலகின் மிகவும் பலம் வாய்ந்த விலங்குகளில் கரடியும் ஒன்று. வளர்ந்த பழுப்பு நிற கரடிகள் சராசரியாக 180 முதல் 350 கிலோ வரை எடை இருக்கும். நின்ற நிலையில் 6.8 அடி உயரம் இருக்கும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த கரடிகளின் நகங்கள் 2 முதல் 4 இன்ச் வரை நீளம் கொண்டது. இதனால் 500 கிலோ எடை வரை தூக்க இயலும். அதாவது, 0.8 மடங்கு அதிக எடையை தூக்க முடியும்.

9. அனகோண்டா ( Anaconda )
 
photo via Goway - Goway Travel


பாம்பு இனங்களில் மிகவும் சக்தி வாய்ந்தது அனகோண்டா வகை பாம்புகள். இவற்றில் பல வகை இனங்கள் காணப்படுகிறது. வளர்ந்த பாம்புகள் சுமார் 250 கிலோ எடை இருக்கும். இவற்றில் பெண் பாம்பு தான் அதிக நீளம் வளரக்கூடியது. மிகப்பெரிய இந்த இனம் 30 அடி நீளம் வளரக்கூடியது. இதன் அளவை விட பெரிய விலங்குகளை கூட வேட்டையாடும் சக்தி கொண்டது.

8. அமெரிக்க ஆக்ஸ் எருமை ( Muskox )

photo via Flickr


இது அமெரிக்காவில் காணப்படும் மிகப்பெரிய காட்டெருமை ஆகும். சராசரியாக 180 முதல் 410 கிலோ எடை இருக்கும் இவை அதிகபட்சம் 6.6 அடி உயரம் இருக்கும். சுமார் 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. இந்த காட்டெருமை தன்னை விட 1.5 மடங்கு எடையுள்ள ஒன்றை ஸ்தம்பிக்க செய்யும் திறன் கொண்டது.

7. யானை ( Elephant )

photo via Mother Nature Network


நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகவும் பலம் வாய்ந்த விலங்காக யானை அறியப்படுகிறது. 10 முதல் 13 அடி உயரமும், 4.3 முதல் 6 டன் எடையும் கொண்டது. இது 130 வளர்ந்த மனிதர்களின் எடைக்கு சமனானது. இது தன் உடல் எடையை விட 1.5 மடங்கு அதிக எடையை தூக்கும் சக்தி கொண்டது.

6. புலி ( Tiger )

photo via en.wikipedia.org


பூனையினங்களில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த விலங்கு புலி. வளர்ந்த சைபீரியன் புலி 3.5 மீட்டர் நீளமும் 300 கிலோ எடையும் இருக்கும். இது கடிக்கும் விசை சுமார் 3700 பவுண்டுகள் இருக்கும். 550 கிலோ உள்ள இரையை இழுத்துச்செல்லும் சக்தி கொண்டது.

5. கழுகு ( Eagle )

photo via birdguides.com


பறவை இனங்களில் தனித்தன்மையும், சக்தி வாய்ந்ததும் கழுகு தான். இதன் கால்களின் பிடிப்பானது 10 மனிதர்களின் கால் பிடிமானத்திற்கு சமமானது. இது தன் எடையை விட 4 மடங்கு எடை கொண்ட இரையை தூக்கி செல்லும் வல்லமை கொண்டது.

4. கொரில்லா ( Gorilla )

photo via Mom.me

ஒரு வளர்ந்த கொரில்லா 135 முதல் 195 கிலோ எடை இருக்கும். இது வளர்ந்த 5 முதல் 10 மனிதர்களுக்கு இணையான சக்தி கொண்டது. 200 கிலோ எடை கொண்ட கொரில்லா தன்னை விட 10 மடங்கு எடையை தூக்கும் சக்தி கொண்டது. அதாவது சுமார் 2000 கிலோ.

3. இழை வெட்டு எறும்பு ( Leafcutter ant )

photo by Rice News - Rice University


இந்த எறும்பானது தன் உடல் எடையை விட 50 மடங்கு அதிக எடையை தன் தடைகளின் மூலம் சுமந்து செல்கிறது. இது ஒரு மனிதன் டிரக்கை தூக்கி சுமப்பதற்கு சமமானது.

2. காண்டாமிருக வண்டு ( Rhinoceros Beetle )

photo by pinterest.com


இந்த வண்டு தன் எடையை விட 850 மடங்கு அதிக எடை கொண்ட பொருளை சுமக்கும் சக்தி படைத்தது. மனிதனோடு ஒப்பிடும்போது, ஒரு தனிமனிதன் 65 டன் எடையை தூக்கி சுமப்பதற்கு சமமாகும்.1. சாணம் வண்டு ( Dung beetle ) 

photo via discovermagazine.com


இந்த உயிரினம் தான் உலகின் மிகவும் வலுவான விலங்கு. இது தன் எடையை விட 1141 மடங்கு அதிக எடை கொண்ட பொருளை தள்ளிச்செல்ல முடியும். இது ஒரு மனிதன் ஆறு இரட்டை அடுக்கு கொண்ட பேருந்தை நிரம்பிய பயணிகளுடன் இழுத்துச்செல்வதற்கு சமமானதாகும்.
Post a Comment

0 Comments