உலகின் டாப் 10 விலையுயர்ந்த சொகுசு பங்களாக்கள்

Top 10 Most Expensive Homes in The World

தனது வாழ்வாதாரத்திற்காக மனிதன் ஒரு நாளைக்கு 8 முதல் 16 மணி நேரம் வரை உழைக்கிறான். இப்படி உழைக்கும் மனிதனிடம் உனது அதிகபட்ச ஆசை என்ன என்று கேட்டால், தனக்கென ஒரு கனவு வீட்டை உருவாக்குவது தான் என தயங்காமல் கூறுவான்.


photo via CrazyAsk
வரலாற்றை பார்க்கும் போது அரசர்கள், ராணிகள் மிகப்பெரும் நாட்டின் தலைவர்கள் போன்றோர் தனக்கென மிக பிரம்மாண்டமான அரண்மனை மற்றும் கோட்டையை எழுப்பியிருந்தினர். இது அவர்களுடைய இருப்பிடம், பாதுகாப்பு இவற்றை தாண்டி தனது நாட்டின் கட்டடக்கலையையும், தங்களது பொருளாதார சக்தியையும் பறைசாற்றும் வகையில் இருந்தது. தற்போது இந்த 21 ஆம் நூற்றாண்டில் நாட்டின் மிகப்பெரிய செல்வந்தர்களாக இருப்பவர்கள் அரண்மனையை போன்ற மிகப்பெரிய வீடுகளை கட்டி எழுப்பியுள்ளனர். 2019 ல் உலகின்  மிகவும் விலையுயர்ந்த சொகுசு வீடுகளின் பட்டியலை இங்கே காணலாம்.

10. 17 upper phillimore gardens ( 128 மில்லியன் டாலர் )


photo via BakLOL

photo via myfancyhouse.com
இந்த வீடு லண்டனில் அமைந்துள்ளது, ஒரு காலத்தில் ஆரம்ப பள்ளிக்கூடமாக இருந்த இந்த இடம் தற்போது மிகவும் ஆடம்பரமான 10 அறைகளை கொண்ட சொகுசு பங்களாவாக மாறிப்போனது. உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபராக அறியப்படும் பெண் எலினா பிரான்சேச். இந்த வீட்டின் கீழ் தளத்தில் உடற்பயிற்சி கூடம், ஆடம்பர குளியல் அறை, நீச்சல் குளம், திரையரங்கம் மற்றும் ஓய்வறைகள் அமைந்துள்ளன. இந்த வீட்டின் உள் அறைகள்  மார்பில் மற்றும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டின் மதிப்பு இந்திய மதிப்பில் 913 கோடி ருபாய்.

9. hearst castle ( 130 மில்லியன் டாலர் )

photo via commons.wikimedia.org
photo via Mustang News

கலிஃபோர்னியாவின் சான் சிமியன் பகுதியில் இந்த வீடு அமைந்துள்ளது. 1919 முதல் 1947 வரை பத்திரிக்கை துறை அதிபரான வில்லியம் ரெண்டோல்ப் ஹெர்ஸ்ட் அவர்கள் இந்த வீட்டில் வசித்து வந்தார். 1951ல் இவரின் மறைவிக்குப்பிறகு கலிஃபோர்னியாவின் மாநில பூங்காவாக 1958 ல் இந்த வீடு மாற்றப்பட்டது. 127 ஏக்கரில் தோட்டம், இரண்டு நீச்சல் குளம், நீண்ட நடைபாதை மேலும் பழம் பொருட்களால் அலங்கரிக்கப்பட்ட மூன்று விருந்தினர் மாளிகைகள், திரையரங்கம், பூங்காக்கள் உள்ளிட்டவை இதில் அடக்கம். இந்த வீட்டின் மதிப்பு இந்திய மதிப்பில் 982 கோடி ருபாய்.

8. Kensington Palace Gardens ( 150 மில்லியன் டாலர் )
 
photo by Lawray Architects
photo by Shaftesbury Hotels


இந்த கென்சிங்டன் பேலஸ் மேற்கு சென்ட்ரல் லண்டனில் அமைந்துள்ளது. உலகின் மிகவும் விலை உயர்ந்த வீடுகளில் இதுவும் ஒன்று. இரண்டாம் உலகப்போர் மற்றும் பனிப்போரின் போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இந்த இடம் பயன்படுத்தப்பட்டது. இந்த இடம் அந்த நகரத்தின் மிகவும் பிரத்தியேகமான அறியப்பட்ட முகவரியாக உள்ளது. உலகின் மிகவும் விலையுயர்ந்த வீடுகளின் அடைக்கலமாக இந்த கார்டன் ஸ்ட்ரீட் அறியப்படுகிறது. கடந்த 2012 லேயே இந்த இடத்தின் சராசரி மதிப்பானது 22 மில்லியன் டாலரை தாண்டியது. இந்த பேலஸ் முழுவதும் மார்பில் மற்றும் தூண்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்கே 18 சொகுசு அறைகள், நீச்சல் குளங்கள், ஆடம்பர குளியலறை உட்பட பல அம்சங்கள் உள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை 1071 கோடி.

7. Seven the Pinnacle ( 155 மில்லியன் டாலர் )

photo via World Luxury Home
photo via Picfuno.com


மோண்டனாவில் அமைந்துள்ள எல்லோ ஸ்டோன் கிளப்பின் மிகப்பெரிய சொத்து இது. ஸ்கை மற்றும் கோல்ப் விளையாட்டுகளில் பங்கு பெரும் உலகின் பணக்கார சீமான்கள் தங்குவதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது இந்த பகுதி. 120 க்கும் மேற்பட்ட அறைகளை கொண்ட இந்த வீட்டின் ஒவ்வொரு அறையும் 57,000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடு மலையடிவாரத்தில் சுற்றிலும் பனியால் மூடப்பட்ட நிலையில் அமைந்துள்ளது. கதகதப்பான சூட்டை வெளிப்படுத்தும் வகையில் இதன் தரைப்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே உடற்பயிற்சி கூடம், மசாஜ், நீச்சல் குளம் மற்றும் ஒவ்வொரு அறையிலும் குளிர் காயும் ( fireplace ) வசதி செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இந்த வீட்டின் விலை 1106 கோடி.

6. Ellison Estate ( 200 மில்லியன் டாலர்கள் )

photo via wsj.com
photo via Wall Street Journal


உலகின் பணக்காரர்களின் ஒருவரும் ஒரகல் நிறுவனத்தின் துணை தலைவருமான லெரி எலிசனின் வீடு தான் இது. கலிஃபோர்னியாவின் உட்சைட் என்ற இடத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. 23 ஏக்கர் நிலத்தில் 10 கட்டிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது, மேலும் இதனை சுற்றி மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை ஏரி அமைக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் மிகச்சிறந்த கலைஞர்களால் இந்த கட்டுமானம் ஏற்படுத்தப்பட்டுள்ளது மேலும் இந்த வீடு 7.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தாங்கக்கூடியது. இந்திய மடிப்பில் இதன் விலை 1427 கோடி .

5. Fair Field Mansion ( 250 மில்லியன் டாலர்கள் )

photo via pinterest.com
photo via Luxury Portfolio

உலகின் மிகவும் விலை உயர்ந்த வீடுகளில் உலக பணக்காரர்களில் ஒருவரான இரா லியோன் ரெனொர்ட்டுக்கு சொந்தமான ஃபேர் ஃபீல்டு மேன்சனும் ஒன்று. நியூயார்க்கில் சுமார் 64,000 சதுர அடியில் இந்த வீடு அமைந்துள்ளது. 2 டென்னிஸ் மைதானங்கள், 2 ஸ்குவாஷ் மைதானம், 3 நீச்சல் குளங்கள், ஒரு கூடைப்பந்து மைதானம், 29 சொகுசு அறைகள் மற்றும் 39 சொகுசு குளியலறைகள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்திய மதிப்பில் இந்த வீட்டின் மதிப்பு 1784 கோடி.

4. Rutland Gate ( 365 மில்லியன் டாலர்கள் )

photo by Pinterest
photo by PrimeLocation


லண்டனில் அமைந்துள்ளது இந்த சொகுசு வீடு. லெபனானின் முன்னாள் பிரதம மந்திரியும், மிகப்பெரிய தொழிலதிபராக இருந்த ரபீக் ஹாரிஸுக்கு சொந்தமான இந்த வீடு, இவரது மறைவிற்குப்பிறகு சவுதி மன்னரான சுல்தான் பின் அல்ஹஜிஜுக்கு பரிசளிக்கப்பட்டது. 60,000 சதுர அடியில் 45 சொகுசு அறைகளும், தரை தளத்தில் மிகப்பெரிய நீச்சல் குளமும், சமையல் அறையும் உள்ளது. இந்த வீட்டின் குளியலறை மற்றும் குளியலறைகள் தங்கம், வெள்ளி போன்றவற்றால் அலங்கரிக்கபட்டுள்ளது. இந்த வீட்டின் ஜன்னல்கள் புல்லட் புரூப் பாதுகாப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இந்த வீட்டின் விலை 2606 கோடி.

3. Villa Leopolda ( 750 மில்லியன் டாலர்கள் )

photo via amazing.zone
photo via Edge Retreats


முன்னர் லியோபோல்ட் மன்னருக்கு சொந்தமாக இருந்த இந்த கட்டிடம் 1902 ஆண்டு கட்டப்பட்டது. இங்கே 1948 ல் புகழ் பெட்ரா ஹாலிவுட் படங்கள் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு தனிப்பட்ட வசிக்கும் வீடாக உலகின் மிகவும் விலை உயர்ந்த வீடுகள் பட்டியலில் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில உள்ளது. 19 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த வீட்டில் 19 சொகுசு அறைகள் உள்ளது. விளையாட்டு மைதானங்கள், திரையரங்கங்கள், நீச்சல் குளங்கள், பசுமையான தோட்டங்கள் மற்றும் மார்பிலில் செய்யப்பட்ட கலைநயமிக்க வேலைப்பாடுகள் இந்த வீட்டின் சிறப்பு. இந்திய மதிப்பில் இந்த வீட்டின் விலை 5354 கோடி.

 2. Antilia ( 1 பில்லியன் டாலர்கள் )

photo via Business Today
photo via Booking.com

இந்த வீடு இந்தியாவின் நம்பர் 1 பணக்காரரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது. 29 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகின் டாப் 20 பணக்காரர்களில் ஒருவர். மும்பையின் டோனி அல்டமௌன்ட் ரோட்டில் அமைந்துள்ளது இந்த சொகுசு கோபுரம். 4,00,00 சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் 165 கார்கள் பார்க்கிங் செய்யும் வசதி, 3 ஹெலிகாப்டர்கள் இறங்கும் வசதி, கோவில், யோகா பயிற்சி கூடம், நீச்சல் குளங்கள், ஐஸ் அறைகள், 50 பேர் அமரும் வகையில் திரையரங்கள், இவை அனைத்திற்கும் மேல் 24 மணி நேரம் இந்த கட்டிடத்தை பராமரிக்கும் பணியில் 600 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய மதிப்பில் இந்த வீட்டின் விலை 7139 கோடி.

  1. Buckingham Palace ( 2 பில்லியன் டாலர்கள் )

photo by London
photo by Business Insider

லண்டனின் வென்ஸ்மின்டெர் பகுதியில் இந்த பேலஸ் அமைந்துள்ளது. 1703 ல் உருவாக்கப்பட்ட இந்த கட்டிடம் 1761 ல் ராணி கார்லெட்டின் இருப்பிடமாகவும், 1837 ல் ராணி விக்டோரியாவின் இருப்பிடமாகவும் மற்றம் அடைந்தது. Buckingham Palace மோனார்ச்சை தலைமை இடமாக கொண்டுள்ளது. முக்கியமான அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் இங்கு நடத்தப்படுகிறது. இந்த கட்டிடத்தில் 775 சொகுசு அறைகளும், 52 ராயல் விருந்து அறைகளும், 188 சிறிய அறைகளும், 72 குளியலறைகளும் அமைந்துள்ளது. மேலும் 92 அலுவலகங்கள் உள்ளது. இந்த கட்டிடத்தின் மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் 14,728 கோடி இருக்கும்.




Post a Comment

0 Comments