உலகின் அதி வேகமான டாப் 10 விலங்குகள்


World's Top 10 Fastest Animals in Land

 நிலத்தில் வாழக்கூடிய விலங்கினங்களில் மிகவும் வேகமான டாப் 10 விலங்குகளை பற்றியும் அவற்றின் உடற்கூறுகளை பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.10. ஓநாய் ( Coyote )

photo via Deer Hunting Field

இது வடஅமெரிக்காவை சேர்ந்த ஒரு வகை ஓநாய் ஆகும். இதன் வேகம் மணிக்கு 69 km/hr (43 mph). இது மிகவும் ஆக்ரோஷமான வேட்டை விலங்கு, மனிதர்களை தாக்கக்கூடியது. பொதுவாக இது முயல் , எலி, போன்றவற்றை வேட்டையாடும்.

9. ஆப்பிரிக்க காட்டு நாய் ( african wild dog )

photo via World Wildlife Fund

இந்த வகை நாயானது மணிக்கு சுமார் 70 km/hr (44 mph) வேகத்தில் ஓடக்கூடியது. அமைதியாக பதுங்கி கூட்டமாக தாக்கக்கூடியது. சிறிய வகை மான்கள், எருமை மாடுகளை வேட்டையாடி உண்கிறது.

8. காட்டு மான் ( Elk )
 
photo via yandex.com

Elk  எனப்படும் இந்த வகை மானினங்களில் மிகவும் பெரியது. இது மணிக்கு 72.4 kph ( 45 mph ) வேகத்தில் ஓடக்கூடியது. இவற்றை வேட்டையாடும் விலங்குகளான ஓநாய், கழுதைபுலி போன்ற இவைகளிடமிருந்து தப்பிக்க வேகமாக ஓடக்கூடிய உடலமைப்பை பெற்றுள்ளது.

7. சிங்கம் ( Lion )

photo via Twitter

காட்டின் ராஜாவாக அறியப்படும் சிங்கத்தின் அதிகபட்ச வேகம் 80 kph ( 50 mph ). பலம் வாய்ந்த இரைகளை கூட கூட்டாக சேர்ந்து வேட்டையாடும் சக்தி கொண்டது.

6. காட்டு மாடு ( wildebeest )

photo via aboutanimals

 wildebeest எனப்படும் இது எதிரியிடம் தப்பிக்க அதிகபட்சம் 80 kph ( 50 mph ) வேகத்தில் ஓடக்கூடியது.

5. வரிமான்கள் ( Gazelle )

photo via World Atlas

சிறுத்தையின் முக்கிய இரையான இவைகள் 80 kph ( 50 mph ) வேகத்தில் ஓடக்கூடியது. வேட்டை விலங்கிற்கு சவால் விடும் வகையில் வளைந்து நெளிந்து ஓடும் சக்தி பெற்றது. வேட்டையாடப்படுதலின் போது இது 55 mph வேகம் வரை எட்டக்கூடியது.


4. கால் குதிரை ( quarter horse )

photo via Wikipedia

அமெரிக்க கால் குதிரை என அறியப்படும் இவை  88.5 km/h( 55 mph ) வேகத்தில் ஓடக்கூடியது. மிகவும் குறுகிய இடைவெளியில் அதிவேகத்தில் ஓடும் சக்தி பெற்றது.

3. சிறு மான் ( Springbok )

photo via Nairaland Forum

இது ஒரு வகை தாவி குதித்து ஓடும் சிறிய மானினம். அதிகபட்சமாக 90 km/h( 56 mph ) வேகத்தில் ஓடக்கூடிய இது 2 மீட்டர் அதாவது 6.7 அடி உயரம் வரை தாவி குதிக்கக்கூடியது.

2. Pronghorn Antelope 

photo via Elelur.com

மானினங்களில் மிகவும் வேகமாக ஓடக்கூடியது. அதிகபட்சமாக மணிக்கு 98 kph ( 61 mph ) வேகத்தில் ஓடும் சக்தி பெற்றது.

1. சீத்தா ( Cheetah )

phoros via Quora


இது பூனையினத்தை சேர்ந்த ஒரு வேட்டை விலங்கு. தரையில் வாழும் விலங்குகளில் இதுவே மிகவும் வேகமாக ஓடக்கூடியது. மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. பூஜ்யத்திலிருந்து 96.6 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3 வினாடியில் எட்டும் சக்தி கொண்டது.
Post a Comment

0 Comments