18 வயதிற்கு முன்னர் திருமணத்தை அனுமதிக்கும் டாப் 10 நாடுகள்


Top 10 Countries Allow to Marry Before 18 Age


திருமணம் என்பது நம் வாழ்வில் மிக மகிழ்ச்சியான ஓர் தருணம். திருமண பந்தத்தில் இணையும் ஆண், பெண் இருவரும் வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து அனைத்து காரியங்களிலும் ஒருவருடைய உரிமையை ஒருவர் பாதுகாக்க வேண்டும். இந்த திருமண பந்தத்தில் இணைய குறிப்பிட்ட வயது வரம்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது நாட்டிற்கு நாடு  வேறுபடவும் செய்கிறது. திருமண வயது வரம்பு சட்டத்தை பொறுத்த வரை மக்களிடத்தில் பொதுவாக இரு வேறுபட்ட கருத்துக்கள் இருந்து வருகிறது. நம் நாட்டில் திருமண வயது சட்டமானது ஆணுக்கு 21 மற்றும் பெண்ணுக்கு 18 என்றும் விதிக்கப்பட்டுள்ளது. இதை ஆதரிப்போரும் உள்ளனர், எதிர்ப்பவர்களும் உள்ளனர்.

இருந்தும் சட்டப்படி திருமண வயது 18 ற்கும் குறைவாக கடைபிடிக்கும் நாடுகளும் உலகில் உள்ளன. அதைப்பற்றி இந்த பதிவில் நாம் அறியலாம்.

திருமண வயது வரம்பை ஆதரிப்போர்:

நம் நாட்டின் சட்டமான குறைந்தது 18 என்ற வயது வரம்பிற்கு பல மக்களிடம் ஆதரவு உள்ளது. அவர்கள் கூறும் போது, ஒரு பெண் குழந்தை பெற்றெடுக்க, அவர்களை நன்கு வளர்க்க உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் குறிப்பிட்ட வயது அவசியம். 18 வயதிற்கு முன்னர் திருமணம் செய்வதால் உடல் ரீதியிலும் மனதாலும் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

திருமண வயது வரம்பிற்கு எதிர்ப்பு:

நம் நாட்டில் பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இளம் வயதிலேயே சினிமா, ஆன்லைன் மோகம் என இன்றய சமூகத்தினர் சீர்கேட்டில் உள்ளது. குறிப்பிட்ட வயதில் அறிய வேண்டிய இல்லறம் சம்பத்தப்பட்ட விஷயங்கள் ஆன்லைன் கலாச்சாரத்தால் 10 வயது முதலே குழந்தைகளை சென்றடைந்து விடுகிறது. போதாதென்று சினிமாவில் காட்டப்படும் ஆபாசம் மற்றும் வன்முறைக்காட்சிகள் மேலும் சமூகத்தை நாசம் செய்கிறது. எனவே, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைய திருமண வயது வரம்பில் மாற்றம் தேவை என பலர் விரும்புகின்றனர்.

18 வயதிற்கும் குறைவாக திருமண வயதை சட்டமாக கொண்டுள்ள நாடுகளின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.

ஜப்பான் ( JAPAN ):
photo via Japan travel - Lonely Planet

ஜப்பானின் திருமண சட்டப்படி ஆணிற்கு குறைந்தது 18 வயதும் பெண்ணிற்கு 16 வயதும் இருக்க வேண்டும்.

பெரு ( Peru ):
photo via Real Gap Experience

ஆண் பெண் இருவருக்கும் 16 வயது இருக்க வேண்டும்.

ரஷியா( Russia ):

photo via www.youtube.com

ரஷியாவின் திருமண சட்டப்படி குறைந்தது 18 வயது வேண்டும், இருந்தும் சில இடங்களில் 16 வயது அனுமதிக்கப்படுகிறது.

சிங்கப்பூர் ( Singapore )

photo via The Telegraph

திருமண சட்டப்படி 21 வயது இருக்க வேண்டும், ஆனால் பெற்றோரின் முழு சம்மதம் இருந்தால் 16 வயதில் திருமணம் செய்ய சட்டப்படி அனுமதிக்கப்படுகின்றனர்.

சவூதி அரேபியா ( Saudi Arabia )

photo via Arabian Business

இங்கு ஷரியத் சட்டம் அமலில் உள்ளதால் ஆண் குடும்பத்தை வழிநடத்தும் சக்தி பெற்றிருந்தால் போதும்.  பெண் பூப்பெய்திய நாளிலிருந்து அவர்கள் விருப்பத்திற்கு திருமணம் செயது கொள்ளலாம்.

யுஎஸ்ஏ ( USA )
Add caption Bridal Dream Hawaii

ஆண், பெண் இருபாலரும் 17 வயது இருந்தால் திருமணம் செயது கொள்ளலாம், பெற்றோரின் சம்மதம் இருந்தால் 16 வயதில் திருமணம் செய்ய அனுமதி உண்டு.

ஸ்பெயின் ( Spain )

Add caption Kaley…& Más

2015 ல் இருந்து திருமண வயது 18 அக மாற்றப்பட்டுள்ளது, பெற்றோரின் அனுமதி இருந்தால் பெண்ணிற்கு 14 மற்றும் ஆணிற்கு 16 வயதில் திருமணம் செய்ய அனுமதி உண்டு.

துருக்கி ( Turkey )
photo via aliexpress.com

துருக்கி நாட்டின் திருமண சட்டப்படி ஆணிற்கு 17 ம் பெண்ணிற்கு 15 வயதிலும் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.


பாகிஸ்தான் ( Pakistan ): 

photo via Daily Times

1929 சட்டவிதிப்படி ஆணிற்கு குறைந்தது 18 வயதும் பெண்ணிற்கு 16 வயதும் இருக்க வேண்டும்.

யுனைடெட் கிங்டம் ( UK )

photo via nzbzd.com

பெற்றோரின் சம்மதத்துடன் ஆணும் பெண்ணும் 16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம், தவிர 18 வயது என்பது பொதுவான திருமண வயது வரம்பு ஆகும்.Post a Comment

0 Comments