7 Countries Banned to Celebrate Valentin Day
![]() |
photo via Daily Express |
1. ரஷ்யா
![]() |
photo via Mic |
ரஷ்யாவில் பிப்ரவரி 14 கொண்டாடப்படுவதில்லை, மாறாக அவர்கள் மார்ச் 8 ஐ பெண்கள் தினமாக கொண்டாடுகிறார்கள். இந்த தினத்தில் பூக்கள், இனிப்புகள், பரிசுகள் என கணவன் மனைவியும், காதலிப்பவர்களும் பரிமாறிக்கொள்கிறார்கள்.
2. சவுதி அரேபியா
![]() |
photo via DocumentaryTube |
இந்த நாட்டில் காதலர் தினத்தை கொண்டாடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நாளன்று சிவப்பு நிறத்தில் எந்த ஒரு பரிசுப்பொருளும் விற்க அனுமதியில்லை. இதற்கு முன்னர் காதலர் தினத்தை கொண்டாடியதாக கைது செய்யப்பட்ட இருவருக்கு 10 ஆண்டு சிறையும், 2000 சாட்டை அடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது, இன்னும் இருவருக்கு 5 ஆண்டு சிறையும், 1500 சவுக்கடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
3. ஈரான்
![]() |
photo via Mic |
ஈரானில் அதிகாரபூர்வமாக தடை செய்யப்படவில்லை, இருந்தாலும் இந்த நாளில் இந்த நாளை சம்பந்தப்பட்ட வாழ்த்து மடல்களோ, பரிசுப்பொருட்களோ தயாரிப்பதற்கும், விற்பதற்கும் அனுமதியில்லை. முக்கியமாக இதய வடிவில் பலூன்கள் மற்றும் சிவப்பு ரோஜாக்கள் போன்றவை. மத கொள்கை அடிப்படையில் கட்டுப்பாடுகள் உள்ளதால் திருமணமாகாத ஆணோ, பெண்ணோ ஒன்றாக செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
4. பாகிஸ்தான்
![]() |
photo via The Independent |
பாகிஸ்தானில் இந்த நாளிற்கு எதிராக நிறைய வன்முறைகள் நடந்துள்ளன. கலாச்சாரத்திற்கும், மத சட்டங்களையும் காக்கும் பொருட்டு இந்த நாளை கொண்டாடுவதற்கு அதிகப்படியான எதிர்ப்புகள் உள்ளன. 2016 ல் பாக்கிஸ்தான் பிரதமர் மம்மூன் உசைன் கலாச்சாரத்திற்கு எதிரான இந்த நாளை கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
5. மலேசியா
![]() |
photo via BloomThis |
இங்கு 60% க்கும் மேல் இஸ்லாமியர்கள் உள்ளனர். இந்த கொண்டாட்டம் இஸ்லாமிய சட்ட மரபுகளை அவமதிப்பதாக கூறி 2005 ல் பத்வா கொடுக்கப்பட்டுள்ளது. 2011 ல் காதலர் தினத்தை கொண்டாடியதாக 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6. இந்தோனேசியா
![]() |
photo via Wedded Wonderland |
குறிப்பிட்ட மக்கள் இங்கு காதலர் தினத்தை கொண்டாடத்தான் செய்கின்றனர். குறிப்பிட்ட பிரிவினர் இதை ஓர் சமூக சீர்கேடாகவும், போதை கலாச்சாரத்தை ஊக்குவிப்பதாக கூறி எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
7. இந்தியா
![]() |
photo via rediff.com |
அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் இந்த நாளிற்கு தடை இல்லை என்றாலும் குறிப்பிட்ட சில அரசியல் அமைப்புகள், மற்றும் அரசியல் கட்சிகள் இந்த நாளில் பூங்கா மற்றும் பொது இடங்களில் கூடும் ஜோடிகளை கடுமையாக தாக்குகின்றனர். வருடந்தோறும் இந்த நாளில் வெளியே சுற்றித்திரியும் ஜோடிகள் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இந்தியாவில் இந்த நாள் ஒரு பிரச்னைக்குரிய நாளாக தலை தூக்கி வருகிறது.
0 Comments