History of The Rose City "Petra"
The "Rose City" என அழைக்கப்படும் பெட்ரா பண்டைய நாகரீகத்தின் ஒரு பொக்கிஷம். பெட்ரா என்ற சொல்லிற்கு "பாறை" என்று அர்த்தம். ஜோர்டானில், சக்கடலுக்கும் அகாபா வளைகுடாவிற்கும் இடையில் அமைந்துள்ளது இந்த நகரம்.![]() |
photos via Lonely Planet |
இந்த நகரம் கிபி 9000 ல் உருவாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது . ஜோர்டானின் முக்கிய சுற்றுதலங்களில் முதன்மையானதாக பெட்ரா அறியப்படுகிறது. 2018 ல் மட்டும் 8,00,000 மக்கள் இங்கு வருகை தந்துள்ளனர்.
குகைகள், கோவில்கள், கல்லறைகள் என அனைத்து இடங்களிலும் அந்த கால கலைஞர்களின் கை வண்ணம் கற்களின் மேல் பதிந்துள்ளது. மலையைக்குடைந்து கட்டப்பட்ட சிற்பங்கள் ஓவியங்கள் என கொள்ளை அழகை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த நகரம். அன்றைய காலத்தில் நதிக்கரை அருகில் தான் நகரங்கள் அமைந்திருக்கும். காரணம் நீர் உள்ள இடத்தில் தான் வாழ்வாதாரம் இருக்கும். பெட்ராவில் அந்த காலத்திலேயே பாசன வசதி, நீர் விநியோகம், அணைகள் என மக்களின் குடிநீர் தேவையை போக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
புதிய உலகிற்கு பெட்ரா
யாரும் கேட்பாரற்று கிடந்த இந்த நகரம் 1812 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நாடோடி லுட்விக் பாக் ஹார்ட் என்பவரால் கண்டறியப்பட்டு இங்கே ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆராய்ச்சியில் இந்த நகரம் மிகவும் செழிப்பாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மக்கள் வாழ தேவையான அனைத்து அம்சங்களும் இங்கே இருந்துள்ளது.
![]() |
photos via travelplugged.com |
அங்காடிகள், கோவில்கள் இங்கே இருந்ததற்கு ஆதாரங்கள் கண்டறியப்பட்டது. அந்த காலத்தில் வியாபாரத்திற்கு இந்த நகரை கடந்து தான் செல்ல வேண்டும். தண்ணீர் வசதி இங்கே செழிப்பாக இருந்ததால் பயணம் மேற்கொள்ளும் வியாபாரிகள் இங்கே தங்கி இருந்து சென்றுள்ளனர். இதன் காரணமாக இந்த நகரத்திற்கு ஓர் பொருளாதார மூலம் கிடைத்துள்ளது. பிற்காலத்தில் கடல் வழி பிரயாணம் அறிமுகம் ஆனதால் பெட்ராவின் பொருளாதார நிலை வீழ்ச்சி கண்டுள்ளது.
வியக்க வைக்கும் தண்ணீர் சேமிக்கும் யுக்திகள்
![]() |
photo via Stop Having a Boring Life |
![]() | ||||
photo via flickr.com |
குறைந்த மழையளவையே கொண்டிருந்த பெட்ரா, கிடைத்த நீரை சேமிக்கும் வகையில் உறுதியான பாறைகளை செதுக்கி நீர் பாசன அமைப்பை உருவாக்கியுள்ளனர். மேலும் பறையிலேயே
நீர் தேக்கங்கள், மற்றும் அணைகளையும் உருவாக்கி உள்ளனர். தற்போதும் கூட அந்த அணையை இன்றய அரசு புதுப்பித்து பயன்படுத்தி வருகிறது. கிடைக்கும் குறைந்த நீரை கொஞ்சம் கூட வீணடிக்காமல் அதை அவர்கள் பாதுகாத்த அம்சங்கள் இப்போதும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.
சுற்றுலாத்தளமாக பெட்ரா :
1985 ஆம் ஆண்டில் பெட்ரா உலகின் கலாச்சார சின்னமாக யுனெஸ்கோ அறிவித்தது. மேலும் உலகில் கட்டாயம் காண வேண்டிய இடமாக பத்திரிக்கைகளால் அலங்கரிக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் தேர்தெடுக்கப்பட்ட உலகின் 7 அதிசயங்களில் இதுவும் ஒன்று.
பெட்ராவிற்கான பயணம்
பெட்ராவை அடைய அகாபாவிலிருந்து 3 மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். அங்கே இந்த இடத்திற்கு செல்லும் நிறைய பேருந்துகள் உள்ளன, மேலும் சுற்றுலா பயணிகளுக்கான சிறப்பு டேக்சிகளும் உள்ளன.
சுற்றுலா வல்லுநர்கள் கூறுகையில், ஒரு நாள் பயணமாக பெட்ராவிற்கு செல்வது தவறான ஒன்று. இங்கே உள்ள சிறப்பம்சமே ஒட்டகம் , கழுதை மற்றும் குதிரையில் சவாரி செய்வது தான். இருந்தும் கால்நடை பயணமாக செல்வது மிகவும் நல்ல அனுபவமாக இருக்கும். இரவில் இதன் அழகை ரசிப்பது இன்னும் சிறப்பானது.
0 Comments