Most Beautiful River in The World
ஆறு, குளம் மற்றும் நீர்வீழ்ச்சி என்றாலே அழகு தான். சாதாரணமாக வார விடுமுறை வந்துவிட்டால் ஏதாவதொரு இடத்திற்கு சென்று பொழுதை கழிக்கவும், குதூகலமாக இருக்கவும் திட்டமிட்டு விடுவோம். அதிலும் வித்தியாசமான, அழகான இடங்களுக்கு செல்வதையே நாம் விரும்புவோம். அப்படி மிகவும் அழகான, நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட ஒரு நதியைப்பற்றி தான் நாம் இங்கு காண உள்ளோம்.![]() |
photo via Atlas Obscura |
நதி என்றாலே அழகு தான், அதிலும் பல வண்ணங்களில் ஒரு நதியின் நீரோட்டம் இருந்தால் எப்படி இருக்கும்... யோசித்துப்பாருங்கள்....
உண்மையிலேயே அப்படிப்பட்ட ஓர் அழகான நதியை பற்றி தான் நாம் இங்கு காண உள்ளோம்.
கொலம்பியாவின் செரணியா டிலா மேக்ரினா என்ற இடத்தில் ஓடும் கொலம்பிய ஆறுதான் கனோ கிறிஸ்டெல்ஸ் ( Cano Cristales ). சுற்றிலும் பச்சை பசேல் என்று காட்சியளிக்கும் தனிமையான ஓர் இடத்தில் அமைந்துள்ளது இந்த அழகிய ஆறு. இந்த ஆறானது "River of Five Colors" என்றும் "Liquid Rainbow, அதாவது திரவ வானவில் என்று அழைக்கப்படுகிறது.
![]() |
photo via Canal Trece |
![]() |
photo via www.canocristales.co |
பெயருக்கேற்ப இந்த ஆறு சிவப்பு, மஞ்சள், கருங்சிவப்பு, பச்சை, கருப்பு மற்றும் நீல நிறங்களில் காட்சியளிக்கிறது. இதற்கு காரணம் இங்கே வளரும் மக்ரேனியா லெவிகேரா ( Macarenia clavigera plants ) என்ற தாவரம் தான். இந்த ஆற்றில் உள்ள பாறைகளின் மேல் மிகவும் நெருக்கமாக பரவும் இந்த தாவரம் தான் இந்த அழகிய ஆற்றின் ரகசியம். குறிப்பாக ஜூலை இறுதியிலிருந்து நவம்பர் வரையில் அனைத்து நிறங்களில் இந்த ஆறு காட்சியளிக்கிறது.
இந்த கனோ கிறிஸ்டெல்ஸ் ஆறானது தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் அமைந்துள்ளது. எனவே இதனை அடைய சாலைகள் இருக்காது. அருகில் உள்ள சிறிய நகரமான La Macarena ல் சுற்றுலா பயணிகளை வழிகாட்டும் வகையில் ஓர் எளிய சுற்றுப்பயணத்தை அவர்களின் உதவியுடன் தொடரலாம். இங்கே கொரில்லா குரங்குகளின் நடமாட்டம் இருப்பதால் பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் இங்கு செல்ல தடைசெய்யப்பட்டிருந்தது. 2009 திற்கு பிறகு கொலம்பியாவின் பல சுற்றுலா ஏஜென்சிகள் சரியான வழிகாட்டிகளுடன் பாதுகாப்பான சுற்றுலா அனுபவத்தை தர முன்வந்தன.
![]() |
photo via See Colombia Travel. |
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இரவில் தங்கவோ, உணவு சமைக்கவோ அனுமதியில்லை. மேலும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே குளிக்கவோ, நீச்சல் அடிக்கவோ அனுமதிக்கப்படுகிறது. நீச்சல் அடிப்பவர்கள் கட்டாயம் சருமத்தில் தேய்க்கும் கிரீம்களை பயன்படுத்தக்கூடாது. காரணம், இந்த ரசாயனங்கள் இந்த இடத்தின் இயற்கை அழகிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
![]() |
photo via TwistedSifter |
0 Comments