இந்த 5 இடங்களுக்கு வாழ்நாளில் ஒரு முறையாவது கட்டாயம் செல்ல வேண்டும்

Top 5 Amazing Places to Visit Before You Die

 எண்ணிக்கையில் அடங்காத பல அதிசயங்களையும், அற்புதங்களையும் இந்த உலகம் தனக்குள் அடக்கி வைத்துள்ளது. இப்படிப்பட்ட அந்த பொக்கிஷங்கள் புகைப்பட கலைஞர்களாலும், புவியியல் வல்லுனர்களாலும் ஒன்றன் பின் ஒன்றாக நாம் அறிய வருகிறது. உலகின் சரித்திரத்தையும், நம் முன்னோர்களின் கலைத்திறனையும் வெளிப்படுத்தக்கூடிய பல வியக்கத்தக்க இடங்களை நாம கண்டிருப்போம். அப்படி உலகின் மிக அழகான, வியக்கத்தக்க 5 இடங்களை பற்றி நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.


1. Tunnel of Love

photo via Earth Porm

Tunnel of Love என்று அழைக்கப்படும் இந்த பகுதி ரயில் செல்லக்கூடிய ஒரு இருப்புப்பாதை என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?? ஆனால் அது தான் உண்மை. இது உக்ரைன் நாட்டில் அமைந்துள்ள ஒரு தொழில்துறை ரயில் பாதை. இந்த ரயில் பாதை முழுவதும் பச்சை பசேலென்ற மரம், செடி கொடிகளால் சூழப்பட்டுள்ளது. மேலும் இதே நிலையில் 5 கிலோமீட்டர் வரை பயணிக்கிறது இந்த ரயில் பாதை. இதை பார்க்கும் போது ஒரு பசுமையான சுரங்கப்பாதை போல் காட்சியளிக்கிறது. தற்போது இந்த பகுதி காதல் ஜோடிகள் கை கோர்த்து நடக்கும் ஒரு அழகான பூங்கா போன்றும், உக்ரைன் நாட்டின் ஒரு சிறந்த சுற்றுலா தளமாகவும் அறியப்படுகிறது.

 2. Hitachi Seaside Park

photo via Roadtrippers Chronicles

ஜப்பானின் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது இந்த Hitachi Seaside Park எனப்படும் இந்த மலர் பூங்கா சுமார் 350 ஹெக்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. உலகின் மிக அழகான டாப் 10 பூங்காக்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. இந்த பூங்காவின் தனித்துவமான ஒரு மலர்  நீமோஃபிளா (nemophila) என்ற நீல நிற மலர்.

photo via flickr.com
ஏப்ரல் மாதத்தில் அதிகமாக பூத்துக்குலுங்கும் இந்த இந்த மலர் பூங்கா ஒரு பசுபிக் கடல் போல் கட்சி தருகிறது. கோடை காலத்தில் சுமார் 4.5 மில்லியன் பூக்கள் இங்கு பூக்கின்றன. மேலும் பொழுது போக்கு பூங்காக்கள், சைக்கிள் மற்றும் நடை பயணம் செய்யும் வகையில் நடை பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் பல ஆயிரம் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.


3. Wisteria Flower Tunnel in Japan

photo via Mother Nature Network
photo via Rove.me

கோடை காலத்தில் சுற்றுலா செல்ல ஒரு மிகச்சிறந்த இடம் இந்த விஸ்டேரியா பிலௌர் டனல் ( Wisteria Flower Tunnel ). ஜப்பானின் கிடாக்யசு ( Kitakyushu ) என்ற இடத்தில அமைந்துள்ளது இந்த அழகான தோட்டம். இங்கு 150 வகையான விஸ்டேரிய பூக்கள் உள்ளது. இந்த இடத்தின் முக்கியமான பகுதி விஸ்டேரியா   டனல் பகுதி. மிகவும் வண்ணமயமான இந்த நடைபாதையில் சுற்றுலா வாசிகள் பயணிக்கலாம். தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான இந்த பிளவர் டன்னலுக்கு அனுமதி இலவசம். வண்ணமயான இந்த அழகான பூக்களினால் இந்த இடம் ஒரு சொர்க்கம் போல காட்சியளிக்கிறது. டோக்கியாவிலிருந்து 6 மணி நேர பயணத்தில் இந்த இடத்தை அடையலாம்.


4. Mount Roraima

photo via All That's Interesting

photo via TripAdvisor
உலகில் உள்ள மிகவும் அழகான மலைகளில் ரொரைமாவும் ( Roraima ) ஒன்று. இது தென் அமெரிக்காவில், கயானா, வெனிசுலா மற்றும் பிரேசில் இடையிலேயான எல்லை பகுதியில் அமைந்துள்ளது. மற்ற மலைகளை காட்டிலும் இங்கு மலையேற்றம் செல்லும் அனுபவமானது மிகவும் வித்தியாசமானது. இதன் அழகும், தனித்துவமான இயற்கை வனப்புகளையும் சொல்ல வார்த்தைகள் இல்லை. தனிமை படுத்தப்பட்ட இடத்தில் அமைந்துள்ள இந்த மலையில் தனித்துவமிக்க பல இடங்கள் உள்ளது. மலையேற்ற பயிற்சியில் ஈடுபடுவோர் இங்கு வருவதற்கு முன் இதன் சீதோச நிலை பற்றி அறிந்து கொண்டு வருவது நல்லது. இங்கிருந்து 30 மைல் தொலைவில் உலகின் மிகவும் உயரமான நீர் வீழ்ச்சியான ஆங்கிள் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது என்பது இன்னொரு சிறப்பு.

 5. Bamboo Forest, Japan

photo by ZEKKEI Japan
photo via ZEKKEI Japan

Bamboo Forest என்பது ஜப்பானின் க்யோடோவில் ( Kyoto ) உள்ள அரசியாமாவில் ( Arashiyama ) உள்ள ஒரு இயற்கையான மூங்கில் காடு ஆகும். Kyoto சிட்டியிலிருந்து வெறும் 30 நிமிடத்தில் இந்த இடரை அடைந்து விடலாம். மிகவும் உயரமான மூங்கில் மரங்களும், இங்கே நிலவும் அமைதியும், மரங்களுக்கு இடையே ஊடுருவும் சூரிய ஒளியால் ஒரு பேரழகை இந்த இடத்திற்கு அளிக்கிறது. ஒலியை கட்டுப்படுத்தும் இந்த இடம், ஓர் அமைதியான சுற்றுலா அனுபவத்தை கொடுக்கிறது. சுற்றுலா பயணிகள் எளிமையாக இந்த இடத்தை அடையும் வகையில் நிறைய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது, மேலும் செல்லும் பாதைகள் ஒளி விளக்குகளால் பிரகாசிக்கிறது. குளிர் காலங்களில் பனித்துகள்களினால் மூடப்பட்டு இந்த இடம் ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதன் தோற்றமும், இயற்கை அழகும் இதனை ஓர் முக்கிய சுற்றுலா தளமாக அலங்கரிக்கிறது.

Post a Comment

0 Comments