Vintage Cars Transformation As Wild Animals
இந்த காலத்தில் காரை விரும்பாத மக்களையே பார்க்க முடியாது. பெரும்பாலான மக்கள் தனக்கென ஒரு கற்பனை காரை மனதிற்குள் கற்பனை பண்ணி வெச்சிருப்பாங்க. இன்னும் பலர் பழைய ( Vintage ) கார்களை பத்திரமாக பராமரித்து வெச்சிருப்பாங்க. இது நம்முடைய அழகான கடந்த காலங்களை காட்சிப்படுத்தும் பொக்கிஷமாக இருக்கும். பழைய ரொமான்டிக் படங்களில் காதலர்களை அறிமுகப்படுத்துவதே இந்த அழகான கார்கள் தான். சில பேர் இதை அவர்களின் ஒரு அதிர்ஷ்டமாகவே பார்க்கிறார்கள்.
சுவிஸ் நாட்டை சேர்ந்த ஒரு கலைஞர் ரெட்ரிக் முல்லர் ( Frédéric Müller ). இவர் எதையுமே சற்று வித்தியாசமாக யோசிக்ககூடியவர். 3D டெக்னலாஜியை பயன்படுத்தி புதுமையான படங்களை உருவாக்குவதில் கைதேர்ந்தவர். தற்போது உருவாக்கியுள்ள ஒரு வித்தியாசமான டிசைன் தான் 8 படங்களை கொண்ட ‘Rides of the Wild’ என்ற மாற்றியமைக்கப்பட்ட விண்டேஜ் கார்களின் டிசைன். அவருக்கு பிடித்த நான்கு வனவிலங்குகளின் தோற்றத்தில் அந்த விண்டேஜ் கார்களின் டிசைன்களை வடிவமைத்திருந்தார். 3D டெக்னலாஜியை பயன்படுத்தி இதை அவர் வடிவமைத்துள்ளார்.
1.
Ford-250 ( 1967 )
1967 ல் வெளியான
Ford-250 சிங்கத்தோட
தோற்றத்திற்கு ரொம்ப நல்லா பொருத்தமா இருக்கும். இவரும் அதைத்தான்
தேந்தெடுத்திருக்காரு. தற்போது இந்த ஹெவி டூட்டி டிரக்கும் wild for
adventure கு தயாராகப்போகுது. பூனை போன்ற இந்த காருடைய முக அமைப்புக்கு
பொருத்தமா சிங்கத்தின் மூக்கு வடிவில கிரில்ல அமைத்திருக்காங்க, கூடவே காது
போன்ற அமைப்பும், துல்லியமான மஞ்சள் நிறமும் இந்த காரை ஒரு சிங்கமாகவே
மாத்திருச்சு. கூடவே ஹைலைட்டே காருடைய நம்பரை
‘L1ON’ என்றே மாட்டிட்டாங்க.
2. Aston Martin DB5 ( 1963 )
நீர் யானையின் விசித்திரமான நிழலைப்பார்த்து ஈர்க்கப்பட்ட முல்லர்
ஆஸ்டன் மார்ட்டின் DB5 காரை அதன் வடிவத்திற்கு மாற்ற நினைத்தார். காரின் உடலமைப்பை மாற்றியமைத்த முல்லர் நீர்யானையின் காதைப்போன்ற அமைப்பை காரின் மேல் பகுதியில் நிறுவினார். மேலும் இந்த வாகனத்திற்கு ஹிப்போ (
‘H1PPO’ ) என்ற தனிப்பட்ட ஃபேன்சி நம்பரையும் வாங்கிக்கொண்டார்.
3. Chevrolet Corvette Stingray (1968 )
தனக்கு பிடிச்ச முதலையை போன்று மாற்றம் செய்ய அவர் தேர்ந்தெடுத்த கார்
1968 ல் பிரபலமான
Chevrolet Corvette Stingray. முதலையை போன்ற அசல் தோற்றத்திற்காகவே அவர் இந்த காரை தேர்வு செய்தார். நீண்ட சப்பையான காரின் முக அமைப்பு அலிகேட்டரின் வாய்ப்பகுதியை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இதன் முன் பக்கத்தில் முதலையின் பற்கள் அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. பச்சை நிறத்தில ஒரு சக்தி வாய்ந்த ஸ்போர்ட்ஸ் மெசினை இவரு உருவாக்கியிருக்காருன்னே சொல்லலாம்.
4. Fiat 600S ( 1977 )
இறுதியா நாம பார்க்கப்போறது பாண்டா கரடி. சிரியவங்கள்லே இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லோருக்கும் பிடிச்ச விலங்கு இந்த பாண்டா. இதற்காக இவங்க பயன்படுத்திய கார்
1977 ஆம் ஆண்டு வெளியான Fiat 600S. கருப்பு வெள்ளை நிறம், அழகான காதுகள், வாய் மற்றும் அதன் மூக்கு போன்ற வடிவத்தில் கிரில் என்று அசல் பண்டாவை காட்சிப்படுத்தும் வகையில் இந்த காரை மாற்றியமைச்சிருக்காங்க. பைனல் டெச்சா ‘P4ND4’ என்று தனிப்பட்ட நம்பரையும் வாங்கி அசத்தியிருக்காங்க.
0 Comments