உலகின் 5 வித்தியாசமான கின்னஸ் சாதனைகள் 5 Most weird Guinness Records in The World

 கின்னஸ் சாதனை புத்தகம் பற்றி உங்களுக்கு பெரிதாக விளக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த புத்தகம் மக்களிடத்தில் பிரபலம். மனிதர்களால நிகழ்த்தப்படும் அசாத்திய சாதனைகளை பட்டியலிட்டு உலகிற்கு அறிமுகம் செய்பவர்கள் தான் இவர்கள்.

 மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு பல சாதனைகள் இவ்வுலகில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஆனால் நாம் இங்கே காணப்போவது இப்படியெல்லாம் கூடவா சாதனை செய்வார்கள் என நம்மை யோசிக்க வைக்கும் வகையிலான சற்றே வித்தியாசமான கின்னஸ் சாதனைகளை இங்கே காணலாம்.

1.Most number of facial masks

pics via The Guardian


 ஜூலை 28, 2013ல் ஒரு வித்தியாசமான கின்னஸ் சாதனை செய்யப்பட்டிருக்கு, அது என்னன்னு பார்த்தீங்கன்னா, Taipei ல ஒரே நேரத்தில 1213 பேர் பியூட்டி பார்லர்ல பயன்படுத்துற ஃபேசியல் முகமூடிய ( facial masks ) தனது முகத்துல வச்சுக்கிட்டு தொடந்து 10 நிமிடம் இருந்துருக்காங்க. இதன் மூலமா பழைய சாதனையை முறியடிச்சிருக்காங்க. பார்க்கவே வேடிக்கையா இருக்குதில்ல..

2. Most spoons balanced on a human body

pics via Time Out Beijing

எட்டிபர் எல்செவ்  (Etibar Elchyev ) என்பவர் எந்தவொரு பசையையும் பயன்படுத்தாம தனது உடம்புல 50 உலோக ஸ்பூன்களை அப்படியே தொங்கவிட்டிருக்காரு. இதன் மூலமா இவர் கின்னஸ் சாதனை புத்தகத்துல இடம் பிடிச்சிருக்காரு.

3. Most naked riders on a theme park ride

pics via Guinness World Records

ரோலர் கோஸ்டர்னு சொன்னாலே போதும், பலருக்கு உற்ச்சாகவும் அதே நேரம் வயிற்றையும் கலக்க ஆரம்பிச்சுடும். அந்த அளவிற்கு ரொம்ப பிரபலமான ஒரு தீம் பார்க் ரைட் ( ride ). இதுல என்ன சாகசம் பண்ணாங்கன்னு கேட்குறீங்களா?? ஆகஸ்ட் 8, 2010 ல ஒரே நேரத்துல முழு நிர்வாணமா 102 பேர் இந்த ரைடுல கலந்துக்கிட்டாங்க. சீ.. இதெல்லாம் ஒரு சாதனையான்னு கேட்காதீங்க? இது ஒரு சாதனைனு கின்னசுலயே பதிவு செஞ்சுட்டாங்க

4. Most Tattooed pair ever in the world
 
pics via Guinness World Records

இஸபெல் வர்லி என்ற 69 வயதான பெண் தனது உடம்பில் 98.75% அளவு டாட்டூ ( tattoo ) போட்டிருக்காங்க. இவரோடு சேர்ந்து அடுத்த வருடமே இவரோட கணவரும் டாட்டூ போட்டுக்கிட்டாரு, இவரு தான் உலகத்திலேயே தன் உடம்புல அதிகமான டாட்டூ போட்டுக்கிட்ட சீனியர் ஆன் பிள்ளை. இதன் மூலமா கின்னஸ் சாதனை புத்தகத்திலயும் இடம் பிடிச்சிருக்காங்க. மண்டைய கூட விடலைன்னா பார்த்துக்கோங்க..

5. Most pierced man

pics via NewSonia

நம்ம பசங்க ஸ்டைல்னு சொல்லிட்டு காதுல கடுக்கன் மாட்டியிருப்பாங்க.. அதுக்கே நாம அவங்கள திட்டுவோம். ஆனால் ஜெர்மனியை சேர்ந்த ரோல்ப் பகலொஜ் ( Rolf Bucholz ) என்கிற இந்த மனுஷன் தன் முகத்துல 453 இடத்துல துளையிட்டு வகை வகையா ஜிமிக்கி மாதிரி மாட்டியிருக்காரு. மனுசன பார்க்கவே பயங்கரமா இருக்குறாரு. இவரு பண்ணின இந்த விஷயம் கின்னஸ் சாதனை புத்தகத்துலயும் இடம் பெற்றுருக்கு.


Post a Comment

0 Comments