உங்களை தலைசுற்ற வைக்கும் டாப் 10 உணவுகள்

 

Top 10 Weired Foods In The world


   இதுவரை நீங்கள் காரசாரமான, சுவையான உணவுகள் பற்றி  நிறைய விடியோக்கள், பதிவுகள் பார்த்திருப்பீங்க. ஆனால், நாம இங்கே பார்க்கப்போவது வித்தியாசம் வினோதம் என்ற பெயரில்  பலான உணவுகளை சமைத்து பரிமாறப்படும் நிகழ்வைத்தான் நாம இங்க பார்க்கப்போகிறோம். இதனால நீங்க கொஞ்சம் வந்தியே எடுத்தாலும் ஆச்சர்யம் இல்லை.

1. Balut, the Philippines
pics via STSTW

பிலிப்பைன்சில் இந்த உணவு ரொம்பவே பிரபலம். இந்த உணவில் நிறைய புரதம் மற்றும் புரோட்டின் சத்துக்கள் இருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள். கருவுற்ற நிலையில் இருக்கக்கூடிய வாத்து கோழியின் முட்டை தான் இது. இந்த முட்டையினுள் கிட்டத்தட்ட கரு முழுதாக வளர்ந்திருக்கும். முழுவளர்ச்சி அடைந்த கருவை அப்படியே பச்சையாக உண்பது தான் இந்த உணவின் சிறப்பு. உப்பு மற்றும் வினிகர் தொட்டு இந்த உணவு உட்கொள்ளப்படுகிறது. உண்ணும் முறை என்று பார்த்தால் முதலில் முட்டையின் மேல் ஓடை உடைத்து அதில் உள்ள சூப்பை அருந்தனும் பிறகு இதர உணவை அப்படியே உண்ணலாம்.

2. White ant eggs soup
pics via Readers Ride

உலகில் அறியப்படும் அசாதாரண சூப் வகை உணவுகளில் இதுவும் ஒன்று. வெள்ளை எறும்பின் முட்டைகளால் செய்யப்படும் இந்த சூப் தாய்லாந்தில் மிகவும் பிரபலம். வெள்ளை எறும்பின்  முட்டைகளையும் பல மசாலா அயிட்டங்களையும் சேர்த்து இந்த சூப் சுடச்சுட பரிமாறப்படுது. மேலும் இந்த சூப்புடைய சுவையை கூட்டுறதுக்காக சிறு எறும்புகள் இதன் மீது ஓடவிடப்படுகிறது. இந்த சூப்பிற்கு கூட்டே இந்த எறும்புகள் தான்.

3.  Boshintang, Korea
pics via My Guide Seoul

உடலுக்கு அதிக சக்தி தரும் ஓர் உணவை நீங்க கொரியால சாப்பிடலாம். இதற்காக இவர்கள் பயன்படுத்தும் மூலப்பொருட்கள் என்னவென்றால் சிவந்த வெங்காயம், முள்ளங்கி மற்றும் காரசாரமான மசாலா இவற்றுடன் கொரியாவில் மிகவும் பிரபலமான நாய் கறி. இங்கே உள்ள ஹோட்டல்களில் இதை நீங்கள் தேடி அலையை வேண்டியதில்லை. மெனு கார்டில் இந்த உணவை நீங்கள் முதன்மையாக காண முடியும். பழைய தலைமுறைகளோட பிரபல உணவாகவும், மிக ருசியான உணவாகவும் இங்குள்ள மக்களால் இது போற்றப்படுது.


4. Shirako, Japan
pics via The Times

ஜப்பானில் மிகவும் பிரபலமான ஓர் உணவு தான் இந்த சிராக்கோ. இந்த உணவோட மூலப்பொருள் என்ன தெரியுமா? ஆங்கிலர் மற்றும் பஃபர் போன்ற மீன்களின் திட நிலையில் காணப்படும் விந்து அதாவது (sperm). இதே நம்ம ஊரில் இதையெல்லாம் ஒரு கழிவாக தூக்கி குப்பையில் போட்டுருவாங்க, ஆனா ஜப்பானில் இந்த உணவுக்கு ஏக கிராக்கி. இத பார்க்கிறதுக்கு மூளை மாதிரி காணப்படுகிறது. இத சுத்தம் செய்து மசாலா தடவி ஒரு அயிட்டமா தயார் பண்ணிடறாங்க.

5.  Crispy tarantulas, Cambodia
pics via Cambodia Backpackers Hostel

டெரான்டுலா என்பது ஒரு வகை மிகப்பெரிய சிலந்தி வகைகளில் ஒன்று. இந்த வகை சிலந்திகள்  பெரும்பாலும் மனிதர்களை தீண்டுவதில்லை. அதற்காக மனிதர்கள் சும்மா விட்டு விடுவார்கள் என நினைத்தால் தவறு. நம்ம ஊரு ஆட்களுக்கு இந்த சைசில் ஒரு சிலந்தியை பார்த்தா நடுங்கிடுவோம். ஆனால், கம்போடியன்ஸ்களுக்கு இத பார்த்தாலே மதிய உணவு நினைவிற்கு வந்து விடும். முதலில் இங்குள்ள குறிப்பிட்ட மக்களால் மட்டுமே சுவைக்கப்பட்ட உணவு தற்போது ஒரு பிரபலமான ஸ்னாக்ஸாக மாறி விட்டது. இதை சப்பிறவங்க இந்த உணவு நண்டு சாப்பிடுவது போல க்ரிஸ்பியா இருக்குன்னு சொல்றாங்க.

6. Hakarl, Iceland
pics via Ha Food Tours

ஐஸ்லாந்தில் ஸ்லீப்பர் சார்க் எனப்படும் சுறாவைக்கொண்டு செய்யப்படும் ஓர் உணவு மிகவும் பிரபலம். தலை நீக்கப்பட்ட சுறாவுடைய உடல் பாகங்கள் துண்டாக்கப்பட்டு மணல் மற்றும் கற்களுடன் சேர்த்து அப்படியே தொங்கவிடப்படுகிறது, கிட்டத்தட்ட நம்ம ஊர் உப்புக்கண்டம் மாதிரி. சுமார் இரண்டு முதல் மூன்று மாதங்கள் இதை அப்படியே விட்டு விடுவார்கள். அதன் பிறகு தான் இதை எடுத்து சமைக்கிறார்கள். ஒரு வேளை நீங்கள் இதை சாப்பிட புதியவர் என்றால் மூக்கை பொத்திக்கொண்டு தான் முயற்சி செய்ய வேண்டுமாம், அந்த அளவிற்கு இதன் நாற்றம் மோசமாக இருக்குமாம். நீங்கள் வாந்தி எடுத்தாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை...

7.  Jellied moose nose, Canada
pics via The Cook Book

நாம இறைச்சி கடைக்கு போனால் நாம் விரும்பி கேட்டு வாங்குவது லெக் பீஸ் தான். ஆனால் கனடா மக்களோட சமையல்ல குறிப்பிடத்தக்க ஒன்றா கடமனோட மூக்கு கறி சமையல் இருக்கு. இந்த கடமானுடைய மூக்கு இறைச்சியை வேக வைத்து ரோமங்களை நீக்கி பிறகு மீண்டும் வெங்காயம் மற்றும் மசாலா சேர்த்து வேக வைத்து ஜெல்லியோட சேர்த்து சும்மா பூந்து விளையாடுறாங்க. ஒரு வேளை கனடா போனீங்கன்னா இங்க மூக்கு கறியை கேட்டு வாங்கி சாப்பிடுங்க.

8. Casu marzu, Italy
pics via All That's Interesting

இத்தாலியோட சார்த்தனியா தீவில் தயாரிக்கப்படுகிற ஒரு வெண்ணை தான் கசு மர்சு என அழைக்கப்படுது. இதனோட ஸ்பெஷல் என்ன என்று பார்த்தால் இது கிட்டத்தட்ட புழுக்கள் மேயக்கூடிய ஓர் அழுகிய வெண்ணை. ஆட்டின் பாலிலிருந்து பெறப்படும் இந்த வெண்ணை அழுகும் நிலையில் ரொட்டியுடன் வைத்து சாப்பிடப்படுகிறது.  இதனால் உடம்பில் உள்ள கொழுப்புகள் குறைவதாக சொல்லப்படுகிறது. இதை நீங்கள் புழுக்களோடு சேர்ந்தே சாப்பிடலாம். 

 9. Muktuk, Greenland
pics via Alchetron

முட்குட் எனப்படும் இந்த உணவு கிரீன்லாந்தில் மிகவும் பிரபலம். உறைந்த நிலையில் இருக்கும் திமிங்கலத்தின் இறைச்சியை தான் இவர்கள் இந்த பெயரில் விநியோகம் செய்கிறார்கள். இதை நீங்கள் பச்சையாகவோ அல்லது ஊறுகாயாகவோ இவற்றை வாங்கிக்கொள்ளலாம். இதனுடைய சுவை ஒரு வால்நட்ஸ் சாப்பிடுவது போல் இருக்கும். செயற்கை பல் பொருந்தியவர்கள் இதை சாப்பிட முடியாது, ஏனென்றால் இது ஒரு சுவிங்கம் போல் இருக்கும்.

10.  Stargazey Pie, England
pics via English for Less

இங்கிலாந்தில் இது ஒரு பாரம்பரிய உணவாக அறியப்படுகிறது. முட்டை மற்றும் உருளைக்கிழங்கு கலவையுடன் ஒரு வகை மாவை கலந்து இந்த உணவு செய்யப்படுகிறது. இதனுடைய சிறப்பு என்னவென்றால் இந்த உணவை சுற்றி மீன் தலைகளை சொருவி அலங்கரித்திருப்பார்கள். 16 ஆம் நூற்றாண்டில் புயலில் சிக்கி தவித்த போது ( Tom Bawcock ) எனப்படுபவர் மக்களுக்காக மீன்களை பிடித்து கொண்டு வந்தார். அவரின் நினைவாக இந்த உணவு உருக்கப்பட்டுள்ளதாக இந்த மக்கள் கூறுகின்றனர்.

Post a Comment

0 Comments