இந்தியாவில் கை விடப்படும் 5 பழங்கால வழிமுறைகள்


5 Ancients Rules Broken In India

 இந்தியா உலக அளவில் வளர்ந்து வரும் ஒரு நாடு. கல்வி, தொழில், கலாச்சாரம் போன்ற அம்சங்களில் முன்னேற்றம் கண்டு வரும் நம் நாட்டில் சில புரியாத நடவடிக்கைகளையும் பார்க்க முடியும். இந்தியாவின் கலாச்சாரமானது மிகவும் தொன்மையானது. இந்த கலாச்சாரத்தை பேணி காப்பதற்காக நிறைய வழிமுறைகள் இங்கே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதில் நிறைய சறுக்கல்களையும் நாம் இங்கு காண முடியும்.


pics via National Geographic Channel

இந்த கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் காப்பாற்ற ஆண் மற்றும் பெண்களுக்கென குறிப்பிட்ட விஷயங்கள் இங்கே தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி தடை செய்யப்பட்ட விஷயங்கள் இங்கே கடைபிடிக்கப்படுகிறதா அல்லது கைகழுவி விடப்பட்டதா என் நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

1. Women and their Body Structure

pics via indiatoday.in

பெண்கள் தன் உடல் அழகை மற்றவர்க்கு வெளிப்படுத்துவது இங்கே தடுக்கப்பட்ட விஷயம். ஒரு பெண் தன உடல் அழகை தன் கணவனை தவிர வேறு எந்த நபருக்கும் வெளிப்படுத்த கூடாது என்பது மரபு. இத்தகைய மரபுகளை தந்த நம் முன்னோர்கள் தான் பெண்களை கவர்ச்சியாகவும், ஆபாசமாகவும் சித்தரிக்கும் வகையில் சித்திரத்தை தீட்டியுள்ளனர். ஒரு பெண்ணின் உருவம் வரையப்பட்டாலே அவளின் உடல் அங்கங்களை வெளிப்படுத்துமாறு வரைவதே இங்கே கலை நீதியாக உள்ளது. பண்டைய கால முன்னோர்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் சிற்பங்களும் பெண்களை அவ்வாறே ஆபாசமாக உருவகப்படுத்துகிறது. மகாபலிபுரம், அஜந்தா குகை, கோவில் சிற்பங்கள் என அனைத்திலும் பெண்களை ஒரு காமப்பொருளாக சித்தரித்தே கட்டப்பட்டுள்ளது.

சொல் ஒன்று செயல் ஒன்று என இருப்பதாலோ என்னவோ, இன்றய தலைமுறையின் வாழ்க்கை நெறியும் தலைகீழாக உள்ளது. வெறும் காமப்பொருளாகவே இன்றய பெண்கள் பார்க்கப்படுகிறாள். அவள் குழந்தையோ, தாயோ அல்லது சகோதரியோ, ஆண்களின் கண்களுக்கு அவள் வெறும் தசை பிண்டமாக காட்சியளிக்கிறாள்.

இந்த காலத்திற்கு ஏற்றது போலவே பெண்களும் தங்களது வெட்கத்தை தூக்கி எரிந்து விட்டு அயல் நாட்டு கலாச்சாரத்தோடு கை கோர்த்துட்டு வராங்க. சினிமா கலாச்சாரத்தியே தனது வாழ்வாகவும் ஏத்துக்கிறாங்க. இதன் விளைவாகவே நம் நாட்டில் பாலியல் கொலைகளும், கற்பழிப்புகளும் நிகழ்ந்திட்டு வருது.

2. Smoking Women

pics via Medium

பொது இடத்துல புகை பிடிப்பதற்கு நம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள ஆண்கள் புகை பிடிப்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் பெண்களின் நிலை என்ன என்பது தான் இங்கு கேள்வி?? இந்தியாவில் உள்ள வேலைக்கு செல்லக்கூடிய இளம் பெண்களிடம் புகை பிடிக்கும் பழக்கம் ரொம்பவே அதிகரித்து வருகிறது, முக்கியமாக இந்தியாவின் நகரங்களில். இந்தியால மிகவும் பிரபலமான பத்திரிகையான இந்தியா டுடே இதை அதிகாரப்பூர்வமா வெளியிட்டிருக்காங்க. மேலும் இந்த ரிப்போர்ட் சொல்லுது இந்தியாவில் 12.1 மில்லியன் பெண்கள் புகை பிடிக்கக்ககூடியவர்களாக உள்ளனர். உலக அளவில் பார்க்கும் பொது அமெரிக்காவிற்கு அடுத்து 2 வது இடத்தில உள்ளது.

இப்படி புகைத்து தள்ளும் பெண்களுக்கு குழைந்தை பிறப்பில் சிக்கல் ஏற்படுகிறது, புகை பிடிக்கும் நிறைய பெண்களுக்கு கருவுறுத்தலின் ஆரம்ப கட்டத்திலேயே கருசிதைவு ஏற்படுகிறது.

3. Alcohol in India

pics via South Asia Journal

இந்தியாவில் பல கோடி மக்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் மதுவுக்கு அடிமையாக உள்ளனர். இந்திய சட்டப்படி இது இங்கு குற்றமாக இருந்தாலும் அரசாங்கமே இதற்கு மறைமுகமா உதவி செய்கிறது. இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் முழு நேர குடிமக்களாக வாழ்ந்து வருகிறார்கள். இந்த நவீன உலகத்தில் இந்தியாவில் வைன் ஷாப், பார் மற்றும் கிளப் என பெரிய வளர்ச்சி கண்டிட்டு வருது. அதிகப்படியான வரி வருவாய் காரணமாக அரசாங்கமும் இதை அனுமதிக்கிறது. நகரத்தை தாண்டி கிராமங்களிலும் பல தோற்றத்தில் இந்த மதுவானது மக்களை போய் சேருகிறது.

குறிப்பிடும் படியாக பஞ்சாப் மாநிலத்தில் மது போதை என்பது மிகவும் சாதாரணமான ஒன்று. வட மாநிலங்களில் சில கிராமங்களில் மது அருந்த்துவதற்கு வயது வித்தியாசமே கிடையாது. கேரளா இந்தியாவில் உள்ள மிகப்பெரிய குடிகார மாநிலம் இருக்கிறது. விற்பனையை கணக்கிடும்போது தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு இங்கு சரக்கு அடிக்கிறாங்க. இந்தியாவில் குஜராத், பீகார் போன்ற பகுதிகளில் மதுவிலக்கு அமல் செய்யப்பட்டுள்ளது, காரணம் இதன் மூலமா நிறைய குற்றச்செயல்கள் இங்கே அரங்கேறி வருகின்றது. மொத்தத்தில் இங்கே உள்ள அரசாங்கத்தோட நிலைபாடு என்னன்னு பார்த்தால் நடிகர் விவேக் சொல்வது போல் " நாங்க காட்டியும் கொடுப்போம், கூட்டியும் கொடுப்போம்".

4. Periods In India

pics via Deccan Chronicle

இங்கு உள்ள நிறைய மக்கள் பெண்களுக்கான மாதவிடாய் நாட்களை மிகவும் அருவருப்பாகவும், தீண்டத்தகாதவர் போழும் நடத்துகிறார்கள். அதே போல அவர்கள் பயன்படுத்தும் நாப்கினையும் ரொம்ப அசிங்கமா குறிப்பிடறாங்க. ஆரம்ப காலத்தில் இந்த நாட்களில் பெண்கள் மக்களை விட்டு விலகி இருப்பார்கள். ஏதோ தீண்டத்தகாதவர் போல அந்த பெண்கள் உணருவார்கள். பிறகு வீட்டிலேயே செய்யப்படும் துணி நாப்கின்களை பயன்படுத்தினாங்க, ஆனால் தற்போது சுகாதாரமான முறையில் நாப்கின்கள் பெருமளவில் வந்து விட்டது. இன்னும் வட இந்தியாவில் நிறைய பேர் இந்த நாப்கின்களை செலவு செய்யும் பணத்தை வீணடிப்பதாக கருதுகிறார்கள். இப்படிப்பட்ட அவலம் இன்னும் நம் நாட்டில் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது.

இப்போது ஒரு சுவாரசியமான தகவல் என்ன என்றால் இந்தியாவில் 2018 ஜூலை 21 முதல் பெண்களுக்கான நாப்கின்களின் மீது விதிக்கப்பட்டுள்ள 12% வரியை அரசு தள்ளுபடி செய்துள்ளது.  இது வரக்கூடிய காலங்களில் இந்த பொருள் பெண்களுக்கு மலிவாக கிடைக்க வழிவகுத்துள்ளது. நம் நாட்டில் உள்ள 71% பெண்களுக்கு இந்த நாட்களில் தங்களுக்கு ஏற்பட்ட முதல் அனுபவம் மிகவும் மோசமாக இருந்ததாக சொல்லியிருக்கிறாங்க. இந்த காரணத்திற்காவே நம் நாட்டில் உள்ள படிக்கும் பெண்கள் மாதத்தில் 6 நாட்கள் பள்ளிக்கு போறது கிடையாது. ஒரு வருத்தப்பட வேண்டிய விஷயம் என்ன என்றால் இந்தியாவில் இன்னும் 80% மக்கள் வீட்டில் துணியால் செய்யப்படும் நாப்கின்களையே பயன்படுத்துகிறார்கள்.

5. Sex in India

pics via News Track English

உலக மக்கள் தொகையில் 2 வது இடத்தில் உள்ள இந்தியாவில் நீங்கள் செக்ஸ் பற்றி வெளிப்பாயாக பேச தடை செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள மரபு படி ஒரு ஆண் மற்றும் பெண் திருமணத்துக்கு முன் இணைவது சட்டப்படி குற்றம். இப்படித்த மரபை கொண்ட இந்த நாட்டில் தான் காமசூத்ரா போன்ற நூல்களையும் எழுதியிருக்காங்க. திருமணத்துக்கு முன்பு உறவு என்பது மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. ஆனால் இன்றய தலைமுறையில் மேல் நாட்டு கலாச்சாரத்தை பின்பற்றும் பல இளசுகள் டேட்டிங், லிவ் டுகெதர் என ஒரு ரவுண்டு போயிட்டு இருக்காங்க. இதனாலேயே ஒழுக்க மரபுகள் மறைந்து போய் எங்க பார்த்தாலும் திருமண வாழ்க்கைகள் ஒரு ஆண்டு கூட நிலைப்பதில்லை. கன்னித்தன்மைக்கு இந்தியாவில் அதிக முக்கியத்தும் கொடுக்கப்படுகிறது. ஒரு புறம் ஆண்கள் கன்னித்தன்மையை இழப்பதற்கு ஓடிட்டு இருக்காங்க இன்னொரு புறம் பெண்கள் இதை காப்பாற்றுவதற்காக போராடிட்டி இருக்காங்க.

இப்படியான நிலை இங்கே இருக்க திருமண பந்தத்திற்கு பிறகான உறவே சிறந்ததாகக இந்திய சட்டத்தோட நிலைப்பாடு உள்ளது. சினிமா கலாச்சாரத்தால் சீர்குலைந்த இந்த சூழ்நிலையில் மக்கள் முடிவெடுக்க தடுமாறுகிறார்கள். இதன் விளைவாக நிறைய பாலியல் குற்றங்களும், அத்து மீறுதல்களும் இங்கே நடப்பதை நாம் காண முடிகிறது. இதற்கு தீர்வாக திருமண வயது வரம்பை குறைக்கலாமா அல்லது வேறு ஏதாவது தீர்வு உண்டா என நீங்களே கூறுங்கள்.....


Post a Comment

0 Comments