Top 7 Anti Rape Devices In The World
நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நம் நாட்டிலே உச்சத்தை அடைந்துள்ளது. உலக அளவில் கல்வி, பொருளாதாரம், டெக்னாலஜி என வளரும் நாடுகளில் பின் தங்கி வரும் இந்தியா பாலியல் வன்முறை குற்றங்களில் உலகின் முதன்மையான நாடாக இந்த வருடம் மகுடம் சூட்டியிருக்கு. இது பெருமைப்பட வேண்டிய விஷயமே கிடையாது, மாறாக அனைவரும் வெட்கப்படவேண்டிய விஷயம். பாலியல் குற்றங்களை தடுப்பதற்காக உலக அளவில் நிறைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது, இருந்தாலும் இதற்கு சரியான சட்டம் வகுக்காத வரை இதற்கு தீர்வு கிடையாது. இப்போதைய சூழ்நிலையில் பெண்களே தங்களை காத்துக்கொள்வதை தவிர வேறு வழியே கிடையாது.
![]() |
pics via Stuff.co.nz |
டெக்னாலஜி அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்த காலகட்டத்துல இதற்கு ஏதாவது தீர்வு இல்லாமையா இருக்கும். பாலியல் குற்றங்களில் ஈடுபடும் அயோக்கியர்களை நிலை குலைய வைக்கும் பல விஞ்ஞான கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. இது எந்த அளவிற்கு பெண்களை பாதுகாக்கும் என்று தெரியவில்லை, இருந்தாலும் முயற்சி செய்து பார்க்கலாம்.
1. Anti-Rape Buckle
![]() |
pics via Etsy |
சுவீடனை சேர்ந்த டீனேஜ் பெண்கள் இந்த பெல்ட்டை உருவாக்கி இருக்காங்க, இரு கைகளின் உதவியால் மட்டுமே கழட்டக்கூடிய வகையில் இதை உருவாக்கி இருக்காங்க. மிலிட்டரி ஸ்டைலில் உருவாக்கப்பட்டுள்ள இந்த பெல்டின் பக்கிள்சை அவ்வளவு எளிதாக கழட்ட முடியாது. மிகவும் சிக்கலான லாக்கால் இது கட்டமைக்கப்பட்டுள்ளது, சரியான நிலையில் இதன் லாக்கை வைக்காமல் இதை நீங்கள் கழட்ட முடியாது. உங்கள் எதிரி இதை கழட்ட முயற்சிக்கும் வேளையில் நீங்கள் சுதாரிக்க உங்களுக்கு ஓர் வாய்ப்பு கிடைக்கும்.
ஓர் பள்ளிக்கூட ப்ரொஜெக்ட்டுக்காக உருவாக்கப்பட்ட இந்த பெல்ட் 300 ம் மேற்பட்ட எண்ணிக்கையில் விரைவாக விற்று தீர்ந்தது. இந்த பெல்டின் விலையாக 50$ நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2. Society Harnessing Equipment (Anti-Rape Bra)
![]() |
pics via PTC News |
இந்திய மாணவர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது இந்த anti-rape underwear. உங்கள் உள்ளாடையுடன் இந்த கருவியானது பொருத்தப்படும், இதனுடன் GPS மற்றும் GSM சிஸ்டம்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அழுத்தத்தை உணரக்கூடிய சென்சார்களும் இணைக்கப்பட்டுள்ளது, சுமார் 3800kV மின்சாரத்தை வெளிப்படுத்தக்கூடிய திறனை இந்த கரு பெற்றுள்ளது. மனிஷா மோகன் என்பவர் சென்னையில் உள்ள SRM University யை சேர்ந்த எஞ்சினீரிங் மாணவர். இவர் தன்னோடு படிக்கும் சக மாணவர்களுக்காக இந்த உள்ளாடை மாடலை வடிவமைத்திருக்கிறார். தவறான எண்ணத்துடன் உங்களை யாராவது தீண்டினால் இதில் உள்ள அழுத்ததை உணரும் சென்சார் மூலம் தூண்டப்பட்டு மின்சாரம் வெளிப்படுகிறது. மேலும் இதில் இணைக்கப்பட்டுள்ள GSM கருவி மூலம் உடனடியாக போலீசுக்கு தகவல் அனுப்பப்படும், மேலும் இதனுடன் GPS கருவி இணைக்கப்பட்டுள்ளதால் காவல் துறையினர் உங்களை கண்டுபிடிக்க இது உதவுகிறது.
3. Anti-Molestation Jacket
![]() |
pics via BuzzFeed |
இந்தியாவுடைய National Institute of Fashion Technology சேர்ந்த நிஷாந்த் பிரியா மற்றும் சஹட் அகமது ஆகியோர் இந்த "anti-molestation jacket" ஐ உருவாக்கியுள்ளனர். ஆபத்தான கால கட்டத்தில் இந்த கோட்டிலிருந்து 110 வோல்ட் மின்சாரம் வெளிப்பட்டு எதிரியை பணால் ஆக்குகிறது. இதனை நீங்கள் சுவிட்ச் மூலம் கண்ட்ரோல் செய்யலாம்.
4. The Snare
![]() |
pics via Oddee |
ஐரா கிரியேஷனால் தயாரிக்கப்பட்ட ஒரு கருவி தான் இந்த ஸ்னேர். பெல்ட் வடிவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கருவி. பார்க்கவே ரொம்ப விசித்திரமாக எதோ எலிப்பொறி மாதிரி இது இருக்கு. இந்த கருவி மெட்டலை கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கு. பெண்களிடம் தவறான முறையில் நடுக்கிறவங்க இந்த எலிப்பொறியில் சிக்கினாங்கன்னா அவ்வளவு தான். எலி நசுங்கி சின்னாபின்னமாகிடும். அந்த எலி செத்துப்போனாலும் ஆச்சரியப்பட தேவையில்லை.
5. Angel Wing Buzzing Anti-Rape Device
![]() |
pics via Alibaba |
இந்த கருவி ரொம்ப எளிமையானது. இதை உங்க உடம்புல எல்லாம் பொறுத்த வேண்டியது கிடையாது. பார்க்க கீ செயின் வடிவில் உள்ள இது, ஆபத்து காலத்தில் இதில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும் அப்படியே காது சவ்வு கிலியும் வகையில் 90 டெசிபல் அளவில் பிரம்மாண்டமான சப்தத்தை எழுப்பி விடும். இதற்கு பயந்தே அந்த கயவர்கள் பயந்து ஓடி விடுவார்கள். பிறரால் நீங்கள் காப்பாற்றப்படக்கூடிய சூழ்நிலையையும் இது ஏற்படுத்தும்.
அடுத்து நாம பார்க்கப்போகிற கருவிகள் ரொம்பவே ஆபத்தான கருவிகள், கிட்டத்தட்ட எதிகளோட உறுப்பையே இது சிதைத்திடும்நா பார்த்துக்கோங்க.
6. FemDefence Tampon
![]() |
pics via Indiatimes.com |
சுவீடனை சேர்ந்த ஒரு பெண் இதை உருவாக்கி இருக்காங்க, மேலும் இந்த கருவிக்கு FemDefence என்று அவரே பெயர் சூட்டியும் உள்ளார். இந்த கருவி பெண்ணுறுப்பிற்குள் பொருத்தி கொள்ளும் வகையில் உருவாக்கி இருக்காங்க. இதனுடைய முனையில் ரொம்பவே கூர்மையான ஒரு ஊசி இருக்கு, இது கிட்டத்தட்ட பார்க்க ஒரு சாக்கு தைக்கிற கோனூசி போல இருக்கு. எவனாவது ஒருத்தன் இது இருக்கிறது தெரியாம ஒரு ஸ்டெப் எடுத்து வெய்த்தான் என்றால் அவ்வளவு தான் அவனுக்கு எதனை தையல் போடணும்னே தெரியாது, அந்த அளவுக்கு உறுப்பு பஞ்சராகிடும்....
இந்த கருவியின் மாடல் உருவாக்கப்பட்டுள்ளதே தவிர இது அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.
7. Anti-Rape Condom
![]() |
pics via GoFundMe |
இது வரைக்கும் நாம பார்த்ததிலேயே இது தான் தண்டனையின் உச்சம் என சொல்லலாம். அந்த அளவிற்கு இது கொடூரமாக உருவாக்கப்பட்டிருக்கு. இது ஒரு காண்டம் வடிவில் உருவாக்கி இருக்காங்க. இதை பெண்கள் தங்களுடைய உறுப்பிற்குள் அடங்குமாறு தயாரிக்கப்பட்டுள்ளது. இதை பொருத்திய நிலையில் யாராவது இந்த பெண்களை தீண்டினால் அவ்வளவு தான். உள்ளே உள்ள காண்டம் அந்த ஆணோடு உறுப்பில் ஒட்டிக்கொள்ளும். அவ்வளவு எளிதாக இதை கழட்ட முடியாது. மீறி மீறி அவர்கள் இதை வேகமாக கழட்டும் பொழுது அவர்களுடைய உறுப்பின் தசைகள் மிகவும் மோசமாக கிழிந்து விடும். இதன் பிறகு அந்த உறுப்பில் காயம் ஏற்பட்டு சீல் பிடித்து அது சரி வருவதற்குள் அவன் நரக வேதனை அனுபவித்து விடுவான்.
0 Comments