Cockroaches Turns as a Food In Asia
நம்ம ஊர்ல பாம்பை பார்த்து அலறுறாங்களோ இல்லையோ கரப்பான் பூச்சின்னா நம்ம மக்களுக்கு அவ்வளவு பயம். அது நம்மளை கடிக்கா விட்டாலும், அந்த பூச்சியாய் பார்த்தாலே நமக்கு அவ்வளவு அருவருப்பாக இருக்கும். உலக அளவில் மக்களால் அருவருக்கத்தக்க ஒரு உயிரினங்களில் இது முக்கிய இடத்தை பிடிச்சிருக்கு. அப்படிப்பட்ட இந்த பூச்சியை நீங்க சாப்பிட விரும்புவீங்களா... நினைத்தாலே கொமட்டிட்டு வருதில்ல. ஆனால், மேலை நாடுகளில் இதையும் போட்டி போட்டுட்டு சாப்பிட்டு வராங்க.![]() |
pics via Live Science |
கரப்பான் பூச்சிகள் பெரும்பாலும் ரொம்ப அசுத்தமான இடங்களில் காணப்படும், இதனை சுற்றி பாக்டீரியாக்களும் வைரஸ்களும் சூழ்ந்திருக்கும். எனவே, இதனை ஆய்வு செய்யும் லேப்களில் வைத்து இனப்பெருக்கம் செய்யப்பட்டு நியூட்ரிசன் உணவாக மாற்றப்படுகிறது.
மெக்சிகோ மற்றும் தாய்லாந்தில் கரப்பான் பூச்சியின் தலை மற்றும் கால்களை நீக்கி விட்டு வேக வைத்தோ, கிரேவி போலவோ வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் சுடச்சுட பரிமாறுகிறார்கள்.
![]() | |
pics via Today I Found Out |
![]() |
pics via straitstimes.com |
சைனாவில் தற்போது கரப்பான் பூச்சியை வளர்த்தும் பண்ணைகளின் எண்ணிக்கை 100 ஐ தாண்டி விட்டது. கரப்பான் பூச்சியிலிருந்து செய்யப்படும் மருந்துக்கு இங்கே மவுசு கூடிட்டி வருது. சைனாவில் இந்த பூச்சிகள் கொதிக்கும் எண்ணெயில் இரு முறை வருத்தடுக்கப்பட்டு, வெண்ணெயுடன் கலந்து பரிமாறப்படுகிறது. இதன் சுவை மிகவும் க்ரிஸ்ப்பியாக இருப்பதாக இதை சாப்பிடுபவர்களின் கருத்தாக உள்ளது.
![]() |
pics via World Economic Forum |
வயிறு, இதயம் மற்றும் ஈரல் பிரச்சனைக்கு இந்த உணவு சிறந்த மருந்து என இங்குள்ள ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இது வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த உணவாக இது பரிந்துரைக்கப்படுது.
0 Comments