இந்த பெண்களுக்கு பைக் ரைடர்களை ஏன் பிடிக்கிறது தெரியுமா?

Why Girls Loves Bike Riders? 7 Interesting Reasons

  என்ன தான் வகை வகையாக கார்கள் வந்து குவிந்தாலும் பைக்கிற்கு இருக்கிற மவுசு எப்பவுமே குறைவது இல்லை. அதுவும் 150 சசி க்கு மேல இருக்கிற ஸ்போர்ட்ஸ் பைக்கினா சொல்லவா வேணும்.ஒரு காலத்தில பெண்களை கவர்வதற்காக பூவை கையில் வைத்துக்கொண்டு அலைவார்கள், பிறகு அது காதல் கடிதமாக மாறியது. இது கிரீட்டிங் கார்டு, பேஸ்புக், வாட்ஸ்அப் என பரிணாம மாற்றம் அடைந்து தற்போது பைக்கில் வந்து நிற்கிறது.

pics via Pinterest

இப்போது இருக்கக்கூடிய இளம் ஆண்கள் அவர்களுக்கு பிடித்த பைக்குகளை வாங்குவதில்லை, மாறாக பெண்களுக்கு எந்த பைக் பிடிக்குது என தெரிந்து கொண்டு தேர்வு செய்யிறாங்க. முக்கியமா அது ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்காக இருக்க வேண்டியது முக்கியம். உண்மையாகவே இப்போது உள்ள பெண்களுக்கு கெட்ட பசங்களை தான் ரொம்ப பிடிக்குது. ஒழுங்கா வராதா தலைமுடி, கண்ட இடத்தில கலரிங், கை, கால்களில் டாட்டூ, இடுப்பில  நிக்காத ஒரு பேண்ட் முக்கியமாக ஊர் சுற்ற ஒரு நல்ல பைக். இதை வெச்சு நிறைய பசங்க டிக்டாக்கே பண்றங்கன்னா பார்த்துக்கோங்க..

pics via youtube.com

இப்ப நாம இங்க பார்க்கப்போவது  பைக் ரைடர்ஸை இந்த பெண்களுக்கு ஏன் பிடிக்குது என்று தான்.

1. பொதுவாக இந்த ரைடர்கள் எந்த rules ம் மதிக்க மாட்டாங்க, சிக்னல் விழுந்ததோ இல்லையோ முறுக்கிட்டு போயிட்டே இருப்பாங்க. இந்த நேரத்தில பின்னாடி அமர்ந்துள்ள பெண்கள் ( Wooo..... ) ஊஊஊ... என அவங்களோட உற்சாகத்தை வெளிப்படுத்துவங்க.

2. அடுத்ததா பைக்கர்ஸ் நேராக ஒரு ( Bar ) பாருக்கு போவாங்க, கூலாக ஒரு டம்ளர் பீரோ அல்லது விஸ்கியோ வாங்கி அப்படியே கவுத்துவங்க, அதுவும் பைக்கர்சுக்கே உண்டான அந்த லெதர் ஜாக்கெட்டும், கையுறையும் தான் கெத்து.

pics via aljanh.net


3. இந்த பைக்கர்ஸ் பொதுவா எப்பவுமே வெளியில் தான்  சுத்திட்டு இருப்பாங்க, இந்த பொண்ணுகளுக்கு எங்கயாவது போகணும்னு தோணுச்சுனா ஒரு மிசிடுகால் கொடுத்தா போதும், உடனே வந்து கொத்திட்டு போய்டுவாங்க.

4. பைக் ரைடிங் எப்போவுமே கொஞ்சம் ரிஸ்க்கான வேலை தான், எப்படிப்பட்ட சூழ்நிலையையும் எதிர்கொள்ள ஒரு ரைடர் தயாராக இருக்கணும். அதனால் இந்த அணுகுமுறையும் பெண்களை ரொம்பவே கவருதுன்னு சொல்லலாம்.

5. பைக்கர்ஸ் எப்பவுமே ரொம்ப ஜாக்கிரதையா செயல்படனும், கொஞ்சம் கவனம் சிதறினாலும் கை, கால் எலும்பு முறிந்திடும். எனவே வண்டிய கிளப்பும் போது கொஞ்சம் அறிவையும் பயன்படுத்த வேண்டும். அதாவது தெளிவான மனநிலையில்லாமல் நீங்க ஒரு பைக் ரைடராக இருக்க முடியாது.

pics via Bikester Global

pics via TravelTriangle

6. இவங்க எப்பவுமே டெக்ஸ்ட் மெசேஜ்ஜூக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டாங்க. காரணம், அவங்க பைக்கோட சர்வீசுக்கும், வண்டிய ஆல்டர் செய்யவும், அடுத்த சுற்றுப்பயணத்திற்கும் தங்களை தயார் பண்ணிட்டு இருப்பாங்க. இந்த பொண்ணுங்க வந்தா மட்டும் போதும்.

7. இவர்களுடைய வாழ்க்கையில் இறப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். ஆனால் இவர்கள் இதை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். அவர்களுடைய ஒவ்வொரு நொடியையும், வாழ்க்கையுடைய ஒவ்வொரு கணத்தையும் எப்படி அனுபவிக்கிறது என்பது தான் இவர்களுடைய கனவாக இருக்கும். இந்த கனவை அடைய இவர்கள் எத்தகைய ரிஸ்க்கையும் எடுக்க தயாராக இருப்பாங்க.

இத்தகைய வித்தியாசமான வாழ்க்கை அனுபவத்திற்காகத்தான் பெண்கள் பொதுவாக இந்த Road side Romeo களை விரும்புவதாக சொல்றாங்க...

Post a Comment

0 Comments