தகாத உறவு ஏற்பட என்ன காரணம் தெரியுமா??


Why Happen illegal relationship

நாம அடிக்கடி கேள்விப்படக்கூடிய ஒரு விஷயம் தான் இந்த தகாத உறவு. உண்மையை சொன்னா நமக்கு இது கேட்டு கேட்டு புளிச்சு போச்சு என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு இந்த கேவலமான செயல் பரவி காணப்படுகிறது. இது நாம வசிக்க கூடிய இடம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இது போன்ற கேவலம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
pics via iPleaders Blog

நாட்டு நடப்பு, உலக விஷயங்கள் பற்றி நாம் தெரிந்து கொள்கிறமோ இல்லயோ, ஏதாவதொரு செய்தித்தாளில் இதை பற்றி எதாவது தலைப்பு இருந்தால் அதை ஒரு வரி விடாமல் படித்து முடித்து விடுகிறோம். நாளுக்கு நாள் இந்த தகாத உறவு சம்பவங்கள் பெருகிக்கொண்டே போகுதே தவிர குறைந்தபாடில்லை. இத்தகைய குற்றங்கள் நடக்க என்ன காரணம் என்பது பற்றி தான் நாம் இந்த பதிவில் காணப்போகிறோம்.

பொதுவாக இந்த தகாத உறவில் ஈடுபடுவோர் பற்றி பார்த்தால் இளசுகளை விட திருமணம் ஆனவர்களே அதிகள். அது காதல் திருமணமோ, அல்லது பெரியவர்களால் செய்து வைக்கப்பட்ட திருமணமோ....
திருமணம் ஆனவர்கள் இப்படி இதை நாடி செல்கிறார்கள் என்றால் அங்கே ஏதோ ஒரு சிக்கல் இருக்கு என்று தானே அர்த்தம். இங்கே நாம இவர்கள் எந்த வழியில் இதில் போய் சிக்குகிறார்கள் என்பது பற்றி பார்க்கலாம்.

Read More:What Are Indian Girls Mostly Searching For Online??pics via Hotstar

1. அதிகப்படியான தகாத உறவுகள் ஏற்படுவது அதிகபட்சம் பக்கத்துக்குவீடு, எதிர்வீடு  இங்கே வசிக்கறவங்களோடு தான். காரணம் அண்டைவீட்டாளர்களோடு தான் நாம் வசித்து வருகிறோம். ஆணோ, அல்லது பெண்ணோ நிச்சயமாக அவர்களுக்கு நம்முடைய செயல்பாடுகள் பற்றி தெரியும். வீட்டிலுள்ள ஆண்களோ, பெண்களோ இவர்கள் எந்த நேரத்தில் வெளியில் போறாங்க, வர்ராங்க போன்றவற்றை இவர்கள் சரியாக கண்காணித்து விடுகிறார்கள். மேலும், அண்டை வீட்டாரோடு நெருங்கி பழக வாய்ப்பு ஏற்படுது, இப்படி ஏற்படக்கூடிய பழக்க வழக்கங்கள் நாளடைவில் எல்லை தாண்டுகிறது.

2. அடுத்து முக்கியமான ஒன்று நாம வேலைக்கு செல்லக்கூடிய இடம். முக்கியமாக ஆண், பெண் ஒன்றாக வேலை செய்யக்கூடிய இடங்கள். பொதுவாக எல்லோரும் தன் வாழ்நாளில் பள்ளி வாழ்க்கைக்குப்பிறகு அதிக நேரம் செலவிடுவது நாம் வேலை செய்யும் இடங்கள் தான். அதிக நேரம் ஆணும் பெண்ணும் ஒன்றாக வேலை செய்யக்கூடிய இடங்களில் இவர்கள் தங்களது கருத்துக்களை பரிமாறவும், ஒருவர் பற்றி ஒருவர் புரிந்து கொள்ளவும், மேலும் தனிமையில் இருக்கக்கூடிய பல சந்தர்ப்பங்கள் ஏற்படுகிறது. இது போதாதா இவர்களுக்கு அடுத்த கட்டத்துக்கு முன்னேற...

3. அடுத்த அதிர்ஷ்டசாலிகள் யார் என்று பார்த்தால் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள். பணம் சம்பாரிக்க பெண்களை விட்டு விட்டு ஆண்கள் வெளிநாடு சென்று விடுகின்றனர். பொதுவாகவே பெண்களுக்கு ஒரு துணை நிச்சயம் அவசியம். அவங்களுக்கு மருந்து வாங்கவோ, மளிகை சாமான்கள் வாங்கவோ அல்லது அவரச உதவிக்கு எதாவது ஒரு ஆணை நாடி செல்ல வேண்டி உள்ளது. இந்த மாதிரி சூழ்நிலை வரும்போது அவங்க எதார்த்தமா கேட்க இவங்க பதார்த்தமா விட்டுக்கொடுத்திடுறாங்க. திரும்ப வரும்போது இவர்களுக்கு வெறும் திண்ணை மட்டும் தான் பாக்கி....

Read More: Average Age Of Lose Virginity  By Countries
pics via youtube.com

4. அடுத்து இன்னொரு விஷயமிருக்கு இது ரொம்ப கேவலமானது. அதாவது உறவுகளுக்குள்ளேயே தகாத உறவு வைத்துக்கொள்வது. இந்த உறவுகள் பற்றி தெளிவாக பேச விரும்பவில்லை . பொதுவாக உறவு முறைகளில் உள்ள ஆண்களோ, பெண்களோ அவர்கள் உங்கள் வீட்டின் எல்லா மூளைக்கும் போக முடியும், உறவினர் என்பதால் உங்களால் அவ்வளவு சுலபமாக தவிர்க்க முடியாது. எனவே இத்தகைய சூழ்நிலையை அவர்கள் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொள்கின்றனர்.

5. அடுத்து ஒரு முக்கிய நபர் யார் என்று பார்த்தால் நட்பே துணை.... ஆமாங்க, உலகம் முழுவதும் நட்பை பற்றி புகழ்ந்து தள்ளிக்கிட்டு இருக்காங்க. அதே நேரம் இந்த மாதிரி சமாச்சாரங்களில் முதலில் ஆப்பு வைப்பதே இந்த நட்பு வட்டாரங்கள் தான். நீங்கள் படிக்காத நியூஸ் பேப்பரோ, பார்க்காத செய்திகளோ இருக்காது. உங்களுடைய ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறை எடுத்துக்கொள்கிற இந்த நண்பர்கள் தான் அதே அக்கறை உங்கள் வீட்டு பெண்கள் மேலயும் கட்டிடறாங்க. நண்பணாச்சே, எப்படி உங்களால் சந்தேகப்பட முடியும். அங்க தான் இவங்க போடுறாங்க இவங்களோட நங்கூரத்தை ரொம்ப உறுதியாக....

Read More: Impacts of Gay, Lesbian, and Bisexual Communitypics via BBC.com


நாம் இதுவரைக்கும் தகாத உறவு ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் பற்றி பார்த்தோம். இதை தடுப்பதற்கான தீர்வையும் நாமா பார்க்கணும் இல்லையா.

1. பொதுவாக பெண்கள் வழிதவறி போவதே அவங்களுக்கு கிடைக்காத அன்பினாலும், அரவணைப்பினாலும் தான். அதனால நீங்கள் உங்களுடன் வாழும் மனைவி மீது அன்பு செலுத்துங்க. அவர்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்க. அவர்கள் உங்களை நம்பி உங்களுக்காக அவர்களுடைய பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் உறவுகளையும் மேலும் சுதந்திரமான வாழ்க்கையும் தியாகம் செய்திட்டு வராங்க. அதனால், உங்களுடைய அரவணைப்பும் அன்பும் அவர்களுக்கு கண்டிப்பாக தேவை. அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யுங்கள், உங்கள் சக்திக்கு உட்பட்டு. அது உடல் ரீதியான தம்பதியமாகவும் இருக்கலாம், அல்லது வேறு சிலதாகவும் இருக்கலாம்.

2. உங்கள் மனைவி விரும்பக்கூடிய சின்ன சின்ன ஆசைகளை பூர்த்தி செய்யுங்க, அதற்கு பதிலாக  அவர்கள் உங்களுக்காக அவர்களுடைய பெரிய ஆசைகளை விட்டுக்கொடுப்பாங்க.

pics via India TV


3. வாழ்க்கையில் பணம் முக்கியம் தான் அதற்காக அவர்களை வேலைக்கு அனுப்பி அவர்கள் வழி தவிர செல்ல நீங்களே ஒரு வாய்ப்பை கொடுக்காதீங்க.

4.வாழ்க்கையில் பணத்தை விட நிம்மதி ரொம்ப முக்கியம், அதனால் திருமணம் செய்து விட்டு வெளிநாட்டுக்கு போயிடாதீங்க. உங்கள் மனைவி ஒவ்வொரு தேவைக்கும் இன்னொரு ஆணை தேடிப்போக கூடிய வாய்ப்பை ஏற்படுத்தினால் வக்கிர எண்ணம் கொண்ட ஆண்களால் அவங்க கண்டிப்பா தீண்டப்படுவாங்க.
pics via familylawattorneycal.com
pics via HuffPost

5.உங்களுடைய நட்பு வட்டாரத்தை வீட்டுக்கு வெளியே மட்டும் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் மனைவிகளிடம் உரிமை எடுத்து கொள்ளும் வாய்ப்பை யாருக்கும் கொடுக்காதீங்க......

உங்கள் வாழ்க்கையில் நல்லது நடப்பதும், சந்தோசம் கிடைப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது. புத்தி சாலித்தனமாக நடந்து கொண்டால் கண்டிப்பாக உங்களால் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.....

Read More: Stomach Sleeping Making Your Life Is Dangerous

Read More: What Happens When You Eat Expired Food

Read More: Top 6 Benefits and Side Effects Of The Copper - T 

 

 

 


Post a Comment

0 Comments