எகிப்து பற்றி பெரிதும் அறியப்படாத 14 சுவாரசியமான விஷயங்கள்


14 Interesting Facts About Ancient Egypt

உலகில் தோன்றிய தொன்மையான நாகரீகங்களில் எகிப்திய நாகரீகமும் ஒன்று. பிரமிடு, மம்மி, நைல் நதி மற்றும் அங்கு வாழ்ந்த மன்னர்கள் என இன்றளவும் ஒரு பெரிய தீர்க்கப்படாத மர்மங்களுடைய உலகமாக இப்போதும் பார்க்கப்படுகிறது. இப்படி பல மர்மங்களுக்கு சொந்தம் கொண்டாடும் எகிப்து பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பற்றி தான் நாம் இங்கு பார்க்கப்போகிறோம்.

pics via History.com

#1 ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் என் அப்போதே எகிப்தியர்கள் கணித்திருந்தனர், இதை வைத்து தான் நைல் நதியில் ஏற்படும் வெல்ல அபாயத்தை கணக்கீடு செய்தார்கள்.

#2  அந்தக்காலத்தில் எகிப்தில் வாழ்ந்த பெண்களுக்கு சட்டப்படி ஆண்களை விட அதிக முன்னுரிமை வழங்ககப்பட்டிருந்தது. உதாரணமாக அவர்களுக்கென்று தனி சொத்தை பராமரித்துக்கொள்ளலாம், விவாகரத்து, வியாபாரம் என அவர்களுக்கென்று தனி உரிமைகள் இருந்தது. உதாரணமாக அங்கு ஆட்சி செய்த கிளியோபட்ராவை எடுத்துக்கொள்ளலாம்.

pics via Daily Star

pics via Sky News

#3 இங்கே மறைந்த மன்னர்களுக்காக பிரமிடுகள் உருவாக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பிரமிடான கிசா பிரமிடு இங்கே தான் அமைந்துள்ளது. இன்றுவரை இந்த பிரமிடு உருவான விதம் பற்றி அறிவியலால் விளக்க முடியவில்லை. உலகின் பழமையான அதிசயங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இதுவரை இங்கு 130 பிரமிடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

#4 இறப்பிற்கு பிறகு உள்ள மறுவாழ்க்கை மீது இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளதால், மறுவாழ்க்கைக்காக இறந்தவர்களின் உடலை சில இயற்கை ரசாயனங்களை கொண்டு உடல்களை பதப்படுத்தி வைத்தனர். அவற்றை நாம் இப்போது மம்மி என அழைக்கிறோம்.

#5 அந்த காலத்தில் வாழ்ந்த எகிப்தியர்கள் பூனையை பார்த்து பயந்தார்கள். மேலும் பல மக்கள் வீட்டில் வளர்ப்பு பிராணியாக வளர்த்தனர். காரணம் என்னவென்றால் இதனால் வீட்டிற்கு நல்ல சகுனம் என நம்பினர்.

#6 எகிப்திய முன்னோர்கள் பல அறிய கண்டுபிடிப்புகளை இந்த உலகிற்கு வழங்கியுள்ளனர். அதில் முக்கியமாக எழுதுகோல், காகிதம், பூட்டு மற்றும் சாவி. இதை உங்களால் நம்ப முடியாது, உலகில் முதன்முதலில் பற்பசையை ( toothpaste ) பயன்படுத்தியவர்கள் இவர்கள் தான்.

#7 ஆடை அலங்கார பேஷன் உலகின் தாயகமாக எகிப்து பார்க்கப்படுகிறது. எகிப்தின் ஆடை கலாச்சாரம் கிமு.3100 ஆண்டுகள் பழமையானது.

pics via cnn.com

#8 எகிப்து நாட்டின் தலைநகரமான கைரோ தான் ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் இது உலக அளவில் 15 வது மிகப்பெரிய நகரம் ஆகும். இந்த நகரத்தில் 22 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

#9  5 மில்லியனுக்கும் அதிகமான முகநூல் வாசகர்கள் இங்கு இருக்கிறார்கள். இது மேலும் அதிகரித்து வருவதாக புள்ளி விவரம் கூறுகிறது.

#10 கால்பந்து தான் இந்த நாட்டின் மிகவும் பிரபலமான விளையாட்டு, அந்த நாட்டின் முகமது சாலா உலகின் சிறந்த கால்பந்தாட்ட வீரராக அறியப்படுகிறார்.

#11 ஆரம்ப கால எகிப்தில் ஒவ்வொரு நகரத்திற்கும், ஒவ்வொரு கடவுள் வணங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
pics via Egypt Tours Portal

#12 அஸ்வான் என்கிற அணைதான் எகிப்தில் உள்ள அணைகளில் மிகவும் பெரியது. 1902 ல் சிறிய அளவில் நைல் நதிக்கு குறுக்கே கட்டப்பட்டது. நைல் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் சேதமடைந்த இந்த அணை 1960 ல் புதுப்பிக்கும் பணி தொடங்கியது. 1970 ல் திரும்ப பலமாகவும் உயரமாகவும் கட்டப்பட்டது. மேலும் இதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பணியும் கட்டமைக்கப்பட்டது.

#13 எகிப்து மக்களின் தாய்மொழி அரபு, எனினும் இங்கு உள்ள மக்கள் பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழியும் தெரிந்து வைத்துள்ளனர்.

pics via Egypt Travel Link

#14 எகிப்தில் நிலவும் தட்ப வெப்பம் பற்றி பார்த்தால், இங்கு நிறைய பகுதிகள் பாலைவன நிலப்பரப்பாக காணப்படுகிறது. இருந்தும், மத்திய தரைக்கடல் மற்றும் நைல் நதிகள் அருகாமையில் இருப்பதால் ஈரப்பதத்துடன் காணப்படுகிறது. குளிர்காலங்களில் வெப்பம் 14 முதல் 22 டிகிரி இருக்கும், இரவு வேளைகளில் வெப்பம் 11 டிகிரிக்கு கீழ் காணப்படுகிறது.Post a Comment

0 Comments