தழும்புகளை மறைக்க உருவாக்கப்பட்ட டாப் 16 டாட்டூக்கள்

16 Hot Tattoos will Hide Your Scars

 உடம்பில் டாட்டூ போட்டுக்கொள்வது தற்போது ரொம்பவே ஃபேஷனாகிவிட்டது. ஒரு காலத்துல உடம்புல பச்சைகுத்திக்கொள்வது ரொம்பவே ஆச்சர்யமாக பார்க்கப்பட்டது, அப்படியே குத்தினாலும் தனக்கு பிடித்தவர்களின் பெயர்களையோ அல்லது கடவுளின் பெயர்களையோ குத்திக்கொண்டார்கள். அது காலப்போக்கில் மாறிப்போய் உடம்பு முழுவதும் வித்தியாசமான கலரில் ( Body Art ) போட்டுக்கொள்வது சாதாரணமாகிவிட்டது. ஆனால் நாம் இங்கு காணப்போகிறவர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். கொஞ்சம் புத்திசாலியும் கூட.

pics via Tattoo-Models.net

இவர்கள் வெறுமனே உடம்பில் பச்சைகுத்திக்கொள்ளாமல் அதிலும் ஒரு புதுமையாய் கையாண்டுள்ளனர். நிறைய பேருக்கு உடம்பில் நிறைய தழும்புகள் இருக்கும் அல்லது ஏதாவது உடல் சார்ந்த ஏதாவது அலர்ஜி தொற்று இருக்கும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இதை சரிசெய்ய முடியாமலும், மறைக்க முடியாமலும் தவிக்கின்றனர். அப்படிப்பட்ட சில பேர் தான் இங்கே அசத்தியிருக்காங்க. அது எப்படி என்று நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

1. Scar on Chest
pics via My hobby world

ஏற்கனவே இவருடைய நெஞ்சை பிளந்து எதோ ஒரு அறுவை சிகிச்சை நடந்திருக்கும் போல..  நெஞ்சில் அவ்வளவு பெரிய தழும்பு இருக்கு. அதை மேட்ச் பண்ணுவது போல் சர்ஜரி செய்வது போலவே ஒரு டாட்டூவை நெஞ்சில் போட்டிருக்கிறார். ரொம்ப சரியாக பொருந்திடுச்சு இல்லையா ....

2. Tattoo on Leg

pics via My hobby world

பாவம் இவருக்கு ஏற்கனவே ஓரு பெரிய சர்ஜரி காலில் செய்யப்பட்டுள்ளது. இந்த சர்ஜரியில் இவருடைய காலில் இருந்து தசைகள் எடுக்கப்பட்டுள்ளது பார்க்கும் போதே தெரிகிறது. அந்த இடத்தை மறைக்க சுறா மீன் வாயை பிளந்தது போல ஒரு டாட்டூவை போட்டு அதை அழகா மாத்திட்டாங்க. பார்க்கவே சூப்பரா இருக்கு இல்லையா... 

3. Tattoo on Left Chest

pics via My hobby world

இவருக்கு இடது நெஞ்சில் ஒரு தழும்பு காணப்படுகிறது. கவச உடையில் கடலுக்கு அடியில் நீந்துபவர்கள் ஏதோ வெல்டிங் வைப்பதுபோல் அருமையா டாட்டூ போட்டுள்ளார்.

4. Tattoo on girl's lest shoulder
pics via My hobby world

இந்த பெண்ணிற்கு இடது தோல்பட்டையில் ஏதோ தேமல் போல நோய் தொற்று உள்ளது. ஒரு டம்ளரிலிருந்து ஒயின் கொட்டுவது போல கட்சிதமாக ஒரு டாட்டூவை போட்டிருக்கிறார்.

5. Black spot on hand
pics via My hobby world

இந்த பெண்ணிற்கு கையில் காயங்கள் மறைந்த கரும்புள்ளிகள் உள்ளது. அவர் இந்த கரும்புள்ளியை சுற்றி பூக்களை வரைந்து அதை மறைத்து விட்டார். மொத்தத்தில் புள்ளி வைத்து கோலம் போடுவது போல...

6. Tattoo on left leg
pics via My hobby world

இவரு எங்க போய் என்ன பண்ணினார் என்று தெரியலை, காலுடைய மேல் பாதத்தில் ஒரு வெட்டு தழும்பு உள்ளது, கிழிந்த பையை நூலைக்கொண்டு தைப்பது போல் டாட்டூ போட்டு அதை மறைத்துள்ளார்.

7. Scar on back neck
pics via My hobby world

இந்த பெண்ணுடைய பின் கழுத்தில் ஒரு தையல் போட்ட தழும்பு உள்ளது. இதை மறைக்க இவங்க ரொம்ப அழகா ஒரு டாட்டூ போட்டிருக்காங்க. அதாவது ஜிப் போட்டு அதை மூடுவது போல் புத்திசாலித்தனமாக இந்த டாட்டூவை போட்டிருக்காங்க.

8. Scar on left leg
pics via My hobby world

இவருடைய கணுக்கால் பகுதியில் நீளமான ஒரு சர்ஜரி தழும்பு காணப்படுகிறது. இதை மறைக்க முள்ளு நீக்கிய மீன் போல ஒரு சிறப்பான டாட்டூவை இந்த லேடி அவங்களுடைய காலில் போட்டிருக்காங்க.

9. Big scar on leg
pics via My hobby world

இவருடைய காலில் பெரிய சைசில் ஒரு தழும்பு இருக்கு, அதை மேட்ச் பண்ண அதே சைசில் ஒரு ஆமையுடைய டாட்டூவை வரைந்து மேட்ச் பண்ணியிருக்காங்க.

10. Scar on thigh
pics via My hobby world

தொடையில் கத்தியில் வெட்டுனமாதிரி ஒரு தழும்பு இவருக்கு காணப்படுகிறது. அதே காயம் ஒரு ரம்பத்தால் அறுத்து ஏற்பட்ட மாதிரி பெரிய பில்டப்போட இந்த டாட்டூவை இவரு போட்டிருக்கிறாரு...

11.  Abrasive scar on hand
pics via My hobby world

இந்த பெண்ணுடைய கையில் ஒரு பெரிய சிராய்ப்பு காயம் உள்ளது. இந்த இடத்தில ஒரு டிராகனை வரைந்து அதனுடைய வாயில் இருந்து நெருப்பு கக்குவது போல ஒரு டாட்டூவை போட்டு அந்த தழும்பை மறைச்சுட்டாங்க...  ரொம்பவே யோசித்திருக்காங்க போல...

12. Big black spot on leg
pics via My hobby world

இவங்களோட காலில் ஒரு படர்ந்த கரும்புள்ளி காணப்படுகிறது. இயற்கையாகவே இந்த பெரிய புள்ளி ஒரு பேய்க்கு கார்ட்டூன் வரைந்த மாதிரி இருப்பதால் மூன்று புள்ளியை வைத்து டாட்டூவை சிம்பிளா முடிச்சிட்டாங்க

13.  Scar like quarter noon
pics via My hobby world

இந்த அம்மணிக்கு பிறையை அடையாளப்படுத்துவது போல் ஒரு தழும்பு முதுகில் உள்ளது. அரைகுறையாக இருந்த பிறையை முழுதாக வரைந்து அதன் மேல் ஒருவன் உட்கார்ந்து தூண்டில் போடுது போல சிறப்பாக இந்த டாட்டூவை முடிச்சிட்டாங்க

14. Big straight scar on hand
pics via My hobby world

இந்த பொண்ணு ஏதாவது தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுதான்னு தெரியல, அவ்வளவு பெரிய ஒரு வெட்டு தழும்பு இந்த பொண்ணோட கையில் காணப்படுகிறது. இதை அப்படியே உல்ட்டா பண்ணி ஒரு ஏலியன் விமானத்திலிருந்து ஒரு பொண்ணு கீழ இறங்குவது போல ரொம்ப அழகா மேட்ச் பண்ணிட்டாங்க.

15. Scar like S - bend
pics via My hobby world

மலைப்பாதையில் வருவது போல S வடிவில் இவரோட கையில் யாரோ பெருசா போட்டிருக்காங்க. அந்த தழும்பை அப்படியே மரக்கிளையாக மாற்றி அதன் மேல் ஒரு குருவியை நிறுத்தி ரொம்ப எளிமையா இந்த டாட்டூவை முடிச்சிட்டாங்க.

16. Scar on Toe joint
pics via My hobby world

தம்பி எங்க முட்டி போட்டு விழுந்தாருன்னு தெரியவில்லை, ஒரு காலில் மட்டும் தழும்பு வங்கியிருக்கிறாரு. அதற்கு ஜோடியாக அப்படியே இன்னொரு காலிலேயும் அதே போல ஒரு டாட்டூவை போட்டு சிறப்பாக பண்ணிட்டாரு...

குறிப்பு :

நாம் கண்டிப்பாக இந்த டாட்டூ போடக்கூடிய வேலையை ஆதரிக்க மாட்டோம், காரணம் இது உங்களுக்கு ஆரோக்கியமானது கிடையாது. மாறாக, அந்த டாட்டூவை புத்திசாலித்தனமாக பயன்படுத்தியதை சுட்டிக்காட்டத்தான் இந்த பதிவு    Post a Comment

0 Comments