5 Bodybuilders Who Died in Young Age
பாடிபில்டிங் துறைக்கு உலகம் முழுவதும் ரசிகர் இருக்காங்க, இந்திய உட்பட. தமிழ் திரை உலகின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரே தன்னுடைய திரைப்பட அறிமுக விழாவில் பாடிபில்டிங் ஜாம்பவானான ஆர்னால்டை அழைத்து வந்து பெருமைப்படுத்தி உள்ளார். அந்த அளவிற்கு இந்த பாடிபில்டிங் கலை மீது பலருக்கும் ஒரு காதல் இருக்கு. பல கவர்ச்சியான பாடிபில்டர்சை தெரியும் நமக்கு இளம் வயதிலேயே மரணம் அடைந்த புகழ் பெற்ற பாடிபில்டர்கள் பற்றி அவ்வளவாக தெரியவில்லை. அப்படி, இளம் வயதில் மரணம் அடைந்த பாடிபில்டர்கள் பற்றி தான் நாம் இந்த பதிவில் காணப்போகிறோம்.1. Dallas McCarver (Died Age 26)
![]() |
pics via International Business Times |
![]() |
pics via Evolution of Bodybuilding |
இவர் இந்த துறைக்கு சிறு வயதிலேயே நுழைந்து விட்டார். 2012 முதல் 2015 வரை நடைபெற்ற முக்கிய IFBB போட்டிகளில் மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். மேலும், 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ்டர் ஒலிம்பியா ( Mr. Olympia ) போட்டியில் 8 ஆவது இடத்தை கைப்பற்றினார். 2017 ல் நடைபெற்ற அர்னால்டு கிளாசிக் போட்டியின் போது ரொம்பவே தடுமாறிய நிலையில் இவர் காணப்பட்டார். பிறகு, இவர் மேல் சுவாச பிரச்சினையினால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். 2017, ஆகஸ்ட் 22 ஆம் தேதி இவர் தன்னுடைய வீட்டில் மயங்கிய நிலையில் தரையில் கிடந்தார், இவர் அருகே உணவுகள் சிதறிக்கிடந்தது.
சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது இவர் நள்ளிரவு 1.00 அளவில் இறந்து விட்டதாக தெரிய வந்தது. பிரேத பரிசோதனையில் இவருடைய நுரையீரல் மற்றும் சிறுநீரகங்கள் தைராய்டு பிரச்னையால் பெரிய அளவில் பாதிப்படைந்தது தெரிய வந்தது. இவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு chest pressing எனப்படும் உடற்பயிற்சியை செய்து அதை இன்ஸ்டாங்கிரமில் பதிவிட்டது தெரிய வந்தது. அளவுக்கு அதிகமான ஸ்டெராய்டு எடுத்து கொண்டதே இவரது மரணத்திற்கு காரணம் என கூறப்படுகிறது. இறக்கும் போது இவருக்கு வயது 26.
2. Daniele Seccarecci (Died Age 33)
![]() |
pics via pinterest.ca |
![]() |
pics via Steroid Analysis |
Daniele Seccarecci, 1980 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இத்தாலியில் உள்ள துஸ்கணியில் ( Tuscany ) பிறந்தவர். தனது 26 ஆவது வயதில் இந்த துறைக்குள் நுழைந்த இவர் 2006 ஆம் ஆண்டு Mr. Olympia ன் தகுதி சுற்று வரை முன்னேறினார். யுரோப்பின் உயர் தர வரிசையில் இருந்த இவர் ஒரு கின்னஸ் சாதனையாளரும் கூட. 21.65 இன்ச் கொண்ட மிகப்பெரிய கைகளுக்காக இவர் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். 2011 ல் சட்டத்திற்கு புறம்பாக ஸ்டெராய்டு விற்றதாக கைது செய்யப்பட்டார்.
2013, செப்டம்பர் 3 ஆம் தேதி கடுமையான தலைவலியால் அவதிப்பட்ட இவர் அடுத்த நாள் மரணமடைந்தார். இவரை பரிசோதித்த மருத்துவர்கள், இவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
3. Nasser El Sonbaty (Died Age 47)
![]() |
pics via Muscle Insider |
![]() |
pics via
|
Nasser El Sonbaty, 1965 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ல் பிறந்தவர். இவர் எகிப்து நாட்டின் மிகப்பிரபலமான பாடிபில்டர்ராக அறியப்படுபவர். தனது 17 வது வயதிலேயே இந்த துறையில் நுழைந்த இவர், 1983ல் தொழில் முறை பாடிபில்டர்ராக அறிமுகம் ஆனார். இவர் கலந்து கொண்ட முதல் Mr.Olympia போட்டியிலேயே 7 வது இடத்தை பிடித்தார். இவர் மொத்தம் 10 முறை Mr.Olympia போட்டியில் கலந்து கொண்டார், இதில் இவர் 1997 ஆம் ஆண்டு 2வது இடம் பிடித்ததே இவரது சிறந்த வெற்றியாக இருந்தது. பெரும்பாலும் இவர் " Uncrowned Mr. Olympia " என அறியப்பட்டார் என்றே சொல்லலாம். இவரது வாழ்வின் சிறந்த தருணமாக இருந்தது, 1997 ல் நடந்த அர்னால்டு கிளாசிக் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதாகும். ஒரு தொற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சையின் போது பல அறுவை சிகிச்சைகள் இவருக்கு செய்யப்பட்டது. இறுதியாக இவருக்கு மாற்று இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் இவருக்கு பொருத்தமான மாற்று இதயம் கிடைக்காததால், தன்னுடைய இறுதி நாட்களை எகிப்தில் தன்னுடைய குடும்பத்துடன் கழிக்க முடிவு செய்தார். சிறுநீரகம் மற்றும் இதயம் செயலிழந்ததால் உறக்கத்திலேயே இவர் மரணம் அடைந்தார். இவர் இறக்கும் போது இவருக்கு வயது 47.
4. Andreas Münzer (Died Age 31)
![]() |
pics via Find A Grave |
![]() |
pics via MensXP.com |
இவர் ஆஸ்திரியாவை சேர்ந்த தொழில்முறை பாடிபில்டர். மிகவும் கவர்ச்சியான பாடிபில்டர்ராக அறியப்படும் இவர் 1986 முதல் தனது பயணத்தை தொடர்ந்தார். 1989 க்கு பிறகு ஹெவிவெயிட் பிரிவுக்கு மாறிய இவர் புகழ் பெற்ற மிஸ்டர் ஒலிம்பியா மற்றும் அர்னால்டு கிளாசிக் போன்ற போட்டிகளில் பல முறை பங்கேற்றார். 1996 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி இவருக்கு வயிற்றின் உள்பகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டது. இந்த இரத்தக்கசிவு மருத்துவர்களால் சரிசெய்யப்பட்டாலும் சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பழுதடைந்ததால் இவர் மார்ச் 14 ஆம் தேதி உயிரிழந்தார். இவரது மறையு இந்த துறையை சார்ந்தவர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர் மரணிக்கும் போது இவருக்கு வயது வெறும் 31 மட்டுமே.
5. Rich Piana (Died Age 46)
![]() |
pics via Generation Iron |
![]() |
pics via youtube.com |
இவர் அமெரிக்காவை சேர்ந்த மிகவும் பிரபலமான பாடிபில்டர் மற்றும் பிரபல நட்சத்திரமாகவும் அறியப்படுகிறார். மேலும் இவர் ஒரு தொழிலதிபரும் கூட. 1989 ல் Mr. Teen California ஆக தேர்ந்தெடுக்கப்படுகிறார். IFBB உடைய Mr.California ஆக 1998ல் பட்டம் வென்றார். பிறகு National Physique Committee நடத்திய பாடிபில்டிங் போட்டியில் 2003 மற்றும் 2009 ல் வெற்றி பெற்றார். இவர் சொந்தமாக 5% Nutrition என்ற நியூட்ரிஷன் உணவை அறிமுகம் செய்தார். பாடிபில்டிங் துறையில் இவரது பங்களிப்பும், இவரது அணுகுமுறையும் பல பேரை கவர்ந்தது. இவரது வாழ்கை பயணமும், கடின உழைப்பும் பல பேருக்கு உந்து சக்தியாக இருந்தது. பல youtube சேனல்களில் இவரது விடியோக்கள் அதிகமாக பார்க்கப்பட்டது.
ஆகஸ்ட் 17, 2017 ஆம் ஆண்டு வீட்டில் இருக்கும் போது இவரது உடல் நலம் பாதிப்படைந்தது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் இரண்டு வாரம் கோமாவில் இருந்து பின்பு மரணம் அடைந்தார். மருத்துவ பரிசோதனையில் அதிகப்படியான ஸ்டெராய்டு மருந்துகளும், போதை மருந்துகளும் இவரின் இதயம் செயலிழக்க காரணமாக இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இறக்கும் போது Rich Piana ன் வயது 46.
0 Comments