5 Unresolved Mysterious Places In The World
உலகத்தில் இன்னும் தீர்க்கப்படாத பல மர்மங்கள் காணப்படுகிறது. இதை அறிவியலும், விஞ்ஞானமும் இன்னும் ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறது, இன்று வரை நாம் இதற்கு சரியான விளக்கத்தை இவர்களிடம் எதிர்பார்க்கிறோம்.அப்படி தீர்க்கப்படாத 5 மர்மமான நிகழ்வுகளை பற்றி தான் நாம் இந்த பதிவில் காணப்போகிறோம்.
1. Bigfoot
![]() |
pics via The Daily Beast |
![]() |
pics via New York Post |
வடஅமெரிக்காவில் Bigfoot எனப்படும் மிகப்பெரிய ஒரு ஜந்து வாழ்வதாகவும், அது பார்க்க மிக பிரம்மாண்டமாக உடல் முழுவதும் ரோமங்களுடன், பார்க்க ஒரு கொரில்லா குரங்கை போல இருக்கும் என்றும், அது இப்போதும் வாழ்வதாகவும் ஒரு நம்பிக்கை இருந்து வருகிறது.
கண்டறியப்பட்ட Bigfoot உடைய காலடித்தடம் 24 இன்ச் இருந்துள்ளது, இதை வைத்து இந்த creature 6 முதல் 9 அடி உயரம் இருக்கலாம் என நம்பப்படுகிறது. இது ஒரு காலடி தடத்தை வைத்து உருவாக்கப்பட்ட யூகமே தவிர ஆதாரப்பூர்வமாக இது வரை நிரூபிக்கப்படவில்லை. இந்த காலத்தில் வாழும் சில ஆய்வாளர்கள் அது ஓர் வளர்ந்த பிரௌன் கரடியின் காலடி தடமாக கூட இருக்கலாம் என்று கூறுகின்றனர். இது நிரூபிக்கப்பட்டதோ, இல்லையோ ஆனால் இதை வைத்து நிறைய கதைகள் மற்றும் டிவி நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டு விட்டது. இன்று வரை இந்த Bigfoot தீர்க்கப்படாத ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது.
2. Kryptos
![]() |
pics via Amusing Planet |
Kryptos என்பது அமெரிக்காவை சேர்ந்த பிரபல சிற்பியால் 1990 ல் உருவாக்கப்பட்ட ஒரு நவீன சிற்பம். இது வெர்ஜினியாவுடைய உளவுத்துறை பிரிவான Central Intelligence Agency அதாவது (CIA) அலுவலக கட்டிடத்தின் முன் நிறுவப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் விசேஷம் என்ன என்றால் இந்த சிற்பத்தில் நான்கு தகவல்கள் கோடிங் முறையில் encrypted செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கில் மூன்று புதிர்கள் தீர்க்கப்பட்டு அதில் உள்ள தகவல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், நான்காவது புதிரை இன்று வரை யாராலும் தீர்க்கப்படவில்லை. இன்னும் உலக அளவில் தீர்க்கப்படாத unsolved codes ஆக இந்த சிற்பம் இதுவரை இருந்துவருகிறது. மேலும் இதற்கான தீர்வை கண்டுபிடிக்க அந்த கலைஞர் ஏற்கனவே 2 தடயங்களை கொடுத்து உள்ளார். இந்த தடயங்கள் இதை விட குழப்பமாக இருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.
3. Voynich Manuscript
![]() |
pics via Facsimile Finder |
![]() |
pics via Daily Express |
இது 15 ஆம் நூற்றாண்டில் கையால் எழுதப்பட்ட ஓர் புத்தகம். இந்த புத்தகத்தில் ஒரு வித்தியாசமான மையை பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தின் தாயகம் இத்தாலியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. பிறகு இந்த நூல் 1912 ல் Wilfrid Voynich, என்பவரால் வாங்கப்பட்டது. இவர் உலகத்தில் உள்ள மிகவும் அரிதான புத்தகங்களை சேகரிக்கக்கூடியவர். இதில் சில பக்கங்கள் தவறி உள்ளது, அதுபோக இன்னும் 240 பக்கங்கள் இந்த புத்தகத்தில் உள்ளது. இந்த புத்தகம் இடதுதிலிருந்து வலதாக எழுதப்பட்டுள்ளது. மேலும் எடுத்துக்காட்டாக நிறைய படங்கள் வரையப்பட்டுள்ளது.
பல தலைப்பின் கீழ் பல தகவல்கள் இந்த புத்தகத்தில் தரப்பட்டுள்ளது, ஆனால் இது எழுதப்பட்ட மொழியை பற்றி யாருக்கும் தெரியாதலால் இன்னும் இது மர்மமாகவே பார்க்கப்படுகிறது. இதில் கொடுக்கப்பட்டுள்ள படங்களை கொண்டே குறிப்பிட்ட விஷயம் பற்றி இந்த நூல் கூறுகிறது என்று அறிஞர்கள் யூகிக்கின்றனர்.
அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷை சேர்ந்த பல codebreakers இந்த புத்தகத்தை விளக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், இதுவரையும் ஒருவரால் கூட இந்த புத்தகத்திற்கு விளக்கம் தர முடியவில்லை. இதன் காரணமாக இந்த புத்தகத்தின் மர்மம் இன்னும் அவிழ்க்கப்படாத ஒன்றாக உள்ளது.
4. Stonehenge
![]() |
pics via GetYourGuide |
![]() |
pics via Wired |
தென் கிழக்கு இங்கிலாந்தின், Wiltshire என்ற இடத்திலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். வரலாற்றுக்கு முந்தய நினைவுச்சின்னமாக விளங்குகிறது, இந்த பிரம்மாண்டமான கற்களால் அமைந்த நினைவுச்சின்னம். நிற்கின்ற இரு பெரிய கற்களும் 13 அடி உயரம் இருக்கும், மேலே 7 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட கல் படுக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய இந்த கற்கள் 25 டன் இருக்கும். ஆய்வாளர்கள் இந்த கட்டமைப்பின் வயதை கணக்கிடும்போது கி.மு. 2000 முதல் 3000 இருக்கலாம் என நம்புகின்றனர். அந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இந்த கட்டமைப்பை எப்படி உருவாக்கினார்கள் என்பது இன்னும் விளங்காத மர்மமாக உள்ளது.
5. The Taos Hum
![]() |
pics via Mysterious Monsters |
![]() |
pics via Sporcle |
மெக்சிகோவில் உள்ள ஒரு சிறிய நகரம் தான் இந்த Taos Hum. இந்த சிறிய கிராமத்தில் அடிவானத்தில் ஒரு வினோதமான சப்தத்தை கேட்க முடிகிறது. அதாவது தூரத்தில் ஒரு டீசல் என்ஜின் இயங்குவது போல. இதை வெறும் காதுகளில் கேட்க முடிகிறதே தவிர சப்தத்தை உணரக்கூடிய வேறு எந்த கருவிகளிலும் இதை பதிவு செய்ய முடிவதில்லை. அங்கே அருகில் வசிக்கக்கூடிய மக்கள் இதை உணருகிறார்கள். திறந்த வெளியில் உள்ளதை விட வீட்டினுள் இது அதிகமாக கேட்பதாக சொல்கின்றனர். ஒலி அதிவெண்களை ( frequency ) ஆய்வு செய்யும் பலரும் இதை ஆராய்ந்து விட்டனர், இருந்தும் இந்த சப்தம் எப்படி வருகிறது, எங்கிருந்து வருகிறது என்பது இன்னும் விடை கிடைக்காத மர்மமாக உள்ளது. மேலும் இந்த சப்தம் இடையூறாக இருப்பதாகவும் மக்களால் அரசிடம் முறையிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தலைவலி, மனஅழுத்தம் மற்றும் சில பேருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகிறது. இதற்காகவே சில பேர் மாத்திரையின் உதவியை நாடி உள்ளனர். இந்த சிறிய நகரத்தில் இந்த சப்தம் இன்னும் ஓர் தீர்க்கப்படாத மர்மமாக உள்ளது.
2 Comments
nice info bro
ReplyDeletethank you Brother...
Delete