நம்மை அலற வைக்கும் 5 வினோதமான விளையாட்டுகள்

5 Weried Games In The World

 விளையாடுவது உடலுக்கும், மனதிற்கும் ரொம்ப நல்லது. உலகம் முழுவதும் விளையாட்டுகள் ஊக்கப்படுத்தப்படுகிறது. நாட்டிற்கு நாடு மக்களுடைய ரசனைக்கு ஏற்ப விளையாட்டுகள் மாறுபடுகிறது. அப்படி உலகின் மிகவும் வினோதமான, ஆபத்தான 5 விளையாட்டுகளை பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

1. slapping sport

pics via The Moscow Times
pics via Maxim

ரஷ்யாவுடைய  மாஸ்கோவில் கடந்த ஆண்டு ஒரு வினோதமான விளையாட்டு நடத்தப்பட்டது. WWE, UFC போன்ற மல்யுத்த போட்டிகளை பாத்திருப்பீங்க. ஆனால் இந்த போட்டி கொஞ்சம் வித்தியாசமானது. இதில் நீங்கள் உதைக்கவோ, குத்தவோ அனுமதி கிடையாது. கன்னத்தில் அறைய மட்டும் தான் அனுமதி. அதுவும் எப்படி வேண்டுமானாலும் அறைந்து கொள்ளலாம், அது தான் இந்த போட்டியின் சிறப்பு. கன்னத்தில் அறைந்தே உங்கள் எதிரியை வீழ்த்த வேண்டும், இது தான் நிபந்தனை.

உங்களுக்கு இதை கேட்க வினோதமாக இருந்தாலும் ரஷ்யாவில் ஒரு சாம்பியன்ஷிப் போட்டியே நடத்தி விட்டார்கள். பார்க்க ஜாலியாக இருந்தாலும், இது சாதாரண விஷயமல்ல. இங்கு நடந்த போட்டியில் ஒரு அடியில் சாய்ந்தவர்களும் உண்டு, சுய நினைவை இழந்தவர்களும் உண்டு. தயவு செய்து இதை நீங்கள் வீட்டில் முயற்சி செய்திட வேண்டாம்.
கடந்த ஆண்டு சாம்பியன்ஷிப்பில் வென்றவருக்கு அந்த நாட்டு மதிப்பில் 30,000 ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது.  ஓங்கி அடிச்சா ஒன்ரை டன் வைட்டு என்ற டயலாக் இந்த போட்டிக்கு நன்றாகவே பொருந்தும்.

2. Road Street Luge
pics via Sports On Call
pics via maryhillwindwalk.com

 skateboarding போலவே வடிவமைக்கப்பட்ட ஒன்று தான் இந்த Luge. புவியீர்ப்பு விசையை அடிப்படையாக கொண்டு விளையாடப்படும் ஒரு விளையாட்டு தான் இந்த Street luge. இதன் மீது சாய்வாக படுத்த நிலையில் போட்டியாளர்கள் இந்த போர்டில் வேகமாக செல்வார்கள். வழக்கமான கார், பைக் பந்தய போட்டிகள் நடப்பது போலவே இந்த போட்டிக்கும் நீளமான சாலைகள் போடப்பட்டுள்ளது. இந்த போர்டில் பறக்கும் இவர்கள் எட்டும் வேகம் எவ்வளவு தெரியுமா? அதிகபட்சம் 110 முதல் 164 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த போட்டியாளர்கள் பயணிக்கிறார்கள். தற்போது இந்த போட்டிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

3. Wife Carrying
pics via Reddit
pics via The Denver Post

இது கிட்டத்தட்ட ஒரு தடகள போட்டி போல இருக்கும். இந்த விளையாட்டின் சிறப்பு என்ன என்றால் அந்த ஆண் தன்னுடன் விளையாடும் சக பெண்ணை அதாவது அவருடைய துணைவியை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும். நிஜமாகவே இது தான் இந்த விளையாட்டுடைய விதிமுறை. பின்லாந்தில் ( Finland ) தான் இந்த விளையாட்டு போட்டி முதலில் ஆரம்பிக்கப்பட்டது. 1992 முதல் இந்த விளையாட்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டிகளும் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியுடைய விதிமுறை என்று பார்த்தால் 253 மீட்டர் நீளத்தை இந்த போட்டியில் நீங்கள் கடக்க வேண்டும். இதில் நீரால் நிரப்பப்பட்ட ஒரு தாண்டுதலம் இருக்கும், அதையும் கடக்க வேண்டும். இதில் கலந்து கொள்ளும் பெண் குறைந்தது 49 கிலோ இருக்க வேண்டும். தலையில் ஹெல்மெட் அணிய மட்டும் அனுமதி உண்டு. விளையாட்டின் போது அவர்களை அவர்களே தான் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். போட்டியின் போது சில சமயங்களில் கால் இடறி கீழே விழும் சம்பவமும் அடிக்கடி நடக்கும். ஒரு வேளை பார்ட்னர் மேலே உள்ள வெறுப்பை இப்படி காட்டினாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

4. What in side the box
pics via YouTube

இந்த விளையாட்டு போட்டி பல டிவி ஷோக்களிலும், யுடியூப் சேனல்களிலும் பிரபலம் அடைந்து வருகிறது. போட்டியின் விதிப்படி மறைக்கப்பட்ட பெட்டியினுள் கை உள்ளே நுழையும் அளவிற்கு இரண்டு துளைகள் போடப்பட்டிருக்கும். இந்த பெட்டிக்குள் இருக்கும் பொருட்களை பார்க்காமல் தொட்டு பார்த்தே கண்டு பிடிக்க வேண்டும். ஆனால், விளையாட்டின் சுவாரசியத்தை கூட்டுவதற்காக இந்த பெட்டிக்குள் பெரிய மலைபாம்பு, உடும்பு, ஆமை மற்றும் சிலந்தி போன்ற நம்மை பயமுறுத்தும் விலங்குகளை இந்த பெட்டியினுள் வைத்து விடுகின்றனர். ஏதோ வேறு ஏதாவது பொருளை கொண்டு விளையாடும் போது பிரச்சனை கிடையாது. ஆனால், கேளிக்கைக்காக கொடூர விலங்குகளை பயன்படுத்தும் போது தான் இது ஆபத்தானதாக மாறிவிடுகிறது.

5. Toe wrestling
pics via Dunya News
pics via Dunya News

நாம் காணப்போகும் இன்னொரு வித்தியாசமான விளையாட்டு தான் இந்த Toe wrestling, அதாவது உங்கள் காலால் மட்டும் மல்யுத்தம் செய்வது. முழு காலையும் பயன்படுத்த முடியாது, உங்களுடைய கால் கட்டை விரலை மட்டும் பயன்படுத்தி. இந்த போட்டிக்கு கால வரையறை கிடையாது. போட்டி ஆரம்பிக்கும் முன் இரு வீரர்களும் தங்கள் காலில் அணிந்துள்ள காலணியோ அல்லது ஷூவோ, அதை கழட்டி விட வேண்டும், காலுறையும் இருக்க கூடாது. இதில் மூன்று சுற்றுக்கள் நடத்தப்படுகிறது. அதிகபட்சம் இரண்டு சுற்றுகளில் முன்னிலை பெறுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதில் வருடந்தோறும் சாம்பியன்ஷிப் போட்டிகளும் நடைபெறுகிறது.

Post a Comment

1 Comments